Translate

8/23/2009

எனக்குப் பிடித்த நடிகைகள் - லக்ஷ்மி

Sunday, 23 August 2009


எனக்குப் பிடித்த நடிகைகளின் வரிசையில் லக்ஷ்மி அவர்களைப் பற்றியும் அவரது திறைமைகள் பற்றியும் நான் சொல்லி தெரியவேண்டிய அவசியம் கிடையாது என்றாலும் இவர் நடிப்பை புகழாமல் நான் விட்டுவிட்டால் எனது ரசிப்புத் தன்மைக்குத் தகுதியில்லை என்பது புலனாகிவிடும்,

இவரிடம் நான் கண்ட பல தகுதிகளில் முதலில் இவரது அழகும் அதற்கேற்றார்
போன்ற உடலமைப்பும் அளவுக்கு அதிகமான நடிப்புத் திறமையும் கொண்டவர், இவரது இளமை காலத்து திரைப்படங்களை பார்த்தால் இவருக்கு இருக்கும் சுறுசுறுப்பு இன்றும் மாறாமல் இருப்பது இவரது ப்ளஸ். நடிப்பு என்பது இவரது ரத்தத்திலேயே இருந்தாலும், இவரது நடிப்பை புகழ வார்த்தைகளே இல்லை.

சிலர் ஏற்று நடிக்கத்தயங்கும் கதா பாத்திரங்களைக் கூட தைரியமாக ஏற்று நடித்த
இவரது தைரியம் தன்னம்பிக்கை ஆகியவற்றை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அதற்க்கு உதாரணம், சிறை என்ற இவரது திரைப்படம். லக்ஷ்மி நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அதில் சிறந்த கதையம்சமிருக்கும் என்று நம்பி நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம். இவருடன் நடிப்பவரின் நடிப்பு என்னதான் சிறப்பாக இருந்தாலும் இவர் நடிப்பு தாமரையிலை மீது தண்ணீர் போல தனியாக அழகாக எடுப்பாக இருக்கும்.

இவர் நடித்து பெரும்பாலான திரைப்படங்களை [தமிழில் மொழியில் மட்டும்]
நான் பார்த்திருக்கிறேன், இவரது திருமணத்திற்குப் பின் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இவர் நடிப்பில் வெளிவந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படம் காலம் சென்ற திரு பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்தது, ஏற்கனவே கதை நூலாக வெளிவந்து பிரபலம் அடைந்திருந்தாலும் அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து நடித்திருக்கும், கதாநாயகியை மையமாகக் கொண்ட திரைப்படம் அபாரமானது. அந்த திரைப்படத்தில் நடித்திருந்த அத்தனை கலைஞர்களும் அபாரமாக நடித்திருப்பார்கள், அதில் லக்ஷ்மியின் நடிப்பை பற்றி சொல்லவும் வேண்டுமோ



இவரது ஹிந்தி திரைப்படம் 'ஜூலி' சிறந்த நடிகைக்கான தேசியவிருதை பெற்றுத்தந்தது. அந்த கதாபாத்திரத்தை அந்த திரைப்படம் உருவாகிய கால கட்டத்தில், வேறு நடிகைகள் அத்தனை தைரியமாக ஏற்று நடித்திருபார்களா என்பது சந்தேகமே.

அவரது இளம் வயதுக்கேற்ற கதாபாத்திரம், அந்த திரைப்படத்தில் இவரது முகத்தில்
'இன்னொசென்ஸ்' தான் பார்க்க முடியும், அதில் அவர் நடிக்கவே செய்திருக்க மாட்டார். அந்த கதாபாத்திரத்திற்கு அதுதான் அவசியமாக இருந்தது, இதனால் இவர் 'ஜூலி' திரைப்படத்திற்கு விருதை பெற்றுக் கொண்டார்.

இவரது நடிப்பு, இவரது அழகு இரண்டையுமே நான் வியந்து ரசிப்பது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.