Translate

8/21/2009

எனக்குப் பிடித்த நடிகைகள் - கே. ஆர். விஜயா


நடிகை கே.ஆர்.விஜயாவின் நடிப்பு பிடிக்கும் என்று சொல்வதைவிட அவரது அழகு பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலத் தோன்றக்கூடியது என்பதால் அவர் நடித்த பல திரைப்படங்களை நான் பார்த்து ரசித்து இருக்கிறேன்,

புன்னகையரசி
என்ற பட்டப் பெயர் அவருக்கு மட்டும் தான் சொந்தமானது, வேறு ஒருவர் அந்த இடத்தை நிரப்ப முடியாது என்பது நிஜம்.

அவர்
நடித்த கற்பகம் துவங்கி பல காலம் அவரது மெல்லிய இடையும் ஓய்யார நடையும் பார்த்து ரசிக்கும்படியாக இருந்தது, அவரது உடல் எடை கூடிய பிறகும் முக அழகு என்னவோ அப்படியே மாற்றமில்லாமல் இருந்தாலும் அவரது மெல்லிய உடலழகு அவரது அழகுக்கு அழகு சேர்த்தது. அவரது கண் போதையூட்டும் அழகு.

'ஊட்டிவரை உறவு', 'பட்டணத்தில் பூதம்', 'சர்வர் சுந்தரம்', 'இரு மலர்கள்', 'சொர்க்கம்', 'நெஞ்சிருக்கும் வரை', 'கைகொடுத்த தெய்வம்' போன்ற திரைப்படங்களை பார்த்து கே.ஆர் விஜயாவின் அழகை ரசித்திருக்கிறேன்.

நடிகர்
திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து இவர் நடித்ததை பார்த்து மிகவும் ரசித்திருக்கிறேன், அடுத்தது முத்துராமன் ஜெய்ஷங்கர் இருவருடனும் இணைந்து நடித்த திரைப்படங்களையும் நான் பார்த்து மிகவும் ரசித்தவை. நான் கே.ஆர் விஜயாவின் ரசிகை என்றால் அது மிகையில்லை. .