Translate

8/20/2009

எனக்குப் பிடித்த நடிகைகள் - பீ. பானுமதி


காலம் சென்ற பானுமதி அவர்கள் ஒரு சகலகாவல்லி என்று சொல்லும் அளவிற்கு திறைமை படைத்தவர், நாட்டியம் மட்டும் அவருக்கு மைனஸ், ஆனால் அதை ஒரு குறையாகவே தெரியாதபடி வேறு பல திறைமைகளை கொட்டி தன்னை நிரூபித்தவர். ஆளுமை குணம் கொண்டவர். அதற்க்கு அவர் கூறியக் காரணமும் சிறப்பானது. திரைப்படவுலகம் என்றாலே பல தொல்லைகள் நிறைந்தது, தான் ஒரு பெண் என்பதால் மற்றவர் தன்னை நெருங்க முடியாதபடி ஒரு பாதுகாப்பிற்கென அவர் தன்னை அப்படிகாட்டிக் கொண்டதாக சொல்லி இருக்கிறார். அவர் சொன்னதிலும் உண்மை இருக்கத்தானே செய்கிறது.

அருமையான குரலுக்குச் சொந்தக்காரி, கதையாசிரியர், இசையமைப்பாளர், திரைப்பட நிறுவனமுதலாளி, இயக்குநர் இன்னும் என்னென்ன திறைமைகளை கொண்டவர் என்பது எல்லோரும் அறிந்ததுதான். அவர் நடித்த திரைப்படங்களிலேயே, அவர் பெயரைச் சொன்னதும் ன் கண் முன் நிற்கும் நான் பார்த்து ரசித்த அவரது சில திரைப்படங்களில், 'அன்னை' மிக சிறப்பான திரைப்படம் அவருக்கு தேசியவிருதை பெற்றுதந்ததில் ஆச்சரியம் இல்லை.



ஒரு
வளர்ப்புத்தாயை அவர் நேரில் எங்கே பார்த்திருப்பார் என்பது தெரியவில்லை, அத்தனை அருமையாக அந்த திரைப்படத்தில் ஒரு வளர்ப்புத்தாய் தன் குழந்தையை வளர்க்கும்போது அந்த குழந்தைக்குத் தன் சொந்த தாயை தெரிந்து விட்டால் தன் மீதுள்ள பாசம் எங்கே குறைந்து விடுமோ என்று தவிக்கும் ஒரு தாயை அவரது நடிப்பில் தத்ரூபமாக சித்தரித்திருப்பார், அவரைத்தவிர யாராலும் அந்த கதாபாத்திரத்தை அத்தனை சிறப்பாக செய்திருக்க முடியுமா, ஒரு காலமும் முடியாது.

அடுத்தது அவரது இளமைக்காலத் திரைப்படம், 'அலிபாபாவும் 40 திருடர்களும்' இதில் எம்.ஜி.ஆருடன் அவரது இளமைக்கால நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கும். 'ரங்கூன் ராதா' சிவாஜி கணேசனுடன் நடித்த அற்ப்புத திரைப்படம். அவரது வெண்கலக்குரல் இசைக்கு எத்தனை மெருகூட்டியது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ.

அஷ்டாவதானி என்று சொல்லப்பட்ட பட்டப்பெயருக்கு மிகவும் பொருத்தமானவர் என்பதற்கு அவர் வாங்கி குவித்த விருதுகளும் சாட்சிகள்.