Translate

8/19/2009

எனக்குப் பிடித்த நடிகர்கள் - சிவாஜி கணேசன்

Wednesday, 19 August 2009




காலம் சென்ற திரு சிவாஜி கணேசன் அவர்களது நடிப்பை பற்றி சொல்வதற்கு அவசியமே இல்லை, நடிகர் திலகம் என்ற பட்டை பெயருடன் நடித்தவர், அவர் நடித்த பல திரைப்படங்களை நான் ரசித்திருக்கிறேன், 'ஞான ஒளி', 'கெளரவம்', 'உயர்ந்த மனிதன்', 'பராசக்தி', 'தில்லானா மோகனாம்பாள்', 'எங்கிருந்தோ வந்தாள் ', 'வசந்த மாளிகை', 'வியட்நாம் வீடு', 'முதல் மரியாதை', 'பரீட்சைக்கு நேரமாச்சு' போன்ற பல திரைப்படங்கள் பார்த்து ரசித்து, திரும்ப திரும்ப பார்த்தாலும் தெவிட்டாத திரைப்படங்கள்.

சொவ்கார் ஜானகி, பத்மினி, சரோஜா தேவி, வாணிஸ்ரீ, ஜெயலலிதா, கடைசியாக ராதாவுடன் நடித்த முதல் மரியாதை வரையிலான நடிகைகளுடன் அவர் ஜோடி சேர்ந்து நடித்ததை நான் மிகவும் ரசித்து பார்ப்பேன். நடிப்பிற்கு முன்னோடிகளான சிலருள் திரு சிவாஜி கணேசனுக்கும் எந்த காலத்திலும் முக்கிய இடம் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அவரது நடையும் குரலும் அவரது ப்ளஸ், பாடல்களை பின்னணியிலிருந்து மற்றொருவர்தான் பாடுகிறாரா என்ற சந்தேகத்தை ஏற்ப்படுத்துபவர் சிவாஜி கணேசன் அவர்கள், த
ன் சொந்த குரலில் பாடுவதைப்போலவே பார்ப்பவர்களை அசத்துவது இவரைவிட வேறு எவராலும் அத்தனைச் சிறப்பாக நடிக்க முடியாது. நடிப்பை சுவாசித்தவர்களில் இவரும் ஒருவர், நடிப்பு சிலரைத்தான் காதலித்தது அந்த சிலரில் இவரும் ஒருவர் என்றால் அது மிகையாகாது.

திரையரங்கத்தின் வெளியே வேறு திரைப்படம் அன்றைய மூன்று காட்ச்சிகளும் என்று பார்த்து நுழைவுச்சீட்டு வாங்கிச்சென்று திரைப்படம் துவங்கியப்பின் பார்த்தால் வேறு திரைப்படம் திரையிடப்படும் சோகங்களும் நடந்ததுண்டு அந்த வகையில் நான் பார்த்த இவருடைய சில திரைப்படங்கள், 'திரிசூலம்', 'உத்தமன்', பாரத விலாஸ்', 'அந்தமான் காதலி' இன்னும் நிறைய உண்டு.



சென்ற நூற்றாண்டுவரை நம்மோடு வாழ்ந்தவர் என்ற பெருமிதம் நமக்குண்டு, புகழ் பெற்ற ஹாலிவூட் நடிகராக இருந்த மர்லன் பிராண்டோவை தன் நடிப்பால் கவர்ந்தவர் இந்த ஒரே இந்திய நடிகர் எனபது நமக்குப் பெருமை தானே.
நடிப்பில் புகழ் பெற்ற அனைத்து நடிகர்களும் நாடகத்தில் தங்களது களத்தை துவக்கியதால் அவர்களால் நன்றாக நடிக்க முடிந்தது என்றொரு வாக்கு உண்டு, ஆனால் நாடகத்தில் நடித்த எல்லோருமே சினிமாவில் அதிக காலம் நின்று தங்கள் புகழை நிலை நிறுத்திக் கொள்ளவில்லை ஒரு சிலரே அதிக வருடங்கள் திரைப்படத்துறையில் புகழடைந்தார்கள். நாடக அனுபவம் பலரை முன்னுக்கு கொண்டுவந்தது என்பதற்கு எல்லா பழைய திரைப்பட நடிகர்களும் சாட்சிகள் தான்.

சிவாஜி கணேசன் திரையுலகத்தில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தை பிடித்து வைத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார். அவரது சில திரைப்படங்களை பார்க்கும் போது இவற்றில் நடிக்க இவர் எதற்காக ஒப்புக் கொண்டார் என்று தோன்றக் கூடிய திரைபடங்களும் உண்டு. இன்னும் சில திரை படங்களில் இவரா இப்படியும் நடித்திருக்கிறார் என்றும் தோன்றியதும் உண்டு.