Translate

8/15/2009

எனக்குப் பிடித்த நடிகர்கள் - ஜெமினி கணேசன்

Saturday, 15 August 2009


சாம்பார், காதல் மன்னன் என்ற பட்டப்பெயர்கள் காலம் சென்ற திரு ஜெமினிகணேசன் அவர்களுக்கு இருந்தாலும் அவரது நடிப்பில் வந்த படங்களில்அவரைப் பார்த்து நான் மிகவும் ரசித்ததுண்டு, அவரது சுருட்டையான தலைமுடியும் அவரது அழகிய சிரிப்பும் காதல் மன்னன் என்ற பட்டப்பெயருக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

இவர் நடித்த பெரும்பாலான படங்களை நான் பார்த்து ரசித்திருக்கிறேன், நடிப்பில்சிறந்தவர் என்று சொல்ல முடியாவிட்டாலும் இவரை திரையில் காணும் போது
நன்றாகத்தான் இருக்கும். எனக்கு பிடித்த நடிகர்களில் திரு ஜெமினியும் ஒருவர். இவர் நடித்த 'ராமு' , 'காவியத்தலைவி', இருகோடுகள்','நான் அவனில்லை' 'சாந்திநிலையம்' இன்னும் பல திரைப்படங்களில் இவரை நான் ரசித்ததுண்டு, இவர் நடித்த பல திரைப்படங்களின் பாடல்கள் மிகவும் பிரபலம் ஆனவை, இன்றுவரைஅவற்றை கேட்க்கும் போது உள்ளத்தில் ஒரு புதிய தெம்பு வருவதை யாரும் மறுக்க முடியாது.

கே. ஆர்.விஜயா, சொவ்க்கார் ஜானகி, வைஜெயந்திமாலா, பானுமதி, சரோஜாதேவி, போன்ற நடிகைகளுடன் இவர் சேர்ந்து நடித்த பல திரைப்படங்களை என்றும் மறக்கமுடியாது. 'நான் அவனில்லை' என்ற இவர் நடித்த திரைப்படம் மிகவும்
வித்தியாசமான கதையம்சம் கொண்டது, ஆங்கில திரைப்பட கதையைகொண்டது, இவர் நடித்த 'நான் அவனில்லை' திரை படத்தை பாரத்துவிட்டு , ரீமேக் செய்யப்பட்ட அதே திரை படத்தை பார்க்கும் போது 'என்ன இருந்தாலும் ஜெமினி கணேசன் ஜெமினி கணேசன் தான்', என்று நினைக்க வைக்கிறது.

இவரது வாரிசுகள் என்று தமிழ் திரை உலகில் யாரும் இல்லை என்றாலும் ஹிந்தி திரையில் கொடி கட்டி பறந்த ரேகாவை மறக்க முடியாது, அழகான அவரது தோற்றமும் நடிப்பும் ஜெமினி கணேசனின் வாரிசு என்பதை உறுதிபடுத்துவதாக உள்ளது. அப்பாவை விட நடிப்பில் புகழ் ரேகாவிற்கு அதிகம் என்பதில் சந்தேகம் இல்லை, ஒரே குறை அவர் தமிழ் பேசி தமிழ் திரையில் நடிக்காததுமட்டும் தான், அந்த குறையை, ஜெமினி கணேசனின் மகள் ஜெயா ஒரு திரைப்படத்தில் நடித்து குறை தீர்த்து இருக்கிறார், ஆனாலும் ரேகா தமிழில் நடிக்காதது குறை தான்.

எனக்கு பிடித்த மற்றொரு நடிகரை அடுத்த இடுகையில் தொடர்ந்து எழுதுவேன்.