Translate

8/13/2009

எனக்கு பிடித்த நடிகர்கள் - முத்துராமன்



எனக்கு பிடித்த நடிகர்களின் வரிசையில் முதலாவது நான் எழுத நினைப்பவர் காலம் சென்ற திரு ர். முத்துராமன் அவர்கள், அவரை நான் சிறுமியாக இருக்கும் போது திரைப்படத்தில் காணும் போதே அவரது அமைதியான தோற்றம் என்னை மிகவும் கவர்ந்தது, அடக்கமானவர் என்றும் தோன்றியது. நான் பார்த்த அவருடைய ஏதோ ஒரு படத்திலேயே அவரை எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

அவர் சில படங்களில் வில்லன் வேடம் செய்திருந்தாலும் கூட அவருக்கு ஒரு 'gentleman' என்ற தோரணை தான் மேலோங்கி காணப்படும். அவளுக்கென்று ஒர்மனம் என்கிற திரைப்படத்தில் அவர் வில்லனாக நடித்திருப்பார், ஆனால் அவரை ஒரு வில்லனாகவே ஏற்க தோன்றாமல் இருக்கும்.

சர்வர் சுந்தரம், 'எதிர் நீச்சல்' படத்தில் பாலக்காட்டு மாதவன், 'சூரியகாந்தி' யில் ஈகோ நிறைந்த கணவராக அவர் நடித்த எல்லா வேடங்களிலும் அவரது தனித்தன்மையை காண முடியும். இவருடன் கே.ஆர். விஜயா ஜோடி சேர்ந்து நடிப்பதை பார்த்து ரசிக்கப் பிடிக்கும்.

கிசுகிசுவிற்கு அப்பாற்பட்டவர், அவரது மரணம் நினைத்துப்பார்க்கவே முடியாத அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால் ஊசி மருந்து மாத்திரை, பல நாட்கள் படுக்கை, பல மாதங்கள் அல்லது வருடங்களாக வியாதியில் கஷ்டப்படாமல் அவர் இறந்திருந்தாலும் அவரது மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடையாதவர் இருந்திருக்க முடியாது.

'அப்பா ஆறடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்' என்பதை நடிகர் கார்த்திக் நிரூபித்தார், ஆனாலும் அவர் வெகு சீக்கிரம் திரையைவிட்டு போனது வருத்தம் தான், காலம் சென்ற திரு ர். முத்துராமனின் திரையுலக மற்றும் சொந்த வாழ்க்கைப் பற்றிய செய்திகளை தொகுத்து அவரது ரசிகர்களோ அல்லது திரையுலக நண்பர்களோ முன்வந்து இண்டர்நெட்டில் கிடைக்கும்படி செய்யவேண்டும், தொடரும்......