Translate

8/08/2009

சொல்வதெல்லாம் உண்மை

Saturday, 8 August 2009

நடிகர் அமிதாபச்சன் என்பவர் ஒரு ஹிந்தி சினிமா நடிகர் அவருடைய மனைவியின் பெயர் ஜெயாபாதுரி அவரது மகன் அபிஷேக் மூவரும் நடிகர்கள் என்பது எனக்குத்தெரியும் ஆனால் இரண்டு B யும் நடித்த சினிமாக்களையும் நான் பார்த்தது கிடையாது.

ஜெயா சிறிய வயதில் நடித்த ஒரு சில சினிமா பார்த்திருக்கிறேன், மொத்தத்தில் ஹிந்தி சினிமாக்களை நான் பார்க்க விரும்புவது கிடையாது, கலைக்கு மொழி ஒரு பிரச்சினை இல்லை என்பது சிலரின் கருத்து, என்னைப் பொறுத்தவரையில் என்னால் விளங்கிக் கொள்ள இயலாத எந்த மொழியாக இருந்தாலும் அதை பார்ப்பதில் நான் அக்கறை எடுப்பதில்லை,

மொழி என்பது ஒரு தனி மனிதனின் உணர்வுகளை அடுத்தவருக்கு விளங்கவைப்பதில் முதலிடம் பெறுகிறது என்பதால், உணர்வுகளை அறிய இயலாத ஒன்றை கவனிப்பதில் எனக்கு ஆர்வம் இருப்பதில்லை.

கனவுகளுக்கு அர்த்தமிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள், நம்மால் கனவுகளை நினைவில் வைத்துக் கொள்வதென்பது சிரமமான விஷயமாக இருப்பினும் சில கனவுகள் நம்மை அறியாமலே நம் நினைவில் நின்று விடுவதும் உண்டு, சில கனவுகளை நாம் விழித்துக்கொள்ளும் சமயத்தில் காண்பதால் அவற்றை நம்மால் நினைவில் வைத்துக் கொள்ளுதல்
சுலபமாகிவிடுகிறது.

அந்த வகையில் இன்று நான் எதேச்சையாக கண் விழிக்கும் சமயத்தில் வந்த கனவு அமிதாபச்சனுடையது என்பதாலும்
ன் ஒன்று விட்ட சகோதரி எப்போதும் சில கனவுகளுக்கு சில அர்த்தங்களை சொல்லுவாள் அந்த அர்த்தத்தில் பார்க்கும்போது இந்த அமிதாபச்சனைப் பற்றிய திடீர் கனவை நான் அநாவசியமாகவும் கருதவில்லை என்பதால் இங்கு எழுத நினைத்தேன்.

சிலர் சொல்லுவார்கள் உறங்குவதற்கு முன் நாம் பேசிய, நினைத்த, பார்த்த சம்பவங்கள் தான் கனவாக வரும் அதனால் அதற்க்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியம் கிடையாது என்று. அந்த வகையில் பார்த்தால் கூட நேற்று இரவு நான் தொலைக்காட்ச்சியில் கூட எந்த நிகழ்ச்சியையும் பார்க்கவில்லை, நேற்று இரவு மட்டுமல்ல நான் எந்த சினிமாவையும் எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒட்டு மொத்தமாகவே பார்ப்பது கிடையாது. கடைசியாக ஜெபத்தை தான் ஒரு மணிநேரம் சொல்லிவிட்டு படுக்கைக்குச்சென்றேன் அதனால் நிச்சயம் இந்த கனவு எந்த நிகழ்வுகளின் தொடர்பாலும்
ற்ப்பட்டதல்ல என்பதும் உறுதி.

அமிதாபச்சன் ஒரு பெரிய கூட்டத்தினரால் வழியனுப்பி வைக்கப்படுகிறார், அவர் விமானத்தில் ஏறுவதற்குத் தயாராக விமானம் காத்துகொண்டிருப்பது தெரிகிறது, சிறிது தொலைவில் தன்னை வழியனுப்ப வந்தவர்களிடம் விடை பெற்றுக்கொண்டிருக்கிறார், அவருடன் அவரது மனைவி போவார் என்ற எண்ணத்தில் நான் ஜெயாவைத் தேடுகிறேன், ஆனால் ஜெயா அங்கில்லை, அங்கு ஒரு பெண் இருக்கிறார் அவர் வெள்ளைகாரியை
ப் போன்ற நிறத்தில் ( இப்போதெல்லாம் பெண்கள் பலவகை நிறங்களை முடியில் பூசிக்கொள்வது சகஜமாக காணப்படுகிறதே அதைப் போல ) தலை முடியை வைத்திருக்கிறார், உடையிலும் மிகவும் சிக்கனம், சிரித்துக் கொண்டே எல்லோரிடமும் கை குலுக்கிக் கொண்டிருக்கிறார். அதனால் அவரும் அமிதாபச்சன் செல்லவிருக்கும் விமானத்தில் ஏற இருக்கிறார் என்று தெரிகிறது.

என் ஒன்று விட்ட சகோதரி சொல்லுவாள் ஆகாய விமானத்தில் செல்ல இருப்பது போலவோ அல்லது செல்லுவது போலவோ கனவு வந்தால் அவர்கள் இறக்கப்போகிறார்கள் என்பதின் அறிகுறி, தனது இளைய சகோதரியின் கணவர் விமானத்தில் போவது போல கனவு கண்டதாகவும், அவர் உண்மையாகவே
விமான பயணத்திற்காக தன்னை தயார்படுத்தி வந்ததால் அந்த பயணத்திற்கு போவதற்காகத்தான் அந்த கனவு வந்திருப்பதாக சொல்லிக்கொண்டிருத்த போது ஹார்ட் அட்டாக்கில் தவறி விட்டார் என்றும் என்னிடம் சொல்லுவாள்.

ஏற்கனவே உடல் நலக்குறைவால் அடிக்கடி மருத்துவமனை சென்று வந்த அமிதாபச்சனைப் பற்றிய இந்த கனவு எந்த அர்த்தத்தை தெரிவிக்க எனக்கு வந்தது என்பது எனக்குத் தெரியவில்லை.

அவருக்கு எந்த குறையும் வராமல் இறைவன் அருள் புரிவாராக.