Translate

8/04/2009

கற்ப்புடைமை

Tuesday, 4 August 2009


கற்பு
என்பது மனதில் உள்ளது, ஒரு பெண்ணின் உடலை அவளது விருப்பமில்லாமல் தன் வசப்படுத்தி விடுவதை 'ற்ப்பழித்து விட்டதாக' கூறுவது எந்த வகையிலும்
ற்ப்புடையது கிடையாது, ஒரு பெண்ணோ ஒரு ஆணோ தன்மன இச்சையின் உந்துதலினால் அடுத்தவரை பார்க்கும் பார்வையிலேயே அவர்தமது ற்ப்பை இழந்து விடுகிறார்கள், ற்ப்புள்ளவர் யார் என்றால் எவனொருவன் அல்லது எவளொருத்தி தான் திருமணம் செய்துகொள்ள போகும் ஒருவனை அல்லது ஒருத்தியை தவிர வேறு ஒருவரை தன் மனதார தன் கண்களாலும் தன் மனத்தினாலும் இச்சையுடன் பார்க்காமல் தன் மனதை கட்டுப்படுத்தி காத்து வருகிறார்களோ அவரே கற்ப்புடையவர்.

ஒருவரின் சம்மதமின்றி அவரது உடலை அடைவது ஒருகாலமும் கற்ப்பை இழந்ததாகாது, இருவரின்
சம்மதமின்றி உடல்கள் மட்டுமே சம்பந்தபடும் நிகழ்ச்சியை கொண்டு ஒரு பெண்ணோ ஒரு ஆணோ ற்ப்பிழந்துவிட்டதாக கருதுவதும் மடமை.

ஒரு பெண்ணோ ஆணோ அடுத்தவரை கவரும் விதத்தில் உடைகள் அணியக்கூடாது என்பது கூட இந்த அடிப்படையில் தான். அங்கங்களை கவர்ச்சியாக காண்பிப்பது, அடுத்தவரை கவரும் விதத்தில் ஆடைகள் அணிவது, போன்றவை குற்றம், ஒருவர் கவர்ச்சியான உடை உடுத்தி இருக்கும் பட்சத்தில் அவரை இச்சையுடன் பார்ப்பதும்
ற்ப்பிழந்ததற்கு சமம்.

இதனால் ஆண் பெண் யாராக இருந்தாலும் அடுத்தவரை கவரும் விதத்தில் உடை அணிவது ஒரு பாவச்செயல், ஏன் என்றால் அடுத்தவர் தம்மை இச்சையோடு பார்க்கவேண்டும் என்பதற்காகவோ தான் மிக அழகாக மற்றவருக்கு தெரியவேண்டும் என்பதற்காகவோ தன் அங்கங்களை வசீகரிக்கும் விதத்தில் உடைஅணிவதும் அலங்காரம் செய்து கொள்வதும் பாவச்செயல். இப்படி செய்வதால் அடுத்தவரின் மனதில் இச்சை நினைவுகள் தூண்டப்படுவதால் அவர் தமது கற்ப்பை இழக்க காரணமாகிவிடுகிறோம், இதனால் நாம் நம் பாவ கணக்கில் அதிகப்படியான பாவத்தை சேர்த்துக்கொள்ளுகிறோம்.

ஒருவரின் உடலும் ஆன்மாவும் தூய்மையாக இருக்க வேண்டுமானால் அவரது கண்களால் பார்க்கும் பொருளும் தூய்மை நிறைந்ததாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியமாகிறது. அப்படி தன்னைத் தான் காத்துக் கொள்வதால் மட்டுமே ஒருவன் இறைவனை தரிசிக்க முடியும். அப்படிப்பட்ட சுத்தமான இடமே இறைவன் வந்து தங்கும் இடமாக இருக்கும். மனதில் ஏற்ப்படும் இழிவான எண்ணங்கள் மனிதனை ற்ப்பிழக்க செய்யும் என்பது உறுதி.

இறைவனை சுத்தமாக வணங்க வேண்டும் என்று இறைவன் எதிர்பார்க்கும் சுத்தம் என்பது இவைகளைத்தான், மேல் உடலை நீராலும் மற்ற பொருட்களாலும் சுத்தம் செய்வது இறைவனுக்கு அவசியமற்றது, யாரொருவன் தன் மனதை சுத்தமாக காத்துக்கொள்கிரானோ, அதுதான் தெய்வம் விரும்பும் சுத்தம். மேலுடலை மட்டும் சவுக்காரமிட்டு சுத்தப்படுத்திவிடுவது எளிது, ஆன்மாவை சுத்தமாக காப்பதுவே தெய்வம் விரும்பும் சுத்தம்.

கற்பு என்பது தெய்வம் விரும்பும் மனசுத்தம், இதற்க்கு ஆண் என்பதும் பெண்ணென்பதும் கிடையாது. ஆன்மாவில் பெண் ஆன்மா ஆண் ஆன்மா என்பது கிடையாது. சுத்தம் என்பதிலும் பெண் என்றும் ஆண் என்றும் கிடையாது. தெய்வத்திற்கு எல்லா ஆன்மாவும் ஒன்று தான். தன்னை தான் காத்து கொள்பவன் ஞானி மட்டுமல்ல, அவன் தெய்வத்திற்கு உகந்த ஆன்மாவுமாகிறான்.