Translate

8/22/2009

ஓவியம் - 7

நாட்கள் கடந்தது, நீலவண்ணன் திரும்பவே இல்லை, சோலை சொல்லியது உண்மையாக இருக்குமோ என்ற பயம் பொற்கொடியை வேதனை செய்தது, இதற்கிடையில் சோலை அடுத்த ஊர் பணக்காரன் சோமுவை பொற்கொடிக்குத் திருமணம் செய்ததுவைக்க முடிவு செய்தான், தன் தந்தையிடமும் இதைப்பற்றி கலந்தாலோசித்து முடிவு செய்யப்பட்டது, இதைப்பற்றி ஒன்றும் அறியாத பொற்கொடி தினமும் ஓவியக்கூடத்திற்க்குச் சென்று ஓவியங்கள் வரைந்துக் கொண்டிருந்தாள்.

பொற்கொடியை சோமுவிற்க்குத் திருமணம் செய்தால் அவள் வரையும் ஓவியங்களை விற்று மேலும் பணம் சம்பாதிக்கத் திட்டம் போட்டான் சோமு. திருமணத் தேதியும் குறிக்கப்பட்டுத்
திருமண ஏற்ப்பாடுகள் வேகமாக செய்து முடித்து, திருமண பத்திரிகை அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யத்துவங்கிய போதுதான் பொற்கொடிக்கு தனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

பொற்கொடி தன் தந்தையிடம் தனக்கு சோமுவைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்று எடுத்துச் சொல்லி திருமணத்தை நிறுத்த முயற்சிகள் எடுத்தும் ஒன்றும் பலன் இல்லை, ஒரு நாள் இரவு ஓவியக்கூடத்திலிருந்த நீலவ
ண்ணனின் ஓவியங்களையும் தான் வரைந்த ஓவியங்களையும் தனது சில உடைகளையும் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி தன்னுடன் படித்த பள்ளித் தோழியின் வீட்டிற்குச் சென்று இரவு பொழுதை கழித்துவிட்டு அதிகாலை பேருந்தில் ஏறி சென்னையிலிருந்த தன்னுடன் படித்த மற்றொரு தோழியின் வீட்டில் வந்து தங்கி விட்டாள்.

சில நாட்களில் தன் தோழியின் மூலம் ஒரு பள்ளியில் ஓவிய ஆசிரியையாக வேலை கிடைத்தது. பின்னர் தன் தோழியிடம் சிற்ப்பாவூரில் தனக்கேர்ப்பட்டஎல்லா பிரச்சினைகளையும் சொல்லி நீலவண்ணன் இறந்துவிட்டானா உயிருடன் எங்காவது இருக்கிறானா என்பது பற்றி அறிந்து கொள்ள போலீசில் புகார் செய்தாள்.

அந்த வருடத்தில் அவளது தந்தை இறந்துவிட்டதாக அவளது பள்ளித்தோழி மூலம் அறிந்து கொண்டாள், அண்ணன் சோலையும் சோமுவும் தான் திரும்பவும் ஊர்த் திரும்பினால் தன்னை துன்புறுத்துவார்கள் என்று அஞ்சி மறுபடியும் சிற்ப்பாவூருக்குத் திரும்பவே இல்லை.

போலீசில் காணாமல் போன நீலவண்ணனது புகைப்படம் கேட்டிருந்தனர், அவள்தான் ஓவியம் கற்றபின் அவளாகவே வரைந்த அவனது ஓவியத்தின் நகலை போலீசிற்கு கொடுத்தாள். அவன் அவளிடத்தில் ஓவியமாய் வாழ்ந்து வருகிறான்.

.................................// முற்றும் \\
.....................................