Translate

8/11/2009

உன்னை ஒன்று கேட்ப்பேன் - 7 பாகம்

சோனாலி வரச்சொல்லியிருந்தாள், வாரக்கடைசியில் என்பதால் தட்டிக்கழிக்க முடியவில்லை......ஊரை விட்டு ஒதுக்குப் புறமாக அமைந்திருந்தது அந்த இடம். மிகவும் அமைதியாக இயற்க்கை வனப்பு கொட்டிக்கிடந்த இடம்.

"சோனாலி உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்"

"சொல்லு விஸ்வா"

கைப்பையிலிருந்த ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்து சோனாலியிடம் கொடுத்தான், அவள் அதை வைத்த கண் வாங்காமல் படித்துவிட்டு

"விஸ்வா, உங்கம்மா உயிரோட இல்லையா"..

"இல்லை" தலையை குனிந்தவாறே தலையாட்டினான்.

"இப்போ உன்னோட ஸ்டெப்-மதர் இருக்காங்களா"

"ம்ம்ம்"

"எங்கே இருகாங்க"

"ஜெயிலுல"

"உங்கப்பா"

"இறந்துட்டார்"

"நான் உன் கிட்ட ஒண்ணு கேட்பேன், சோனாலி நீ இல்லன்னு சொல்லிடாத"

"கேளு விஸ்வா"

"என்னை போலீசு பிடிச்சு ஜெயிலுல போட்டுடுவாங்கன்னு எனக்குத் தெரியும், ஆனா என் மனசுல ஒண்ணு மட்டும் உறுத்திக்கிட்டே இருக்கும், உன்கிட்ட சொல்லியே ஆகணும் போல தோணுது சோனாலி".

"என்னோட சித்திய எங்கப்பா ரெண்டாந்தாரமா கல்யாணம் செய்துகிட்டு வந்தது எனக்காகத்தான், எங்கப்பாவுக்கு உசிரெ
ல்லாம் செத்துப் போன எங்கம்மா மேல, அதனால அவரால எங்க சித்திக்கு உடல் சுகம் கொடுக்க முடியாம போயிடுச்சி, சித்திக்கு சின்ன வயசு, எனக்கு அப்ப பதினாலு வயசு, எங்க மாடுகளை பராமரிக்கவும் வயக்காடில எங்கப்பாவுக்கு ஒத்தாசையா இருக்கவும் சீனுங்கற வேலைக்காரனும் எங்க சித்தியும் ஒண்ணா வேலை செய்வாங்க, சீனு எங்க வீட்டிலேயே சின்ன பையனா வேலைக்கு வந்து சேர்ந்ததா எங்கம்மா என்கிட்ட சொல்லி இருகாங்க, சீனுவுக்கு எங்க சித்தி சாப்பாடு போடும்போது மாராப்பு சேலை மொத்தமாவே வெலகிடும், சீனு எங்க சித்திய வக்கிரமா பார்த்துகிட்டே சாப்பிடறத நான் தினமும் பார்ப்பேன், சீனுவுக்கும் எங்க சித்திய தொடணும் என்கிற ஆசைய தூண்டிவிட்டதே எங்க சித்தியோட இந்த தவறான போக்குதான். சீனுவும் எங்க சித்தியும் உடல் உறவு கொள்வதை நானும் எங்க அப்பாவும் பார்த்துட்டோம், என்னோட அப்பா அதை பார்த்துட்டு அவனை அடிச்சு இழுத்துகிட்டு போயி, எங்க ஊரு நாட்டாமை கிட்ட சொன்னாரு, வேலைக்காரன் சித்தி தான் தன்னை தப்பா நடக்கவச்சுதுன்னு நாட்டாமைகிட்ட சொன்னான், நாட்டமையிஎங்க சித்திய தள்ளி வைக்க உத்தரவு சொன்னாங்க , அவமானம் தாங்க முடியாம எங்க சித்தி அந்த சீனுவையும் என்னோட அப்பாவையும் அன்னைக்கு ராத்திரி தூங்கும்போது கல்லைத்தூக்கிப் போட்டு கொன்னுடுச்சி, அதனால எங்க சித்திய ஜெயிலுல போட்டுடாங்க, நான் ஒரு அநாதை ஆசிரமத்துல வளர்ந்தேன்"

" சோனாலி ரொம்ப நாளா என்னோட மனசில இருந்த சுமைய ........"

தன்னை மறந்து விஸ்வா சொல்லிக்கொண்டிருக்கும் போதே செல்போனிலிருந்து போலீசிற்கு அழைப்பு விடுத்த சோனாலியை விஸ்வா கவனித்துவிட்டான்,

"சோனாலி என்னை போலீசு எப்படியும் பிடிக்கபோவது உறுதி "

"நீ அவசர பட்டுடியே ........நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்..... அதுக்கு முன்னாடி போலீச எதுக்கு கூப்பிட்ட ........நான் உன்னை ஒண்ணுமே செய்ய கூடாதுன்னு தானே இருக்கிறேன் ஆனா நீ அவசர பட்டுட்டியே சோனாலி ".......

தயாராக பாகெட்டில் வைத்திருந்த மயக்கமருந்து கொட்டப்பட்ட கைக்குட்டையை எடுத்து சோனாலியின் மூக்கி
ன் அருகே கொண்டு சென்றான்,

" வேண்டாம் விஸ்வா..... என்ன ஒண்ணும் செய்யாதே"

" விட்டுடு.......தயவு செய்து விட்டுடு....."

சோனாலியின் உடல் சரிய, அவள் அணிந்திருந்த ஜீன் பான்ட்டும் அதன் மேலே அணிந்திருந்த low neck tops
ல் மார்பின் மேல் பாதி பகுதி வெள்ளையாக தெரிய.........., பாக்கெட்டிலிருந்த சர்ஜிகல் கத்தியை எடுத்து மார்பிலும் தொண்டையிலும் தாறுமாறாக கிழிக்க ரத்தம் பீரியடித்தது .......

அங்கிருந்த குழாயில் முகம் கை கால்களை ரத்தக்கறை நீங்க கழுவியபின், ரத்த கரை படிந்திருந்த தன் டி ஷர்ட்டை கழற்றி பைக்குள் திணித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி அந்த விடுதியின் வெளியே வந்து பேருந்தில் ஏறி தன் அலுவலகத்தை நோக்கி நடந்தான், அலுவலகத்தில் அன்று வார இறுதி விடுமுறை என்பதால் யாரும் இல்லை, அங்கிருந்த விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு அவனது அறைக்குச் சென்று தன் உடையை மாற்றிக் கொண்டு படுத்து உறங்கிப்போனான். முற்றும்.