Translate

8/21/2009

ஓவியம் - 6

Friday, 21 August 2009



இதைப்
பற்றி ஒன்றும் அறியாத பொற்கொடி ஓவியக்கூடத்திற்கு வந்தபோது அங்கு ஓவியங்கள் காணாமல் போயிருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டாள். தன் அண்ணன் சோலை தான் அவற்றை திருடி இருப்பான் என்கின்ற உறுதி அவளுக்கு, ஆனால் நீலவண்ணன் வந்தால் என்ன பதில் சொல்லுவது என்று வேதனையும் ஏற்ப்பட்டது.

ஒருநாள் சோலை நன்றாக குடித்துவிட்டு
பொற்கொடியிடம் அங்குள்ள ஓவியங்களை எடுத்து கொடு என்று சண்டை போட்டான், அப்போது நீலவண்ணன் திரும்பி வந்தால் நிச்சயம் தனது ஓவியங்கள் திருடு போனதைப்பற்றி போலீசில் புகார் கொடுப்பன் அப்போது சோலையை போலீசில் கைது செய்வார்கள் என்று சொல்லி புலம்பினாள் பொற்கொடி.

அதை
கேட்ட அவள் அண்ணன் சோலை, 'அடி போடி பைத்தியக்காரி, அந்த நீலவண்ணனை ஒரு கடத்தல் கும்பல் கடத்திக்கொண்டு போய் ஓவியங்கள் வரைந்து அதிக விலைக்கு விற்க திட்டம் வகுத்து கூட்டிச் சென்றது, அவர்கள் திட்டமிட்டப்படியே அவனை அடர்ந்த காட்டில் ஒரு இடத்தில் வைத்து ஓவியம் வரைந்து தரும்படி
ற்ப்புருத்தியது, அவனும் வேறு வழியில்லாமல் வரைந்து கொடுத்துக்கொண்டிருந்தான். ஒருநாள் அவன் அடர்ந்த காட்டில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த போது விஷ பாம்பு ஒன்று அவனது காலை கடித்தது, ஏதோ பூச்சு கடித்தது என்று அவன் ஓவியம் வரைவதை நிறுத்தாமல் வரைந்து கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து விழுந்த இடத்திலேயே இறந்து போனான். இதைப்பற்றி அந்த கொள்ளைக்கூட்டத்திலிருந்த ஒருவன் அடுத்த ஊரின் திடீர் பணக்காரனிடம் வந்து தெரிவித்தான், அந்த திடீர் பணக்காரன் தான் என்னை நீலவண்ணனின் ஓவியக்கூடத்திலிருக்கும் ஓவியங்களை திருடி கொடுத்தால் நிறைய பணம் தருவதாக சொன்னான், அவனிடம் தான் நான் திருடிய ஓவியங்களைக் கொடுத்து பணம் சம்பாதிக்கிறேன்' என்றான் சோலை.

நீலவண்ணன் தற்போது உயிருடன் இல்லை என்கின்ற செய்தியை தன் அண்ணன் சோலை நன்றாக குடித்துவிட்டு போதையில் எப்படியாவது ஓவியக்கூடத்திலிருக்கும் ஓவியங்களை அவளிடமிருந்து பெறுவதற்காக அப்படியொரு பொய்யை சொல்லுகிறான் என்று அவள் நிச்சயித்துக் கொண்டாள். இவன் என்னதான் சொன்னாலும் தான் ஒருபோதும் மீதமிருக்கும் ஓவியங்களை இவனிடம் கொடுக்கப்போவதில்லை என்றும் தன் மனதினுள்ளே சொல்லிக்கொண்டாள்.

தொடரும்
.....