Translate

8/20/2009

ஓவியம் - 5

Thursday, 20 August 2009



பொற்கொடிக்கு
நன்றாக ஓவியம் வரைய முடிந்தது, தான் வரைந்தஓவியங்களை பார்த்த சிலர் பாராட்டியது அவளுக்கு மிகவும் சந்தோசம், நீலவண்ணன் மீது அவளுக்கு விவரிக்க முடியாத அன்பு பெருக துவங்கியது, அதைப்போலவே நீலவ
ண்ணனுக்கும் பொற்கொடியின் மீது காதல் ஏற்பட்டது, இருவரும் அதைப் பற்றி ஒருவர் மற்றவரிடன் எந்த சந்தர்ப்பத்திலும் வெளிக் காண்பிக்கவில்லை.

அன்று மதியம் காரில் வந்த ஒருசிலர் நீலவண்ணனை எங்கோ அவர்களுடன் வரும்படி
ற்ப்புருத்திக்கொண்டு இருத்ததை பொற்கொடி கவனித்தாள், தான் எங்கும் வெளியில் சென்று ஓவியம் தீட்டுவதில்லை என்று அவர்களிடம் அவன் விளக்கிக்கொண்டு இருந்தான், பின்னர் பெரிய வாக்கு வாதத்தில் முடிந்தது. வந்தவர்கள் கோபத்துடன் காரில் ஏறி சென்றுவிட்டனர்.

அடுத்த மூன்று நாட்களில் வேறு சிலர் ஒரு காரில் வந்தனர், நீலவண்ணனை இருவர் பிடிக்க அவனது முகத்தில் மயக்கமருந்தை உபயோகித்து அவன் மயங்கியவுடன் இரண்டு பேர் அவனை சுமந்துகொண்டு காரினுள் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர். பொற்கொடிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மாலை ஆறு மணி ஆகியது ஓவியக்கூடத்தில் விளக்குகளை போட்டுவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பதயாரானாள், அப்போது அங்கு வந்த அவள் அண்ணன் சோலையின் எதிரில் மாட்டிக்கொண்டாள்.

'இங்கு எப்படி நீ வந்தாய்' என்றான் சோலை.

ஒன்றும் பேசாமல் தன் வீட்டை நோக்கி வேகமாக நடக்கலானாள். நாட்கள் மறைந்தன, நீலவண்ணன் திரும்பி வரவே இல்லை, அவன் என்ன ஆனான் என்ற செய்தியை தெரிந்து கொள்ளவும் முடியாமல் தவித்துவந்தா
ள் பொற்கொடி. மாரியக்காவுடன் ஓவியக்கூடத்திற்க்குச் சென்று மாலைவரை அங்கு இருந்துவிட்டு வீடு திரும்புவது வழக்கமாகியது, ஒரு நாள் அவள் அண்ணன் சோலை மறுபடியும் அங்கு வந்தான், ஓவியக் கூடத்திற்க்குள்ளேயே வந்து அங்கிருந்த ஓவியங்களை தரும்படி கேட்டு அவளிடம் வம்பு செய்தான்.

அவள் அவற்றை நீலவண்ணன் வரைந்தது, அவன் வந்தால் எங்கே என்று கேட்ப்பான் அவனிடம் தான் குற்றவாளியாக முடியாது என்று சொல்லி அவனை அங்கிருந்து விரட்ட பெரும்பாடாகியது.

ஓவியக்கூடத்தின் சாவி
பொற்கொடியிடம் இருப்பதை தெரிந்துகொண்ட சோலை அவள் உறங்கும் நேரத்தில் அதை அவளுக்குத் தெரியாமல் எடுத்து வந்து ஓவியக்கூடத்தை திறந்து ஓவியங்களை திருடிக்கொண்டு போய் அவனிடம் ஓவியம் கேட்டிருந்த அடுத்த ஊர் பணக்காரனிடம் கொடுத்து கிடைத்த பணத்தில் குடியும் சீட்டு விளையாட்டுமாக இருந்தான்.

தொடரும்......