Translate

8/08/2009

உன்னை ஒன்று கேட்ப்பேன் - 5 பாகம்

Saturday , 8 August 2009அலுவலகத்தில் முக்கிய வேலைகள் இல்லை ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னையில் தன்னுடன் படித்த பழைய நண்பனின் அறையில் தங்கியிருந்தான் விஸ்வா, சோனாலியின் குறுஞ்செய்திகள் தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தது, நண்பர்களுடன் சேர்ந்து வார இறுதியில் எல்லோரும் பாண்டிச்சேரிக்கு போனார்கள், விஸ்வாவிற்கு பாண்டிக்கு நண்பர்கள் கூட்டத்துடன் போவதில் விருப்பம் இருப்பதில்லை, 'தண்ணி பார்ட்டி' யை அவன் தவிர்த்துவிடுவான். அவர்களிடம் வரவில்லை என்று சொல்லிவிட்டு தன் நண்பனின் அறையில் தங்கி இருந்தான், வார இறுதி என்பதால் சென்னையின் சாலைகள் வெறிச்சோடியிருந்தது, நடந்து இறுதியில் கடற்கரைக்கு வந்து சேர்ந்துவிட்டான்,

பொழுது மங்கியது இரவுராணிகளின் நடமாட்டம் அதிகரிக்க ஆரம்பிக்கும் என்று நண்பர்கள் சொல்லி அவன் கேள்விபட்டதுண்டு, கடற்க்கரை மணலிலிருந்து நடந்து வீதிக்கு வந்தவன் சிறிது நேரம் விளக்கொளியில் நின்றுகொண்டிருந்த சமயம், ஒரு பெண் அவனருகே வந்தாள், விளக்கொளியில் பார்த்தபோது சுரிதார் அணிந்து கல்லூரிக்குச் செல்லுபவளைப் போல் காணப்பட்டாள், "சார்" என்று சொல்லிவிட்டு அவனது முகத்தை பார்த்தாள், என்ன சொல்வது என்று ஒருகணம் புரியவில்லை,

வீதியில் வேகமாக நடக்க ஆரம்பித்தான், சிறிது தூரம் அவன் பின்னே நடந்துவந்த அவள் பின்னர் காணாமல் போனாள், ஒரு விடுதிக்குச்சென்று இரவு உணவை முடித்துவிட்டு நண்பனின் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். எதிரே வந்த ஒரு ஆட்டோக்காரன் அவனை உரசுவதுபோல அருகே வந்துவிட்டு போனான். அறைக்கு
ச்சென்று படுத்த போது உறக்கம் வர மறுத்தது. புரண்டு புரண்டு படுத்தவன், செல்போனில் பாண்டிக்குச் சென்றிருந்த தன் நண்பனுக்கு பெங்களூரு கிளம்புவதாக குறுஞ்செய்தி கொடுத்துவிட்டு, சிறிது நேரம் படுத்துவிட்டு பெங்களூரு கிளம்புவதற்காக தன் தோள்பையில் துணிகளை போட்டுவைத்தான், அறையின் கதவை யாரோ தட்டுவதை கேட்டு திறந்த போது ஒரு இளம் பெண் உள்ளே வந்து கதவை அடைத்துக் கொண்டாள்.

"அடுத்திருக்கும் அறைகளில் போலீசு ரெய்டு நடக்குது, உங்க அறைக்கு மட்டும் போலீசு யாரும் வர மாட்டாங்களே அதனாலேதான் இங்க வந்துட்டேன்" என்று சொல்லிக்கொண்டே அவனது முகத்தைக் கூட சரியாக கவனியாமல் மின்சார விளக்கை அணைத்தாள். அவன் அவசரமாக மின்விளக்கை போட போன போது, "வேண்டாங்கோ, வெளக்கு வெளிச்சம் தெரிஞ்சா போலீசு வந்து கேப்பாங்க" என்றாள் இருட்டில்.

வந்தவள் யாரென்பது தெரியாமல் ஒரே அறையில் இதென்ன கூத்து என்றது விஸ்வாவின் மனது. சிறிது நேரத்தில் அவள் உட்கார்ந்திருந்த தரையிலேயே உறங்கி போனாள், எப்படி இவளை எழுப்பி வெளியேற்றுவது என்று யோசித்துக்கொண்டே விளக்கைபோட்டான், விளக்கொளியில் அவளது மேல் சட்டையின் மீது அவளது மார்பகங்கள் முழுவதுமாக தெரிந்தன, அவன் உள்ளிருந்த மிருகம் அவனை உசுப்பியது......

பையிலிருந்த புதிய சர்சிகல்கத்தியை எடுத்தான்.....கைகள் நடுங்கவில்லை .......இரண்டு மார்பகங்களிலும் தாறு மாறாக கத்தியால் சீவினான்,....... ரத்தம் பீசியடித்தது .... .......

ரத்தக்கரை படிந்த துணிகளை கழற்றி வேறு துணிகளை மாற்றிக்கொண்டு பையினுள் நுழைத்து தோளில் போட்டுக்கொண்டு விடுதியின் முகப்பில் வார இறுதி என்பதால் யாரும் இல்லை. குழாய் நீரில் கையையும் முகத்தையும் நன்றாக கழுவிக்கொண்டு வேகமாக விடுதியைவிட்டு இறங்கி ரயில்நிலையத்தை வந்தடைந்தான். பெங்களூருவிற்கு ஒரு பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு காலை ரயிலில் ஏறி பெங்களூரு வந்து சேர்ந்துவிட்டான். தொடரும்......