Translate

8/07/2009

உன்னை ஒன்று கேட்ப்பேன் - 4 பாகம்

Friday, 7 August 2009


காப்பியை குடித்துவிட்டு மேசையில் காபீக்கான பணத்தை வைத்துவிட்டு எழுந்தவுடன், அவளும் எழுந்துகொண்டு அவனுடன் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தாள், அவள் அவனுடன் தொடர்வதை உணர்ந்த அவன் ஒன்றும் பேசாமல் தன் அலுவலகம் போகும் திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்,

தன் ரூமிலிருந்த கட்டிலில் படுத்திருந்த போது அவனது செல்போன் ஒலித்தது, அந்த எண் தனக்குத் தெரியாத நபரிடமிருந்து வருவதை பார்த்துவிட்டு திரும்பவும் போனை வைத்துவிட்டான், அதே தொலைபேசியிலிருந்து ஒரு குறுஞ்செய்தி தொடர்ந்து வந்தது, அவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள், அவள் பெயர் சோனாலி, அவளும் மென்பொருள் பொறியாளராக வேலை பார்க்கும் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டிருந்தாள், அவன் அந்த குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பாமல் அப்படியே விட்டுவிட்டு உறங்கிப்போனான்.

அவளது குறுஞ்செய்திகளும் தொலைபேசி அழைப்புகளும் அவ்வப்போது வருவது தொடர்ந்து கொண்டே இருந்தது, ஒருநாள் அவளிடமிருந்து அவளது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான அழைப்பு வந்தது, அவன் அவளுக்கு பரிசளிக்க ஒன்றும் வாங்காமலேயே அவள் குறிப்பிட்ட இடத்திற்கு போயிருந்தான். அங்கு அவனையும் அவளையும் தவிர வேறு யாரும் இல்லை,

" பிறந்தநாள் கொண்டாட வேறு யாரையும் கூப்பிடவில்லையா" என்றான், அந்தஅறையில் தங்கியிருந்த மற்ற பெண்களையும் அப்போது அங்கு காணவில்லை, அவன் கேட்ட கேள்விக்குப் பதிலாக, "இல்லை" என்று தலையசைத்தாள்.

"ஏன்" என்றான். "உங்களைப் போல ரிசர்வ்டான நபரை சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, பெண்களிடம் பேச இடம் கொடுத்தால் போதும் என்று இருக்கும் இளைஞர்களின் மத்தியில் உங்களைப்போல ஒரு நல்ல மனிதர் கிடைப்பது எத்தனை பாக்கியம்" என்று சொல்லிக்கொண்டு விஸ்வாவைச் சுற்றி அவளது கைகள் இறுகியது.

ஒரு கணம் திகைத்துப் போனவன், சட்டென்று விலக முயன்றும் முடியாமல் அவளது கைகள் மேலும் இறுக்கியது, அவள் அணிந்திருந்த சட்டையின் மேல் பக்கத்தில் அவளது மார்பகங்கள் பிதுங்கி வெண்மையாக அவன் முகத்திற்கு மிக அருகில் தெரிந்தது, அவள் தனது சிவந்த இதழ்களில் அவனது இதழ்களை வைத்து.......

அவனுள் உறங்கியிருந்த, அவனால் பல காலமாக கட்டுப்படுத்தப்பட்ட மிருகம் எழுந்தது.....இல்லை.. அவள் தொலைந்துபோன தனது செல்போனை கொடுத்து உதவியவள், அவளுக்கு ஒரு கெடுதலும் செய்துவிடாதே விஸ்வா, அவனுள்ளிருந்த மிருகத்திடம் அவன் போராடினான்....

அவன் அவளை பிடித்து தள்ளிவிட்டு அவளது அறையைவிட்டு வெளியேறினான்.

அவளிடமிருந்து செல்போனில் அழைப்பு வந்து கொண்டே இருந்தது. குறுஞ்செய்திகளும் தொடர்ந்து வந்தது, பெரும்பாலான குறுஞ்செய்திகளில் தான் அவனது விருப்பத்தை தெரிந்து கொள்ளாமல் செய்துவிட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டு அனுப்பி இருந்தாள். தொடரும்.......