Translate

8/03/2009

அந்தரங்கம் பாவம் நிறைந்தது - கமலா - 4 பாகம்

Monday, 3 August 2009


கண்ணனின் மகள் கலாவிற்கு திருமணம் செய்துவைத்தனர்,
டீச்சர் ட்ரைனிங் கற்றுக்கொள்ள தேவையான கட்டணம் கல்ப்பனாவிற்கு புதிய புடவைகள், புத்தகம் எல்லா செலவுகளையும் செய்து கல்ப்பனாவை டீச்சர் ஆக்கினான் சுந்தர், ஆனால் சுந்தர் தான் காதலித்து வந்த பெண் கல்பனாவைத் திருமணம் செய்ய பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை, கல்பனாவிற்கு மூன்று சகோதரிகள், கல்பனாவிற்கு ஜாதி மாற்றி திருமணம் செய்தால் அடுத்திருந்த பெண்களுக்கு திருமணத்தில் சிக்கல் ஏற்ப்படும் என்பதால் கல்பனாவின் வீட்டில் சுந்தருடன் திருமணம் செய்துகொள்ள ஒத்துக்கொள்ளவில்லை, கல்பனாவிற்கு வேலை கிடைத்து இரண்டு வருடத்திற்குப் பின் கல்பனா தன் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு போய்விட்டாள்,

சுந்தர் திருமணம் ஆகாமலேயே இருந்தான், குடிப்பழக்கம் ஆரம்பித்தது, இந்நிலையில் கண்ணனுக்கு வயதாகி வேலையிலிருந்து விடுப்பும் கிடைத்து வீட்டில் இருந்து வந்தார், சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளானார், சர்க்கரை நோய்க்கு நாட்டு வைத்தியம் செய்து அதனால் சுகம் ஏற்படாத நிலையில் ஆங்கில மருத்துவத்திற்கு போனதால் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது, இரண்டாவது மகன் கமலக்கண்ணனுக்கு தான் செய்திருந்த மத்திய அரசு வேலையை பெற்றுதந்தார் கண்ணன், கண்ணன் தனக்குத் தானே செய்துகொண்ட தவறான சிகிச்சையால் தனது எண்பத்து மூன்றாம் வயதில் காலமானார்.

குடித்து குடித்து வேலைக்கு போவதை நிறுத்தி விட்டான் சுந்தர், போறாத குறைக்கு பெற்றோருக்கு இருந்த சர்க்கரை நோயும் சேர்ந்து கொண்டது. இதற்கிடையில் கமலாவும் சர்க்கரை நோயினால் இறந்து போனார். கமலா இறந்த இரண்டே வருடங்களில் சுந்தரும் இறந்து போனான்.
தொடரும்....