Translate

8/06/2009

அந்தரங்கம் பாவம் நிறைந்தது - கமலக்கண்ணன் 2 பாகம்

Thursday, 6 August 2009



வீடும் நிலமும் கமலகண்ணனின் பெயருக்கு மற்றம் செய்வதற்காக தெருவில் குடித்துவிட்டு புரண்டு கொண்டிருக்கும் சுந்தரை வீட்டிற்கு கூட்டி வந்து குடி தெளியும் சமயத்தில் கையெழுத்து வாங்கி கொண்டார்கள்
காவும் கமலகண்ணனும். மகாவின்அம்மா கமலகண்ணனுக்கு பெற்ற இரண்டு பையன்களும் அம்மா கமலாவின் வெள்ளை மைதா நிறத்தில் கமலக்கண்ணனை அச்சு பெயர்த்தார் போன்ற உருவத்திலும் பெற்றெடுத்திருந்தாள். இந்த இரண்டு ஆண்களையும் மகா என்ன முறை சொல்லுவாள், தம்பி என்று சொல்லுவாளா தனது கணவனின் சிறிய வீட்டின் குழந்தைகள் என்று சொல்லுவாளா.

சுந்தரைப்
போல் தன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளவில்லை, கமலக்கண்ணன் தன் வாழ்க்கையை தானே தேடிக்கொண்டது ஒன்றும் தவறு இல்லை என்று கமலகண்ணனுக்கும் ஆறுமுகத்தின் மனைவி கமலாவிற்கும் இருந்த தவறான மறைமுக தொடர்பை பற்றி அறியாதவர்கள் நியாயம் சொல்லி கொண்டிருந்தார்கள், குடும்பத்திலும் நண்பர்கள் வட்டாரத்திலும் முக்கியமானவர்கள் உயிருடன் இருந்தவரை ஆறுமுகத்தின் மனைவி கமலாவிற்கும் கமலகண்ணனுக்கும் இருந்த உறவும் அதனால் பிறந்திருந்த குழந்தைகளைப் பற்றியும் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்தனர் கமலாவும் கமலகண்ணனும்.

மகா தன் கணவனை தன் தாய் கமலாவிற்கு விட்டு கொடுத்தாளா, தாய் கமலாவின் கணவனை மகா திருமணம் செய்து கொண்டாளா. முறையெல்லாம் பார்த்தால் வாழ முடியாது, உலகம் உண்டான போது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தானே இருந்தனர், பிறகுதானே இத்தனை பெரிய கூட்டம் உண்டானது, இந்த கூட்டம் எப்படி உண்டாகி இருக்கும் என்று தத்துவம் பேசி தங்கள் தவறுகளுக்கு நியாயம் கற்ப்பித்து கொள்ளுவார்களா. உண்மைகள் என்பதும் நியாயங்கள் என்பதும் என்ன, உண்மை பொய்மையெல்லாம் நாம்
உருவாக்கிக் கொண்டதுதானே என்று விட்டுவிடுவதா, நியாயம் நீதி சட்ட திட்டம் இதெல்லாம் மனிதனுக்கு மனிதனால் உருவாக்கப்பட்டது தானே என்று நினைத்து கொள்ளலாமா.

இப்படி சமுதாயத்தில் பிறக்கும் குழந்தைகளின் நிலை என்ன, அவர்கள் தான் பிறந்த வரலாற்றை எண்ணி, சமுதாயத்தில் காணப்படும் உறவுகளின் நிலையை ஒப்பிட்டுத் தன் தாய் செய்தது தவறு என்று முடிவெடுப்பார்களா, தான் பிறந்த விதத்தை எண்ணி வெட்கப்பட்டு வெளியே சொல்லாமல் விட்டு விடுவார்களா, தெரியவில்லை. சமுதாயத்திற்கும் தங்களுக்கும் இடையில் ஏதோ ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது அந்த வித்தியாசத்தினால் எனக்கொன்றும் பிரச்சினை இல்லை என்று விவேகம் பேணிகொள்வார்களா. முற்றும்.