Translate

8/05/2009

உன்னை ஒன்று கேட்ப்பேன் - 2 பாகம்

Wednesday, 5 August 2009


இன்டர்வெல் என்பதைகூட திரையில் கன்னடத்தில் போடப்பட்டது, திரையில் பார்க்கும் சினிமாவில் வரும் கதாநாயகனின் உண்மை வயது அறுபதுகளில் இருக்கும் அவருக்கு போடப்பட்டிருந்த ஒப்பனையும் தலையில் அணிந்திருந்த விக்கும் அவரை இருபது வயதுகளில் இருக்கும் கதாநாயகானுக்குரிய தோற்றத்தை காண்பிப்பதற்காக போடப்பட்டிருந்தது, பார்க்க சிரிப்பு வரவைக்கும் கோமாளியின் தோன்றம், கர்நாடகத்தின் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்த்தில் கொடிகட்டி பறப்பவர். அவருடன் நடிக்கும் நடிகைக்கும் ஒப்பனை அதிகமாகவே தெரிந்தது, ஒருசமயம் தமிழ்நாட்டின் பாரதிராஜா பாக்யராஜா பாலச்சந்தர் என்பவர்களின் சினிமாக்களை அதிகம் பார்த்துவிட்டதால் மற்ற மொழி சினிமாக்களை பார்க்கும் போது இந்த வகையான ஒப்பனைகளை ஏற்றுக்கொள்ள இயலாமல் போனது என்று தோன்றியது.

சினிமாவில் கதாநாயகனின் தோற்றத்தையும் பேச்சையும் மட்டுமே அதிகம் காண முடிந்தது, விஸ்வா அவற்றை மிகவும் அக்கறையெடுத்து புரிந்து கொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தான், இடைவேளையின் போது அடுத்து அமர்ந்திருக்கும் பெண்களின் பேச்சு கேட்டது, அவர்கள் என்ன மொழியில் பேசுகிறார்கள் என்பது அவனுக்கு புரியவில்லை, அவன் அவர்களின் முகத்தை பார்க்க முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை.

விஸ்வாவின் இருக்கைக்கு முன்னாலிருந்து ஒரு பெண் எழுந்து தான் வாங்கிய பாப்கார்ன் பொட்டலத்தை விஸ்வாவின் அடுத்து உட்கார்ந்திருக்கும் பெண்களிடம் நீட்டினாள், அந்த பொட்டலங்கள் கீழே விஸ்வாவின் காலில் விழுந்தன, அடுத்து உட்கார்ந்திருந்த பெண் 'excuse me' என்றாள் விஸ்வாவிடம், விஸ்வா குனிந்து இரண்டு பொட்டலங்களையும் எடுத்து அடுத்திருந்த பெண்ணிடம் கொடுக்கும்போது அவளது முகத்தை பார்க்காமல் அவளது நகங்களில் வர்ணம் பூசப்பட்ட
மெல்லிஅழகிய கைகளில் கொடுத்தான்.

' thank you' என்ற அவளது குரலை மட்டும் கேட்டுவிட்டு தலையசைத்தான். மீண்டும் சினிமா துவங்கியது, விஸ்வாவால் சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை, அடுத்து உட்கார்ந்திருந்த பெண்ணின் கை இவனது கையை
அடிக்கடி உரசி சென்றது, விஸ்வாவின் தோளில் அடிக்கடி அந்த பெண்ணின் துப்பட்டா வந்து விழுந்து எழுந்தது, அந்த துப்பட்டாவிலிருந்த வாசம் கூட அவனுக்கு அத்துப்படியாகிவிட்டது. தொடரும்.....