Translate

8/17/2009

ஓவியம் - 1

Monday, 17 August 2009


பொற்றொடி
நீரில் மூழ்கி மூழ்கி எழுந்து விளையாடிக் கொண்டிருந்தாள், காலைக்கதிரவன் தன் கிரணங்களை மெதுவாய் வெளியிட்டுக் கொண்டிருந்தான், ஆற்றில் சலசலத்து ஓடும் ஆற்று நீரின் ஓசையை தவிர அங்கு ஒரு அரவமும் இல்லை.

சிறிது தூரத்தில் அமைந்திருந்த புகழ் பெற்ற ஓவியக் கூடத்தை நடத்தி வந்த நீலவண்ணன் குளிப்பதற்காக அன்று ஆற்றங்கரைக்கு வந்து கொண்டிருந்தவன், சிறிது தூரத்தில் வைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடைகளை பார்த்து விட்டு சிறிது தூரம் சென்று அங்கு போடப்பட்டிருந்த சுமைதாங்கி கல்லின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு பல் தேய்க்க ஆரம்பித்தான்.

ஒருவழியாக குளித்து பின் தன் ஆசை தீர நீரில் விளையாடி முடித்து உடைகளை மாற்றி, ஈர துணிகளை நீரில் அலசி பிழிந்து தோளில் போட்டுக்கொண்டு அன்னநடை நடந்து செல்லும் பொற்கொடியை பார்த்துக்கொண்டிருக்கும் நீலவண்ணனை அவள் கவனிக்கவே வாய்ப்பில்லை. ன்என்றால் அவன் மட்டுமல்ல வேறு யாரும் ஆற்றங்கரைக்கு குளிப்பதற்கு அத்தனை சீக்கிரம் வருபவர்கள் அங்கே இல்லை.

அழகிய சிவந்த அவளது கணுக்காலில் அவள் அணிந்திருந்த மெல்லிய கொலுசு சிணுங்கியது அந்த அமைதியான காலை நேரத்தில் நீலவண்ணனை கவன ஈர்ப்பு செய்தது. தலை முடியிலிருந்து அவள் பின்னால் வழிந்தோடும் நீர் அவளது பின்னழகை எடுத்து காட்டி வசீகரித்தது. அவளது உருவம் கண்ணிலிருந்து மறையும் வரை அவளது பின்னழகை பார்த்துக் கொண்டிருந்தவன் நேரம் செல்வதை சற்று மறந்து போனான்.

தொடரும்.......