Translate

8/05/2009

அந்தரங்கம் பாவம் நிறைந்தது - கமலக்கண்ணன் 1 பாகம்

ஆறுமுகம் நன்றாக பாடுவார், தாஸ் வைத்திருந்த கலைக்குழுவில் பாடுவதற்காக வந்து சேர்ந்தவர், கண்ணனும் தாசும் வேலை செய்திருந்த இடத்தில் ஆறுமுகமும் வேலை செய்து வந்தார், தாஸ் நடத்தி வந்த கலை மன்றத்தில் அடிக்கடி சமூக நாடகம் நடத்தப்படும், பெரும்பாலும் நாடகங்கள் கல்லுப்பட்டி போன்ற மதுரையை அடுத்திருந்த கிராமங்களிலும் மதராசின் புறநகர்களிலும் திருச்சியிலும் நடத்தப்படும். அந்த நாடகத்திற்கு நல்ல வரவேற்ப்பும் இருந்தது, இந்த கலைப்பணியை பொழுது போக்கிற்காகவும் கலையில் ஆர்வமுள்ளவர்கள் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்திக் கொள்வதற்காகவும் துவங்கப்பட்ட கலைமன்றம்.

ஆறுமுகத்திற்கு சுவாச உறுப்பில் கோளாறு காரணமாக நோய்வாய்பட்டு இறந்துபோனார், அவரது மனைவி பெங்களூருவை சேர்ந்தவர், பெயர் கமலா, ஆகையால் மைதாமாவு போன்ற நிறத்தில் இருப்பார், அவருக்கு ஒரு பையனும் ஒரு பெண்ணும்இருந்தனர், பையனுக்கு பத்து வயதும் பெண்ணிற்கு பனிரெண்டு வயது இருக்கும்போது அவர் இறந்துவிட்டார், அவரது பென்ஷன் தொகையுடன் அவரது மனைவி கமலா மருத்துவமனைகளில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து கிடைத்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார்.

கண்ணனின் இரண்டாவது மகன் கமலக்கண்ணன் கமலாவின் நிறத்தில் கிறங்கிபோனான், கமலாவின் தனிமையும் இளமையும் கமலக்கண்ணனை இழுத்தது, இரவுகளை கமலாவுடன் கழித்து வந்தான். தன் பெற்றோர் மறைவிற்குப் பின் கமலாவை மனைவியை போலவே பாவித்து வந்தான், கமலாவின் மகள் மகா என்று சொல்லப்படும் மகாலக்ஷ்மியை தான் திருமணம் செய்துகொள்வதாக கூறி கமலாவுடன் தொடர்பை வலுபடுத்திக்கொண்டான் கமலக்கண்ணன்.

ஆறுமுகம் இறந்த சில வருடங்களில், மகாவை தன் பெற்றோரின் சம்மதமின்றி திருமணமும் செய்துகொண்டான் கமலக்கண்ணன், குழந்தைகளும் பிறந்தன, மகாவிற்கு குழந்தை பிறந்த போதே அவளுடைய அம்மா கமலாவிற்கும் கமலகண்ணனுக்கும் குழந்தை பிறந்தது. இந்த தவறான தொடர்பை பற்றி ஏற்கனவே அறிந்த மகா கோபமடையவில்லை. தாசின் நண்பர் கண்ணன் வாங்கிய நிலமும் அதில் கட்டிய வீடும் இருந்தது, தனது தந்தை கண்ணனின் மறைவிற்குப்பின், சுந்தரும் முழுநேர குடிகாரனாக குடித்துவிட்டு தெருக்களில் படுத்து புரளுவான், தொடரும்............