Translate

7/12/2009

சிலைகள்

திருவள்ளுவர் சிலை கர்நாடகா மாநிலத்திலும், கர்நாடக கவிஞர் சர்வஜனின் சிலை தமிழகத்திலும் திறப்பது என்பது சிறந்த முயற்சிதான். ஆனால் எனக்கு பல வருடங்களுக்கு முன்பு சென்னை கிறிஸ்த்தவ கல்லூரியில் கேட்க்கப்பட்ட கேள்வி ஒன்று நினைவிற்கு வருகிறது.

ஆலய பிரவேசம் ஒன்று மட்டும் அரிஜனங்களை உயர்த்துமா, சுமார் 40 அல்லது 45 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கிறிஸ்த்தவக் கல்லூரியில் இந்த கேள்வியை கரும்பலகையில் எழுதி வைத்து இதற்க்கு சரியான பதிலும் விளக்கமும் எழுதி வரவேண்டும் என்று அங்கு அப்போது படித்த மாணவர்களிடம் கூறப்பட்டதாக எனது தகப்பனார் என்னிடம் சொல்லுவார். அப்போதெல்லாம் அரிஜனங்களை கோவிலுக்குள் போக சட்டப்படி அனுமதிக்கப்பட்டு, நடை முறையில் அரிஜனங்கள் கோவிலுக்குள் போக முடியாமல் தடுக்கப்பட்டும் வந்த காலம் [ இப்போது மாற்றப்பட்டு விட்டதாக நான் நம்புகிறேன் ].

இதற்க்கு சரியான விளக்கம் எழுதுவதற்காக, மாணவர் ஒருவர் என் தகப்பனாரிடம் வந்து சரியான விளக்கம் எழுதி தரும்படி கேட்டதாகவும் அதற்க்கு என் தகப்பனார், ஆலயப் பிரவேசம் ஒன்று மட்டும் அரிஜனங்களை உயர்த்தாது, மனமுவந்து என்றைக்கு நாம் அரிஜனங்களை மற்ற எல்லா இடங்களிலும் உயர்த்துகிறோமோ அன்றுதான் அரிஜனங்கள் முழுமையாக உயர்த்தப்பட்டதாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று எழுதும்படி சொன்னாராம். இந்த சம்பவம் தான் இந்த சிலை திறக்கும் விஷயத்திலும் எனக்கு தோன்றுகிறது.

வள்ளுவர் சிலையும் சர்வாஞ்சன் சிலையும் இரு மாநில முதல்வர்களால் திறந்து வைக்கப்பட்டாலும், கர்நாடக மக்களில் பெரும்பாலோரின் எண்ணத்தில் தமிழ்நாட்டின் மக்கள் என்றாலே விரோத மனப்பான்மை தான் இருந்து வருகிறது, தவிர தமிழர்களைப்பற்றிய விரோத போக்கை மாற்றிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லவே இல்லை, இந்த நிலையை அறிந்து கொள்ளவதற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நேரில் சென்று
பார்த்தால் உண்மை விளங்கும்.

கர்நாடகத்திற்குள் போனால் தமிழை சத்தம் போட்டு கூட பேச பயப்பட வேண்டிய நிலைதான் பெரும்பாலும் காணப்படுகிறது, ஆனால் தமிழ் நாட்டில் அதிலும் சென்னையில் அதிகமாக அடுத்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குவிந்து வருகிறார்கள், இவர்கள் எடுத்துக்கொள்ளும் உரிமையும் சுதந்திரமும் அளவற்றது, நாம் மற்ற மாநிலங்களுக்குப் போனால் அம்மாநிலத்து மக்கள் நம்மை சுதந்திரமாக வாழ அனுமதிப்பதே கிடையாது, வேறு நாட்டில் அதிலும் பாகிஸ்தானிலோ வேற்று கிரகத்திலோ வாழ்வது போன்று வாழத்தான் முடிகிறது.

திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஒன்று தமிழகத்தில் வந்திராவிட்டால் அரிஜனங்களின் நிலை இன்று என்னவாக இருந்திருக்குமோ அது போன்ற நிலை தான் இன்று கர்நாடகாவில் தமிழர்களுக்கு உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்நிலை தொடரக் கூடாது என்று தமிழக மூத்த தலைவர் கருணாநிதி அவர்கள் விரும்புவதில் எந்த தவறும் இல்லை, ஏற்கனவே பற்றியெரியும் தீயில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி எரிக்காமல் எரிந்து கொண்டிருக்கும் கர்நாடக வெறியர்களின் மனப்போக்கை மாற்றுவதற்கு தலைவர் அவருடைய வயதிற்கும் முதிர்ச்சிக்கும் ஏற்ற விதமாக சிலை திறப்பது என்பது வரவேற்கத்தக்கது.

இதனால் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைத்தாலும் ஒகனேகல் திட்டம் நிறைவேற்றப்பட்டாலும் தமிழக மக்கள் வரவேற்ப்பார்கள். எங்கோ ஒரு சிலர் இதற்க்கு முட்டுக் கட்டையாக இருந்தால் அது ஒரு பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்த போவது கிடையாது, ஆடுகிற மாட்டை ஆடி கறக்கணும் பாடுகிற மாட்டை பாடி கறக்கணும் என்ற வழி கலைஞருக்கு புதிதா.

சிலைகள் இடம்மாறினாலும் வரவேற்ப்போம், காவிரி வந்தாலும் வரவேற்ப்போம். ஒட்டு மொத்த தமிழக மக்களுக்காக செய்யப்படும் எந்த முயற்சியும் வெற்றியடையும் அதிலும் கலைஞர் கைவைத்தால் நிச்சயம் நன்மைதான். வாழ்க தமிழ் ! ! ! வளர்க தமிழகம் ! ! !