Translate

7/05/2009

அந்தரங்கம் பாவம் நிறைந்தது - [சுலோச்சனா] 1- பாகம்

பார்வதி விசுவாசமான வேலைக்காரி மட்டும் அல்ல, அவசரத்திற்கு உதவும் பெண்தெய்வம் அவளது எசமானிக்கு. எசமானி சுலோச்சனாவிற்கு நாற்பத்தி இரண்டு வயசாகிறது. கூட்டு குடும்ப வாழ்க்கை. சுலோச்சனாதான் முதல் மருமகள், மாமியார் மாமனார் கணவனின் தம்பிகள் தங்கை என்று எல்லோரும் ஒன்றாக இருக்கும் வீடு, இதில் கணவனது இரண்டு தம்பிகள் ஒரு தங்கைக்கும் திருமணம் செய்து வைத்தபின் மாமியாரும் மாமனாரும் சுலோச்சனாவுடன் நிரந்தரமாக இருந்து வந்தனர்.

சுலோச்சனாவிற்கு இரண்டு பெண்கள் ஒரு ஆண், மூத்த பெண்
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாள் இரண்டாமவள் கான்வென்டில் ஒன்பதாம் வகுப்பும் பையன் கல்லூரியில் முதலாம் ஆண்டும் படித்து வந்தனர். சுலோச்சனாவின் கணவனுக்கு மத்திய அரசு வேலை.

அசைவ உணவு சாப்பிடாத குடும்பம். சுலோச்சனாவிற்கு காசநோய் வந்துவிட்டதால் மருத்துவர் தினமும் முட்டை சாப்பிட சொல்லி இருந்தார், முடிந்தால் அசைவ உணவும் சாப்பிட சொல்லி இருந்தார், சுலோச்சனாவின் மாமியாரும் மாமனாரும் அசைவம் என்ற பேச்சு கூட காதில் விழக் கூடாது என்பவர்கள், இந்நிலையில் தான் வேலைகாரி பார்வதியின் உதவி அதிகம் தேவைப்பட்டது, தினமும் நாட்டுக் கோழி முட்டை வாங்கி வந்து உடைத்து வாயில் ஊற்றுவது ஆட்டுக்கால் சூப் செய்து கொண்டு
வரச்சொல்லி குடிப்பது போன்ற உதவிகளை மாமியார் மாமனாருக்கு தெரியாமல் செய்து கொண்டாள் சுலோச்சனா.

இதற்க்கு செலவுக்கு பணம் தேவைப்பட்டதால், [ வரவு செலவுகள் மாமியாரும் மாமனாரும் தான் கவனித்து
வந்தனர்] பார்வதியின் கணவன் கட்டிடம் கட்டும் பணியில் இருப்பவன் அதனால் வீட்டின் கட்டுமான பணிகளுக்கு பணம் தேவை என்று சொல்லி பார்வதியின் கணவனை வரச்சொல்லி அவனிடம் பணம் கொடுத்து வீட்டின் ரிப்பேர் வேலை செய்யப்போவதாக ஆட்க்களை வரவழைத்து இவ்வாறாக செலவிற்கான பணம் பெற்று காசநோய்க்கான அசைவ உணவுவகைகளை கொண்டுவந்து கொடுப்பாள் பார்வதி.

காச நோய் வந்ததிலிருந்து சுலோச்சனாவின் கணவனுக்கும் சுலோச்சனாவிற்க்குமான உடலுறவு தடைபட்டது, இதற்க்கு முன்பே மாமியார் மாமனாரின் கட்டுப்பாட்டில் குடித்தனம் நடந்து
கொண்டிருந்ததால் ஏற்கனவே சுலோச்சனாவும் அவள் கணவனும் ஒருமித்து இருப்பது குறைந்துவிட்டது.

இவளது அவஸ்தையை புரிந்து கொண்ட பார்வதி கணவன் வேலை செய்யும் கட்டிட பொறியாளர் மதனை சுலோச்சனாவிற்கு அறிமுகம் செய்து வைத்தாள், மாமியாரும் மாமனாரும் மற்ற மகன்களின் வீடுகளுக்கு அல்லது சொந்த ஊருக்கு போய் சில மாதங்கள் தங்கிவிட்டு வருவது வழக்கம் அந்த சமயங்களில் சுலோச்சனாவின் வீட்டிற்க்கு மதனின் வருகை தவறாது, இதனால் கர்பமுற்ற சுலோச்சனாவிற்கு பார்வதியின் துணையோடு, கருகலைப்பும் குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

இது போல பார்வதியின் துணை சுலோச்சனாவிற்கு மிக முக்கியமாகியது. [
தொடரும்......]