Translate

7/05/2009

அந்தரங்கம் பாவம் நிறைந்தது - [சுலோச்சனா] 2 - பாகம்

சரோஜாவின் கணவர் ரங்கா அரசுமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் மாநிலத்தின் தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரி, வாழ்வில் படிப்படியாக முன்னுக்கு வந்தவர், சரோஜா அவருக்கு முறை பெண், சரோஜாவிற்கு முறைமாமன் ரங்காவை மிகவும் பிடிக்கும், சரோஜாவின் அப்பா பெயர் பெற்ற கண் மருத்துவர், மூத்தமகள் சரோஜா நன்றாக படித்து மருத்துவர் ஆக வேண்டும் என்பது அவரது பிரியம் ஆனால் சரோஜாவிற்க்கோ அதிகம் வசதி இல்லாத தன் அத்தை மகன் ரங்காவை திருமணம் செய்தது கொள்ளவேண்டும் என்பதால் அதிகம் படிக்காமல் வீட்டு காரியங்களை கவனிப்பதில் அதிக கவனம் செலுத்தி கல்லூரியில் சேர்ந்து படிப்பதை தவிர்த்து வந்தாள்.

ரங்கா B.A. (Economics) படித்து முடித்துவிட்டு வங்கியில் வேலை கிடைப்பதற்காக பரீட்சை எழுதி அதில் தேர்ச்சி பெற்று, படிபடியாக உயர்ந்து இன்று மாநிலத்தின் எல்லா கிளைகளுக்கும் முதன்மையான அதிகாரியாக உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டார், ரங்காவிற்கு சரோஜாவின் மீது காதல் இல்லை, இருவருக்கும் ஆண் குழந்தை வேண்டும் என்று சொல்லி நான்கு அழகிய பெண்குழந்தைகள் தான் பிறந்தது, சரோஜா மிகவும் கோபக்காரி ஆனால் மிகவும் நேர்மையான வீட்டு நிர்வாகி.

அடுத்த வீட்டில் பார்வதியும் சுலோச்சனாவும் செய்யும் காரியங்களை பார்த்து நடுநடுங்கி வியர்த்து விறுவிறுத்து போய் விடுவாள் சரோஜா. முதல் முறையாக மதன் சுலோச்சனாவின் வீட்டிற்க்குள் வந்த போது எதேச்சையாக அவர்கள் படுக்கையறையின் ஜன்னல் வழியே சுலோச்சனாவும் மதனும் கட்டி பிடித்து இருந்த நிலையில் பார்த்து விட்டாள் சரோஜா. அன்று முழுவதும் கைகால் நடுங்கி கொண்டே இருந்தது, இரத்த அழுத்தமும் அதிகமாகி விட்டது, உடனே தனது அப்பாவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டிற்க்கு வரவழைத்து உடல் நலம் கவனிக்கும்படி ஆகி விட்டது. சரோஜாவின் அப்பாவிற்கு ஆச்சரியம் திடீரென்று சரோஜாவிற்கு உடல் நிலை இத்தனை மோசமாக என்ன காரணமாக இருக்கும் என்பது விளங்காமலேயே மருந்துகளை கொடுத்து கவனித்துக் கொள்ளும்படி கூறி விட்டு சென்றார்,

சரோஜாவின் வீட்டு விசுவாசமான வேலைக்காரி பங்கஜம், பங்கஜத்திடம் எப்போதுமே எல்லா பிரச்சினைகள் பற்றி மனம் விட்டு பேசுவாள் சரோஜா, அது போல சுலோச்சனாவின் தகாத உறவை ஜன்னல் வழியே தான் பார்த்த பின் தனது உடல் நிலை மிக மோசமான விவரத்தைப் பற்றி சொல்லி மனதை தேற்றிக் கொண்டாள் சரோஜா.

மதன் சுலோச்சனாவின் வீட்டிற்கு அடிக்கடி வருவதை பார்க்க பிடிக்காத சரோஜா தன் வீட்டு ஜன்னல் கதவுகளை எப்பொழுதும் மூடி வைத்துக் கொள்ள ஆரம்பித்தாள், இருந்தாலும் சுலோச்சனாவின் இந்த செய்கையால் சரோஜா அதிர்ச்சிக்குள்ளானாள்.

சுலோச்சனா பார்ப்பதற்கு அழகானவள், அவள் தெருவில் நடந்து போகும் போது பழைய காலத்துப் பெண்களைப் போல புடவையின் முந்தானையை இழுத்து போர்த்திக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் ஓய்யாரமாக அடி மேல் அடி எடுத்து வைத்து சிலை நடந்து போவது போல நடந்து செல்வாள், அவள் நடந்து செல்லும் அழகே அருமை தான், சுலோச்சனாவை பார்ப்பவர்கள் யாராலும் அவளது மறைவான மதனின் சிநேகம் பற்றி சொன்னால் நம்புவதற்கே கூசுவார்கள், அப்படிப்பட்ட உருவமும் நடை உடை பாவனையும் கொண்டவள் சுலோச்சனா.
இதனால் தான் சரோஜாவிற்கு அவளது மறைவான மதனுடனான தொடர்பு பேரதிர்ச்சியை கொடுத்தது.


சரோஜாவின் வீடும் சுலோச்சனாவின் வீடும் அடுத்து அடுத்து இருந்ததோடு மட்டும் இல்லாது சரோஜாவின் வீட்டிலிருந்து பார்த்தாலே சுலோச்சனாவின் படுக்கை அறை முழுவதும் ஜன்னல் வழியே நன்றாக தெரியும்,

இந்நிலையில் சுலோச்சனாவின் மூத்த பெண் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வங்கியில் வேலை கிடைத்து திருமணத்திற்கு தயாராகி விட்டாள், கல்லூரிக்குபோய் வந்த போது வழியில் கிடைத்த ரகுவின் காதலில் சுலோச்சனாவின் மகள் கிரிஜா மதி மயங்கி விட்டாள், சுலோச்சனாவின் நாத்தனார் அவளது கணவனதுவழியில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்தன, இந்த சமயத்தில் தன் தாய் சுலோச்சனாவிடம் தன் காதலைப் பற்றி சொல்லி தன் காதலனை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடித்தாள் கிரிஜா, ஒரு வழியாக மகளை சமாதானம் செய்து திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து சுலோச்சனாவின் நாத்தனார் பார்த்த மாப்பிள்ளையுடன் திருமணமும் நடந்து முடிந்து கிரிஜா கணவனுடன் பெங்களூருவிற்கு போய் விட்டாள்,

முதல் வருடத்திலேயே ஒரு ஆண் குழந்தைக்கு தாயானாள் கிரிஜா, [
தொடரும்....... ]