Translate

7/11/2009

இன்றைய செய்தி

பிரசங்கி, அதிகாரம் - 2

1. நான் என் உள்ளத்திலே சொல்லிக் கொண்டது என்னவென்றால்: வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப் பார்ப்பேன், இன்பத்தை அனுபவி என்றேன்; இதோ இதுவும் மாயையாயிருக்கிறது.

2. நகைப்பைக் குறித்து, அது பைத்தியம் என்றும், சந்தோஷத்தைக் குறித்து, அதுஎன்ன செய்யும்? என்றும் சொன்னேன்.

3. வானத்தின் கீழ் மனுபுத்திரர் உயிரோடிருக்கும் நாளளவும் பெற்று அனுபவிக்கதக்கது இன்னதென்று அறியும் பொருட்டு என் இருதயத்தைக் ஞானத்தால்
தேற்றிக் கொண்டிருக்கும் போதே, நான் என் தேகத்தை மதுபானத்தால் சீராட்டிக்கொண்டிருக்கவும், மதியீனத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும் என் உள்ளத்தில் வகை தேடினேன்.

4. நான் பெரிய வேலைகளை செய்தேன்; எனக்காக வீடுகளை கட்டினேன், திராட்சைத்தோட்டங்களை நாட்டினேன்.

5. எனக்காக தோட்டங்களையும் சிங்காரவனங்களையும் உண்டாக்கி, அவைகளில் சகலவகைக் கனிவிருட்சங்களையும் நாட்டினேன்.

6. மரங்கள் பயிராகும் தோப்புக்கு நீர்ப்பாச்சுகிரத
ற்கு குளங்களையும் உண்டுபண்ணினேன்.

7. வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்தேன்; வீட்டிலும் வேலைக்காரர் பிறந்தார்கள்; எனக்கு முன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஆடு மாடு முதலான திரண்ட ஆஸ்திகள் எனக்குஇருந்தது.

8. வெள்ளியையும் பொன்னையும், ராஜ சம்பத்தையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன்; சங்கீதக்காரரையும் சங்கீதக்காரிகளையும், மனுபுத்திரருக்கு இன்பமான பலவித வாத்தியங்களையும் சம்பாதித்தேன்.

9. எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் நான் பெரியவனும் திரவிய சம்பன்னனுமானேன்; என் ஞானமும் என்னோடேகூட இருந்தது.

10. என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்கு தடைபண்ணவில்லை; என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என் மனம் மகிழ்ச்சிக் கொண்டிருந்தது; இதுவே என் பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன்.

11. என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.

12. பின்பு நான், ஞானமானது என்ன என்றும், பைத்தியமும் மதியீனமும் என்ன என்றும் பார்த்து அறியும்படி திரும்பினேன்; ராஜாவுக்குப் பின்வரும் மனுஷன் என்ன செய்யக்கூடும்? செய்ததையே செய்வான்.

13. இருளைப்பார்க்கிலும் வெளிச்சம் எவ்வளவு உத்தமமோ, அவ்வளவாய் மதியீனத்தைப்பார்க்கிலும் ஞானம் உத்தமமென்று கண்டேன். [தொடரும்]