Translate

7/09/2009

லட்டு

தொலைக்காட்ச்சியில் வெளியாகும் விளம்பரங்களை பார்க்கும்போது தலைச்சுற்றல் தான் மிச்சம், சமீபத்தில் ஒரு சாக்கலேட்டு விற்ப்பனையாவதற்கு மிக கேவலமான விளம்பரம் தயாரித்து வெளியிட்டு கொண்டிருக்கிறது யாவரும் அறிந்ததே, தரக்குறைவாக பெண்களையும் அவர்களது தனிமையையும் தவறாக பயன்படுத்த தூண்டும் சமுதாய விரோத போக்கை எதிர்த்து பெண்கள் நல சங்கங்கள் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், " லட்டு தின்ன ஆசையா, பாலும் சாக்கலேட்டும் கலந்த லட்டு, ஒரு ரூபாய்க்கு ஒண்ணு " என்று அலறும் குரலில், ஒரு பெண் உதவி என்று ஒரு வீட்டில் வந்து கேட்க்கும்போது இப்படியா ஒரு கேடுகெட்ட நினைவு மனதில் தோன்றுவதாக சித்தரிப்பது ??? விளம்பரம் செய்வதற்கு வேறே எந்த யோசனையும் கிடைக்கவில்லை என்றால் ஒரு பெண் தனியே வந்து உதவி கேட்ப்பதை இப்படி தவறாக நினைக்கும்படி, தூண்டுவது போன்ற விளம்பரம் செய்வதை சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிகள் ஏற்றுக்கொள்ள கூடாது.

குழந்தைகள் தொலைக்காட்ச்சியில் வரும் ஒவ்வொரு அசைவையும் மிக கவனத்துடன் பார்க்கின்றனர், குழந்தையிலேயே தவறான நினைவுகளை ஏற்ப்படுத்தும் விதத்தில் இப்படிப்பட்ட விளம்பரங்கள் தேவைதானா. எத்தனை காலத்திற்கு பெண்ணை காண்பித்து பொருட்க்களை வியாபாரம் செய்ய நினைக்கும் போக்கு தொடரும்? ஒரு குழந்தையை காண்பித்து சாக்கலேட் விற்ப்பனை செய்ய முடியாதா? கேடு கெட்ட மனிதர்கள்.