Translate

7/07/2009

அந்தரங்கம் பாவம் நிறைந்தது - [கிரிஜா] 3 - பாகம்

வங்கியில் பதவி உயர்விற்கு டிரைனிங் போவதற்கு அடுத்த ஊரில் சென்று அறை எடுத்துதங்க போவதாக காரணம் சொல்லிவிட்டு சிறுவன் ஸ்ரீராமை கிரிஜா தன் கணவனிடமே ஒப்படைத்துவிட்டு அடுத்து உள்ள ஒரு ஊரில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி விட்டாள், ஒரு மாதத்திற்கு மேலாகியும் கிரிஜா திரும்பி வராததால் கிரிஜாவின் கணவன் கிரிஜாவின் அம்மா சுலோச்சனாவிற்கு கடிதம் எழுதி உடனே வரும்படி அழைத்திருந்தான்,

சுலோச்சனாவும் கிளம்பி பெங்களூரு போய் தன் பேர குழந்தையுடன் கிரிஜா தங்கி இருந்த தனி அறைக்கு சென்று பார்த்தாள், குழந்தை ஸ்ரீராம் அம்மா கிரிஜாவை பார்க்காமல் இருக்க முடியாத காரியம் அதனால் திரும்பி வந்து விடும்படி கேட்ட போது, இனி தன் கணவனுடன் வாழப்போவது இல்லை என்று முடிவாக சொல்லிவிட்டாள் கிரிஜா தன் அம்மாவிடம்.

இதை எப்படி சமாளிப்பது என்பது புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் சுலோச்சனா, இந்நிலையில் கிரிஜாவின் கணவனுக்கு எதனால் கிரிஜா தன்வீட்டிற்க்கு இன்னும் திரும்பாமல் இருக்கிறாள் என்று புரியவில்லை, இதனால்அவன் அவளுடைய வங்கிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டிற்க்கு எப்போது குழந்தையுடன் வரப்போகிறாய் என்று விசாரித்த வண்ணமிருந்தான்.

அப்படி அவன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஒருநாள் கேட்டபோது கிரிஜா சொன்ன பதிலால் அதிர்ச்சியடைந்தான், தான் இனி ஒருபோதும் அவனுடன் ஒன்றாக வாழப்போவதில்லை என்றாள். எதற்காக அவள் இப்படியொரு முடிவிற்கு வந்தாள் என்பது பற்றி தெரிந்து கொள்ள கிரிஜாவின் அம்மா சுலோச்சனாவிர்க்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடனே தன் வீட்டிற்க்கு வந்து எதற்காக கிரிஜா தன்னுடன் வாழ மறுக்கிறாள் என்ற விவரம் சொல்லும்படி கேட்டான்.

சுலோச்சனா தயங்கி தயங்கி சொன்ன பதிலில் கிரிஜாவின் கணவன் ராஜேந்திரன் இடிவிழுந்தவன் போல திகைப்படைந்தான், கிரிஜாவிற்கு திருமணத்திற்கு முன்பிருந்த காதலை மறக்க முடியவில்லை என்பதாலும் தங்களின் வற்புறுத்தலினாலேயே ராஜேந்திரனை கிரிஜா திருமணம் செய்து கொண்டாள் என்பதையும் எடுத்துச் சொன்னாள் சுலோச்சனா.

அன்று இரவு அங்கே தங்கிவிட்டு அடுத்த நாள் சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டாள் சுலோச்சனா. சுலோச்சனா வந்து சேர்ந்த அடுத்தநாள் ராஜேந்திரன் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டான் என்ற விவரம் தந்தியில் வந்தது.

அடுத்த வாரத்தில் கிரிஜாவும் அவளது சாமான்களும் குழந்தை ஸ்ரீராமும் சுலோச்சனாவின் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தனர். குழந்தை ஸ்ரீராம் விவரம் ஒன்றும் அறியாத இரண்டு வயது குழந்தை. அநியாயமாக ஒரு உயிர் பிரிவதற்கு காரணம் யார், மகளை தட்டி கேட்க முடியாமல் வாயடைத்து இருந்தனர் வீட்டிலிருந்த அனைவரும்.

தனது காதலனை காண விரைந்தாள் கிரிஜா, கிரிஜாவின் காதலன் ராகவனோ திருமணமாகி நிம்மதியாக வாழ்ந்து வந்தான், இடையில் இவள் செய்த இந்த காரியம் யாருக்கும் பிரயோஜனமில்லாமல் போனது தான் மிச்சம்,
இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்த போது இடமாற்றம் உடனே கிடைக்கவில்லை என்பதால் வங்கி வேலையையும் ராஜினமா செய்துவிட்டாள், அத்துடன் ராஜெந்திரனோடு வாழ்ந்த இடத்தில் தொடர்ந்து இருந்தால் வேலை செய்யும் இடத்தில் உள்ளவர்களின் பேச்சுக்களுக்கு ஆளாக நேரும் என்பதால் வேலையை விட்டுவிட்டாள் கிரிஜா.

ராஜேந்திரன்
வேலை செய்து கொண்டிருந்த இடத்திலிருந்து கிடைத்த பணத்தையும் தன் வேலையை ராஜினமா செய்த போது கிடைத்த பணத்தையும் வைத்து ஒரு வீடு வாங்கி அதை வாடகை விட்டு, இப்படியாக ஒரு அர்த்தமற்ற வாழ்க்கையை தேர்வு செய்தாள் கிரிஜா, சுலோச்சனா தன் மகள் கிரிஜாவிற்கு இதை எடுத்து சொல்ல கூடதெரியாமல் இருந்தாளா அல்லது எடுத்து சொல்லியும் கிரிஜா கேட்கவில்லையா என்பது புரியாதபுதிர்.

கிரிஜாவின் அப்பா இனி நீ என்னை உன் அப்பா என்று சொல்லாதே என்று சொல்லி விட்டார், அதற்க்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று வெறி பிடித்தவள் போல தன் பெயரை கிரிஜாராஜேந்திரன் என்று வைத்துகொண்டாள். ! ! ! !