Translate

7/11/2009

அந்தரங்கம் பாவம் நிறைந்தது [மைதிலி] பாகம் - 2

இந்த நிலையில் மைதிலியின் வீட்டிற்கு ஜெயராமன் தட்டச்சு பணிகளை கொடுப்பதற்காக அடிக்கடி சென்று வந்தான், இவர்களது உறவில் உடலுறவும் ஏற்ப்பட்டது. ரகு கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஒரு அதிகாரியின் சிபாரிசு பெற்று பிரபல நிறுவனமொன்றில் வேலை வாங்கி கொடுத்தான் ஜெயராமன். ரகுவின் வருமானமும் வந்ததால் வீட்டு கடனை திருப்பி கொடுப்பதற்கு சிரமம் இல்லையென்றாலும் குடும்பம் நடத்துவது அத்தனை சுலபமாக இல்லை.

மாலதியும் படிப்பை முடித்து அரசுடைமையாக்கப்பட்ட வங்கியொன்றில் வேலை கிடைத்து ஒருவருடம் சென்ற பின்பு தினமும் மாலதி வீட்டிற்க்கு தாமதமாக வர ஆரம்பித்தாள், மைதிலி ஏன் தினமும் தாமதமாக வருகிறாய் என்று கேட்டால் வேலை அதிகம் என்று காரணம் சொல்லுவாள், அவளது நடத்தையில் ஏற்ப்பட தொடங்கியது அவளது தாய் மைதிலிக்கு மனவருத்தத்தை உண்டாக்கியது. ஒருநாள் தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவனை திருமணம் செய்துகொள்ள போவதாக சொல்லிவிட்டு வீட்டை விட்டு போய் விட்டாள் மாலதி.

ரகுவிற்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தாள் மைதிலி. ரகுவிற்கு திருமணம் செய்தவுடன் நீரஜாவிர்க்கும் திருமணம் நடைபெற்றது, நிர்மலாவிற்கு மாநில அரசு உத்தியோகம் கிடைத்திருந்தது, இதனால் நிர்மலாவிற்கும் வரன் பார்க்க தொடங்கினாள் மைதிலி.

ஜெயராமன் தனது institute சேர்ந்திருந்த மாணவர்கள் தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்திற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதில் அரசு அங்கீகாரம் பெற்ற அதிகாரியின் கையொப்பம் பெற தனது மனைவியிடம் கொடுத்து கையொப்பம் வாங்கி வரும்படி சொல்லுவான்,
சொந்த வேலைகளை அலுவலகத்தில் வேலை பார்க்கும் சமயத்தில் செய்ய முடியாது என்பதாலும் மற்ற ஊழியர்களின் அனாவசிய பேச்சிற்கு ஆளாக வேண்டாம் என்பதாலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தன் மேலதிகாரியுடன் வெளியில் எங்காவது சென்று கையொப்பம் பெற வேண்டியதாகும், இதனால் ஜெயராமன் தன் மனைவியின் நடத்தையை சந்தேகித்து வந்தான்,

இதை தவிர்க்க வீட்டின் அருகே இருந்த அரசு அதிகாரியிடத்தில் சென்று கையொப்பம் பெற்று வருவாள் ஜெயராமனின் மனைவி சத்யா, அப்படி எந்த அதிகாரியிடம் போய் கையொப்பம் பெற்று வந்தாலும் அங்கே அவருடன் இரவு 11 மணி வரை காத்திருந்து கையொப்பம் பெற்று தருவாள், இதனால்அவளை மேலும் சந்தேகத்துடன் பார்த்து வந்தான் ஜெயராமன். ஊரில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் அவளது நடத்தையை பற்றி தவறாக பேசிவந்தனர்.

மைதிலியின் தோல் முழுவதும் அங்காங்கே அழுக ஆரம்பித்தது, மருத்துவரிடம்கொண்டு சென்ற போது பலரிடம் உடலுறவு கொண்டதால் ஏற்ப்பட்ட ஒரு வகை தோல் வியாதி என்பது தெரிய வந்தது. தோல் வியாதியை குணப்படுத்தமுடியாமல் மைதிலி இறந்து போனாள், நிர்மலாவிற்கு திருமணம் ஆகவில்லை, செவ்வாய்தோஷம் என்று சொல்லி வந்த வரங்கள் எல்லாம் திரும்பி போனது.

ரகுவுடன் தங்கி
இருந்தாலும் நிர்மலா சோகத்தில் வாழ்த்து வந்தாள், தன் தாயின் நடத்தைகள் ஒன்றையும் அறியாத நிர்மலாவிற்கு அவளது மரணத்திற்குப் பின் மன நிம்மதியும் பரி போனது, இரண்டு அக்காள்கள் இருந்தும் யாராலும் அவளுக்கு ஆறுதல் இல்லை. வரும்படி இருந்தும் வேதனை என்ற வறுமையில் காலம் சென்று கொண்டிருந்தது. [தொடரும்.................]