Translate

7/11/2009

அந்தரங்கம் பாவம் நிறைந்தது [ மைதிலி] பாகம்-1

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற பழமொழிக்கேற்ப தாமோதரன் உள்ளம் நொறுங்கி போய் இருந்தது, வீடு கட்ட வாங்கிய தொகையையும் வட்டியையும் எப்படி கட்டித்த் தீர்க்க போகிறோம் என்று மனம் கிடந்தது தவித்தது, வீட்டின் கட்டுமான வேலைகள் முழுவதுமாக முடியவில்லை அதற்குள் பணம் முழுவதும் தீர்ந்து விட்டது, அரைகுறையாய் நின்றிருந்த வீட்டு பணிகளை அப்படியே நிறுத்தி விட்டு கட்டிய வீட்டிற்க்கு குடித்தனம் சென்றாகி விட்டது,

தாமோதரனின் மனைவி மைதிலி சொன்னபடி வாடகை கொடுப்பதை விட கடனில் வீட்டை கட்டி குடி போனால், வாடகை பணத்துடன் இன்னும் கொஞ்சம் கூட சேர்த்து வீடு கட்ட வாங்கிய கடனை அடைத்துவிடலாம், எத்தனை வீடு வாடகைக்கு மாற்றுவது என்று அவள் சொன்னபடியே செய்துவிட்டார், ஆனால்
தனது சொற்ப வருமானத்தில் கடன் தொகையை திருப்பி கட்டித்தீர்க்க முடியுமா மனைவியின் பேச்சை வேத வாக்காக எண்ணி தைரியமாக இறங்கி விட்டோமே இனி எப்படி குடும்பத்தை நடத்த போகிறேன், இரவும் பகலும் தாமோதரனின் மனம் தவியாய் தவித்தது.

தாமோதரனுக்கு காலை பொழுது விடிந்ததிலிருந்தே நெஞ்சுவலி வீட்டின் நடுவில் தொங்கிகொண்டிருந்த ஊஞ்சலில் படுத்தவர் எழுந்து கொள்ளவே இல்லை, மைதிலி தாமோதரனின் மனைவிக்கு நாற்ப்பது வயது, மூத்தவன் ரகுராமன், கல்லூரியில் B.A. இறுதியாண்டு, இரண்டாவது பெண் மாலதி B.Sc. முதலாண்டு, அடுத்தவள் நீரஜா ப்ளஸ் ஒன், அதற்க்கடுத்தவள் நிர்மலா பத்தாம் வகுப்பில், இத்தனை குழந்தைகளை எப்படி வளர்த்து ஆளாக்க போகிறேன் எந்த வருமானத்தில் குடும்பம் நடத்துவது என்ற யோசனையில் இருந்தாள் மைதிலி , கணவன் வைத்துவிட்டு சென்ற ஒரே சொத்து கடனிலிருந்த வீடும் ஒரு பழைய தட்டச்சு இயந்திரமும்.

வெளியே வாசலில் ஒரு அட்டையில் இங்கு தட்டச்சு செய்து தரப்படும் என்று பேனாவில் கொட்டை எழுத்துக்களில் எழுதி தொங்க விட்டிருந்தாள். ஒருவரும் தட்டச்சு செய்வதற்கு வரவில்லை, சிறிது தொலைவில் இருந்த தட்டச்சு கற்றுகொடுக்கப்படும் institute ஒன்று இருந்தது, அதில் சென்று அவர்களால் நிராகரிக்கப்படும் அல்லது நேரமின்மையால் கைவிடப்படும் தட்டச்சு வேலைகளை தனது வீட்டிற்க்கு திருப்பி அனுப்பும்படி சொல்லிவிட்டு வந்தாள் மைதிலி,

கல்யாணராமன் ஜெயராமன் இருவரும் பிரபல கம்பெனியில் வேலை ஜெயராமன் தினமும் சாயங்காலம் சரியாக 5.30 மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுவான், அவனது அப்பாவிற்கு தட்டச்சு சொல்லி கொடுக்கும் institute தான் முழு நேர உத்தியோகம் என்பதால் கருத்து தெரிந்த நாட்களிலிருந்தே institute வேலைகளை செய்து பழக்கம்,
இருவரும் பிரபல கம்பெனியல் வேலை செய்து வந்தாலும் ஜெயராமனும் அவனது அண்ணன் கல்யாணராமனும் institute நடத்தி வருவதை நிறுத்த விரும்பவில்லை. இருவருக்கும் திருமணமாகி குழந்தைகளும் இருந்தது.

ஜெயராமனுக்கு பத்து வயதிற்குள் இரண்டு பெண் குழந்தைகள், மனைவி சத்யபாமா மத்திய அரசு பணியில் சுருக்கெழுத்து பணியுடன் ஒரு மேலதிகாரிக்கு காரியதரிசியாக பணிபுரிந்து வந்தாள், எப்போதும் வீட்டிற்கு தாமதமாக வரும் தன் மனைவியுடன் கருத்து வேறுபாட்டின் காரணமாக கட்டில் பிரிந்தே இருந்தது. [
தொடரும்............ ]