Translate

7/31/2009

கட்டாய கல்வி திட்டம்

மனிதவள மேம்பட்டு அமைச்சர் கபில் சிபல் அறிவித்திருக்கும் ஆறுவயதிலிருந்து பதினான்கு வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கு அடிப்படைகல்வியை கட்டாய கல்வி ஆக்கும் திட்டம் என்பது வரவேற்கத்தக்கது. அடிப்படை கல்வி கட்டாயம் ஆக்கப்படுவது பல வருடத்திய முயற்சி, இன்று அதற்கான மசோதா ஒருமனதாக நிறைவேற்றபடுவதும் சிறந்ததே. ஆனால் நம் நாட்டில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக இருக்கிறார்களா என்றால் குழந்தைகள் மூலம் வருமானம் கிடைத்து அதைக்கொண்டு வயிற்றை கழுவினால் போதும் என்ற நிலையில் இருப்போரின் எண்ணிக்கை தான் கிராமப்புறங்களிலும் நகர்புறத்துக் குடிசைவாசிகளிடமும் காணப்படும் முக்கிய அறியாமை என்று சொல்லலாம்.

அரசு அடிமட்டமக்களின் மேம்பாட்டைக் கருதி செயல்படுத்தும் பல சிறந்ததிட்டங்களை அவர்கள் இன்னும் அறியாமலிருப்பதே இதற்க்கு மிக பெரியகாரணம். இவர்கள் எப்போது கண்விழித்து தங்களுக்கென்று அரசாங்கத்தில் கிடைக்கும் திட்டங்களின் பலனை முழுமையாக பெறபோகிரார்களோ அன்றுதான் இந்தியாவின் முழுதிட்டங்களும் முழுமை அடைந்ததாக எண்ணி சந்தோஷப்பட முடியும்.

ஒரு பிச்சைக்கார கிழவனின் கதையைப் போல, பலவருடம் பிச்சை எடுத்து தன்வாழ்க்கையை அரைவயிறு நிரம்பினால் போதும் என்று வாழ்ந்து மரணமடைந்தஅந்த பிச்சைக்காரக் கிழவன் இறந்த பின் அவன் அதுவரை உட்கார்ந்து பிச்சையெடுத்த இடத்திலேயே அடக்கம் செய்ய குழி தோண்டிய போது அந்தகுழியில் பணமும் வைரமும் பொன்னும் குவிந்து கிடந்ததை பார்த்தவர் அதிசயித்துப் போனார்களாம். அதுபோல நம் நாட்டில் அடிமட்ட மக்களின் மேம்பாட்டிற்காக எத்தனையோ நலத்திட்டங்களை அரசு வரிந்துகட்டிக்கொண்டு செயல்படுத்தி வருவதை இன்னும் அறியாத மக்களின் எண்ணிக்கை ஏராளம், ஆதிவாசி மக்கள், மலைவாழ் மக்கள் போன்றவர்கள் இன்னும் வெளியுலகமே என்னவென்று கூட தெரியாமல் அந்த பிச்சைக்காரகிழவனைப் போல வாழ்ந்து வருகிறார்கள் என்பது நிஜம்.


7/29/2009

உமர் அப்துல்லா

காஷ்மீர் மாநிலத்தின் அரசியலில் ஏற்ப்பட்டிருக்கும் சர்ச்சையில் அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாவை பதவியிலிருந்து விலகச்சென்னதற்கான காரணம் அம்மாநில இளம்பெண்களை கர்ப்பழித்தவர்களின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருப்பவர்களின் வரிசையில் உமர் அப்துல்லாவின் பெயர் இடம்பெற்றிருப்பதன் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்ச்சிதலைவர் குறிப்பிட்டிருக்கிறார்.

வழக்கு கோர்ட்டில் இருந்துவரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகளா இல்லையா என்பதை கோர்ட்டில் தீர்ப்பு சொல்லும்வரை, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் யாரும் குற்றவாளிகள் என்று ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது, எதிர்கட்சிக்காரர்கள் இதை காரணம் காட்டி உமர்அப்துல்லாவை பதவி விலக சொல்வது கோர்ட்டையும் நீதியையும் அவமதிக்கும் செயல்.

குற்றம் சுமத்தப்படாமல் வெளியில் இருக்கும் எத்தனையோ பேர் நிரபராதிகள் வரிசையில் இருக்கலாம், அவர்கள் குற்றவாளிகளாக இருந்தும் நிருபிக்கபடாதவரையில் சட்டத்தின் முன் நிரபராதிகள் என்ற பெயரில் நடமாடிக்கொண்டிருக்கலாம், இதனால் ஒருவரை குற்றவாளி என்று கோர்ட் உத்தரவு பிறபிக்கும்வரை ஜனநாயக நாட்டில் வழக்கில் இருக்கும் ஒரு குற்றவாளியை பதவி விலக சொல்வது அந்த எதிர் கட்சித் தலைவரின் ஜனநாயக விரோத செயலையல்லவா வெளிப்படுத்துகிறது?

உமர் அப்துல்லா உணர்ச்சிவசப்பட்டு ராஜினமா செய்த்திருந்தாலும் அவருடைய மனசாட்சி சுத்தமானதாக இருப்பதினால் அவர் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறார் என்பதும் விளங்குகிறது. செய்யாத குற்றத்தை ஒருவர் மீது சுமத்தும் போது அந்த மனிதரின் மனநிலை எப்படி இருக்க முடியுமோ அப்படிதான் உமர் அப்துல்லாவின் செயலும் இருந்தது, ஆனால் உமர் அப்துல்லா எதிர்கட்ச்சிகாரரின், வேண்டுமென்றே சொல்லப்பட்ட அர்த்தமற்ற குற்றசாட்டிற்கு மதிப்பு கொடுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் பதவியை விட்டு விலகியிருக்ககூடாது.

எத்தனையோ முறை முதலமைச்சர் மு. கருணாநிதியை பதவிவிலக எதிர்கட்சிகள் வற்ப்புருத்தியும் தன் ராஜினாமாவால் ஒரு மாற்றமும் நிகழபோவது இல்லை என்பதை முழுமையாக அறிந்த கலைஞர் தன் பதவியை ராஜினமா செய்யவில்லை என்பது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஆனால் திருமதி சோனியாகாந்தி அவர்களை பிரதமமந்திரியாக பதவியேற்க கூடாது என்று எதிர்கட்சிகள் ஓலம் போட்டு தடுத்த போது, இந்த பதவிக்காக ஏங்குவது நீங்கள் தான் நான் இல்லை என்பதை நிரூபிக்க மன்மோகன்சிங்கை பிரதமர் ஆக்கிகாண்பித்து வேறு யாரும் செய்ய முடியாத விஷயத்தை செய்து, திறந்திருந்த வாய்களை மூட வைத்தார் சோனியாகாந்தி.

அதன் பிறகும் மன்மோகன்சிங்கின் ஆட்ச்சியை பல வகைகளில் குறைகூறி கடைசியாக சோனியா காந்தியிடம் கேட்டுத்தான் மன்மோகன் சிங் எதையும் செய்கிறார் என்று கேவலபடுத்தியபோதும், தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு தங்களால் முடிந்த திட்டங்களை வகுத்து அவற்றை எவ்வாறெல்லாம் செயல் படுத்த முடியும் என்பதில் தங்களது முழு கவனத்தை செலுத்தி, தேவையற்ற எதிர்கட்சியின் புகார்களுக்கு செவி சாய்க்காமல், தங்கள் செயல் திறமையை மக்கள் அறிய செய்து வருகின்றனர் திரு மன்மோகன் சிங்கும் திருமதி சோனியாகாந்தியும்.

எதிர்கட்சி என்றாலே ஆளும்கட்ச்சியை குறை கண்டுபிடிப்பது மட்டும் தான் என்ற போக்கை நிரூபிக்க இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்? உமர்அப்துல்லா இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார், இருந்தும் அவரால் தன் மீது கூறப்பட்ட பெண்களை பற்றிய புகாரை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பது தெளிவாகிறது, வேறு குற்றங்கள் சுமத்தி இருந்தாலும் ஒருசமயம் அவர் அதை எதிர்கட்ச்சிகள் அப்படித்தான் பேசும் என்று விட்டுவிட்டிருப்பார். எனினும், உமர் அப்துல்லா எதிர்கட்சியின் ஆதாரமற்ற குற்ற சாட்டிற்கு மதிப்பு கொடுத்திருக்கக் கூடாது. ஒரு வகையில் எதிர்கச்சியினருக்கு சாட்டையடி கொடுத்திருப்பது சரியானது என்று தோன்றினாலும், ஆதாரமற்ற அவர்களது பேச்சுக்கு செவிகொடுத்திருப்பது அவர்கள் எதை எதிர்பார்த்து இந்த குற்றச்சாட்டை கூறினார்களோ அதை அவர்கள் பெற்றுக்கொள்ள இடமளித்தது போலாகிவிட்டது என்று தோன்றுகிறது.

7/28/2009

இன்றைய செய்தி

I தெசலோனிக்கேயர்

4 அதிகாரம்


1. அன்றியும், சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம்.


2. கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே.

3. நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,

4. தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல்,

5. உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:

6. இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.


7. தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.

8. ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.

9. சகோதர சிநேகத்தைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே.

10. அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்குமுள்ள சகோதரரெல்லாருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரரே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்;

11. புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,

12. நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.

13. அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.

14. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.

15. கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.

16. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

17. பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

18. ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.

7/27/2009

அந்தரங்கம் பாவம் நிறைந்தது - திருடர்கள் ஜாக்கிரதை

திருட்டில் தான் எத்தனை விதம் எத்தனை பிரிவு, அரிசியில் கல் சேர்ப்பது, பாலில் தண்ணீர் கலப்பது, பெட்ரோல் மற்றும் டீசலில் மண்ணெண்ணெய் மற்றும் வேறு எண்ணெய் கலப்பது, ரூபாய் நோட்டுக்களில் கள்ள நோட்டுக்களை கலப்பது, ஒரு பிராண்ட் டீத்தூளைப்போல போலி தயாரித்து மார்க்கெட்டில் விடுவது, போலி தயாரிப்பில் இன்னும் குழந்தைகளை தான் போலியாக தயாரிக்க முடியவில்லை போல இருக்கிறது, மற்ற எல்லாவிதமான ப்ராண்டுகளுக்கும் மார்க்கெட்டில் போலி கிடைக்கிறது, இதில் எது போலி எது உண்மை என்பதை கண்டு பிடிப்பது தான் மிகப் பெரிய பிரச்சினையே,

போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் என்று அறிவிக்கிறார்கள் ஆனால் உண்மையான பிராண்ட் பொருட்களை தயாரிப்பவர்களுக்கே மார்க்கெட்டில் பார்க்கும் போது எது போலி எது தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு என்று கண்டு பிடிக்க முடிவது கிடையாது.

முன்பெல்லாம் டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு கேபிளில் ஒரு ஓட்டைப்போட்டு அதில் ஒரு ஊசி போன்ற ஒன்றை குத்தி அதில் ஒரு ஒயரை பொருத்தி தங்கள் டிவியுடன் இணைத்து திருட்டுத்தனமாக கேபிள் டிவியிலிருந்து நிகழ்ச்சிகளை பார்ப்பார்கள், தொலைபேசியிலும் இது போன்ற திருட்டுகள் மூலமாக அயல் நாடுகளுக்கு திருட்டுத்தனமாக பேசி வந்தார்கள்.

இப்போது இண்டெர்நெட்டிலும் ஒருவருடைய இன்டர்நெட் ப்ரொடோகால் என்ற எண்களை தெரிந்து வைத்துக்கொண்டு, மற்றவரின் இணையதள இணைப்பை திருடி, பயன்படுத்தி வருவதோடு, அந்த குறிப்பிட்ட நபர் லாக் ஆன் செய்வதை சர்வர் மூலம் தெரிந்து கொண்டு மின்சாரவாரிய ஊழியரின் துணையோடு மின்சாரத்தை துண்டித்து, தங்களது திருட்டை மிகவும் சாமர்த்தியமாக செய்து வருகின்றனர். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் சரியான நபரிடம்.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு முறை எனக்கு தெரிந்த நபர்கள் மின்சாரவாரியத்திலிருந்து கட்டணம் வசூலிப்பதாக கூறி வீட்டிற்கு வந்தவரிடம் ஏமாந்து மின்சார கட்டணத்தை செலுத்திவிட்டு பின்னர் கட்டணம் வசூலித்த நபர் ஒரு போலி என்பது தெரியவந்தது. இதனால் மறுபடியும் அதே கட்டணத்தை மின்சாரவாரிய நிலையத்திற்குச் சென்று அபராதத்துடன் செலுத்தும்படி ஆகிவிட்டது.

ஒரு தனியார் தொலைபேசி இணைப்பை வைத்திருந்த ஒரு வீட்டில் அனைவரும் வேலைக்கு பள்ளிக்கு கல்லூரிக்கு செல்லுபவர்கள், அவர்களது தொலைபேசிக்கு மாதாமாதம் அதிக கட்டணம் பில்லாக வரும் அந்த கட்டணத்தை வசூலிக்க மாதாமாதம் வீட்டிற்கு வரும் அந்த நிறுவனத்தை சேர்ந்த கட்டணம் வசூலிக்கும் நபரிடம் இவர்களும் கட்டணம் செலுத்தி வந்துள்ளனர், ஆறு மாதங்களுக்குப் பின் நீங்கள் ஆறு மாத தொலைபேசி கட்டணம் செலுத்தவில்லை இதனால் அபராத தொகையுடன் சேர்த்து தொலைபேசி கட்டணத்தை சேர்த்து கட்டுமாறு சம்பந்தப்பட்ட தனியார் தொலைபேசி நிறுவனத்திலிருந்து அவர்கள் வீட்டிற்கு கடிதம் வந்தது, இவர்களுக்கு ஆச்சர்யம் தாங்கள் மாதாமாதம் தவறாமல் வீட்டிற்கு வந்தவரிடம் கட்டணம் செலுத்தியதை சொல்லி அவர் கொடுத்து சென்ற ரசீதையும் காண்பித்தும், அந்த நபர் அவர்கள் அலுவலகத்தை சேர்ந்தவர் என்பதற்கு என்ன அத்தாட்சி என்று கேட்டு மறுபடியும் ஆறு மாத தொலைபேசி கட்டணம் வசூலிக்க தொல்லை கொடுத்தனர் அந்த நிறுவனத்தினர். இதனால் அவர்கள் அந்த தொலைபேசி இணைப்பை மறுபடி உபயோகபடுத்தாமல் விட்டுவிட வேண்டியதாகியது.

இதில் சம்பந்த பட்ட நிறுவன ஊழியர்களின் கூட்டுசதி தான் இந்த திருட்டிற்க்கு காரணம் எ
ன்பது தெரியவந்தது. இதை பற்றிய புகார்களையும் அந்த நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வது கிடையாது, அப்படியே புகார் கொடுத்தாலும் அந்த புகாரை விசாரித்து வாடிக்கைதாரர்களுக்கு நியாயம்வழங்குவதும் கிடையாது. இணையதள கட்டணம் செலுத்துவதிலும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் இதே திருட்டுத்தனத்தை கடைப்பிடித்து வருகின்றனர். வாடிக்கைதாரர் ஏமாந்தால் செலுத்திய கட்டணத்தை தங்கள் பாக்கெட்டுகளில் போட்டுக் கொண்டு வாடிக்கைதாரர் தவறானவரிடம் கட்டணத்தை செலுத்தி விட்டார் என்று சொல்லி திரும்பவும் வசூல் செய்வது இவர்களது வாடிக்கை.

இந்த வகையான திருட்டுக்களில் அந்த நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஒரு கும்பல் சம்பந்தப்பட்டுள்ளது, வாடிக்கைதாரர்கள் கவனக்குறைவாக இருந்துவிடுவது இவர்களுடைய திருட்டுத்தனத்திற்கு ஏற்ற சமயம் என்று காத்திருப்பவர்கள் இவர்கள்.

வீட்டில் வைத்திருக்கும் சில இயந்திரங்களுக்கான வருட பராமரிப்புக்கான விஷயத்தில் கூட நமது கவனம் தேவைப்படுகிறது, யாரோ ஒருவரின் வீட்டில் இயந்திர கோளாறுக்கு மாற்றி போடப்பட்ட பாகத்திற்கு நாம் சிறிது கவனக்குறைவாக இருந்தால் பராமரிப்பு ரசீதில் நம்மிடம் கையொப்பம் வாங்கிவிடுகிறார்கள், நம் வீட்டில் இயந்திர கோளாறு என்று ஒன்றும் இல்லாமல் வெறும் சுத்தம் செய்துவிட்டு கையொப்பம் வாங்க வேண்டியவர், நமக்கு ஏதோ ஒரு பாகம் பழுதடைந்து அதை மாற்றிவிட்டு புதிய பாகம் போட்டுவிட்டு போவது போல எழுதி கையெழுத்து போடச்சொல்லுவார், நிறைய இடத்தில் நமது கவனம் சரியாக இருக்க வேண்டியது உள்ளது.

ஒருமுறை என் கணவர் வெளிநாட்டிலிருக்கும் போது அவருக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இந்தியாவிற்கு குடும்பத்துடன் போவதாகவும் ஏதாவது நகை அல்லது பணம் கொடுத்தால் அதை உன் மனைவியிடம் கொடுத்துவிடுகிறேன் என்று வற்புறுத்தி இருக்கிறார், இவரும் வேலை பளுவின் காரணமாக இதை பற்றி அதிகம் யோசிக்காமல் மூன்று பவுன் தங்க சங்கிலி வாங்கி கொடுத்து அனுப்பினார், அந்த நண்பர் வந்து தங்கியிருந்த வீட்டி
ற்க்குசென்று தங்க சங்கிலியை கேட்டபோது அந்த சங்கிலி தன் அம்மாவின் அறையிலிருக்கும் பீரோவில் வைத்திருப்பதாகவும் தன் அம்மா வெளியே எங்கோ போயிருக்கிறார் என்றும் அவரின் அம்மா திரும்ப வந்தவுடன் அவருடைய தங்கை எங்கள் வீட்டிற்க்கே சங்கிலியை கொண்டு வந்து தருவதாகவும் சொல்லி என்னை அனுப்பி விட்டனர்.

சுமார் பத்து பதினைந்து நாட்க்களுக்குப் பின் தான் அந்த சங்கிலி என் கைக்கு வந்து சேர்ந்தது, அந்த சங்கிலியை பார்த்தாலே அது
ன் கணவர் வாங்கி அனுப்பியதாக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது, அவர் இருந்த ஊரிலிருந்து வாங்கும் தங்கம் அதிகம் செம்பு சேர்க்காத தங்கமாக இருக்கும் ஆனால் இவர்கள் அந்த சுத்ததங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு மட்டமான தங்க சங்கிலியொன்றை செய்து எனக்கு கொடுத்தனர், என் கணவர் விடுமுறையில் வீட்டிற்கு வந்த போது தான் செய்த தவறை எண்ணி வேதனை அடைந்தார்.

இது போன்று திருடுகளில் ஏராளமான விதங்கள் உள்ளது, ஒவ்வொன்றையும் நாம் தெரிந்து வைத்திருந்தால் ஓரளவு இவற்றில் சிக்காமல் தவிர்க்கலாம்.7/24/2009

அந்தரங்கம் பாவம் நிறைந்தது - விளக்கம்.

அந்தரங்கம் என்ற தலைப்பில் 'அந்தரங்கம் பாவம் நிறைந்தது' என்ற கிளைத்தளைப்பில் நான் எழுதி வரும் தொடர் சம்பவங்களை எழுதி வருவதற்கான மிக முக்கியமான காரணம், பெரியவர்கள் தங்களின் இச்சைகளால் இழுப்புண்டு அல்லது தவிர்க்க நினைத்தும் முடியாமல் கடந்த கால வாழ்க்கையில் செய்த பல மறைவான விபரீதங்களினால், அவற்றை பலர் மறந்து விடுவதும் உண்டு பலர் நினைத்து வருந்துவதும் உண்டு, வருந்துவோர் நிச்சயம் மன்னிக்கப்பட கூடியவர்கள், ஆனால் மறந்தவர்களை கருத்தில் கொண்டு, இந்த பதிவுகளை படிப்பவர்கள் அப்படிப்பட்ட தவறுகளை செய்துவிட கூடாது என்ற அவசியத்தையும் எடுத்துரைக்கவே இதனை ஒரு தொடராக எழுதி வருகிறேன்.

நாம் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்யும் பலவித தவறுகள் பாவங்கள் நம்மையும் நமது சந்ததியினரையும் நிச்சயம் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை எடுத்துரைப்பதே இந்த பதிவின் நோக்கம். அடுத்தவரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்துவது இந்த பதிவின் நோக்கம் கிடையாது.

யாருக்கும் தெரியாமல் நாம் செய்யும் தவறுகளுக்கு தண்டனையை சில நேரங்களில் நாமே அனுபவிப்பதும் உண்டு பல சமயங்களில் நம் சந்ததியினருக்கு அதை பரம்பரை சொத்து போல நாம் விட்டுச்செல்கிறோம் என்பதை உணர்த்தவே இந்த தொடர் எழுதப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தவறு என்று நம் மனசாட்சிக்கு தெரிந்து நாம் திரும்ப திரும்ப செய்யும் தவறுகள் நிச்சயம் நியாத்தீர்ப்புக்கு காத்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மதம் இனம் சாதி மொழி நாடு கண்டம் இவற்றையெல்லாம் கடந்தது நியாயத்தீர்ப்பு என்பது, மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவரும் நிச்சயம் இதை சந்தித்தே ஆகவேண்டும் என்பதை நினைவில் கொள்ளும் போது நம் வாழ்வில் தவறுகள் செய்வது இல்லாமல் போகும்.

செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கோருவதும் அதை திரும்ப செய்யாமல் விட்டுவிடுவதும் சிறந்தது.

7/23/2009

அந்தரங்கம் பாவம் நிறைந்தது - கமலா -3 பாகம்

தாசும் சுமித்திராவும் விலகி இருப்பதை நன்கு அறிந்தவர்கள் கமலாவும் கண்ணனும். கமலாவிற்கு தாசின் மீது மோகம், இந்த சந்தர்ப்பத்தை கமலா பயன் படுத்திக்கொண்டாள், கணவன் நன்றாக உறங்கிய பின் எழுந்து அடுத்திருந்த தாசின் வீட்டிற்கு இரவில் வருவாள் கமலா, தாசுடன் படுக்கையில் படுத்துக்கொள்வாள், ஒரு நாள் தாஸ் தன் பக்கத்தில் கமலா படுத்திருப்பதை பார்த்து விட்டு திடுக்கிட்டு போய்விட்டான், கமலாவின் இந்த செய்கையால் அதிர்ச்சி அடைந்த தாஸ் திரும்பவும் அப்படி நடக்காமல் தவிர்த்து வந்தான்.

தன் இச்சைக்கு உடன் படாத தாசின் மீது கோபம் அதிகரித்தது, தன் ஏமாற்றத்தை தாங்க முடியாத கமலா தன் கோபத்தை வெளிப்படுத்த தன் மூத்த மகன் சுந்தரிடம் தாசைப்பற்றி தகாதவற்றை சொல்லி விரோத மனப்பான்மையை உருவாக்கினாள். அப்போது சிறுவன் சுந்தருக்கு பதினான்கு வயது ஆகியிருந்தது, தாஸ் தங்கள் வீட்டிற்கு தன் அப்பா கண்ணன் இல்லாத சமயங்களில் வரும்போது தாசுடன் சண்டை போடுவான், தேவையற்ற வார்த்தைகள் பேசுவான், இதை கவனித்த தாஸ், அவனை கண்டித்து திருத்துவார், ஆனால் சுந்தர் தாசை
எடுத்தெறிந்து பேசுவான். இதை கேட்டு கமலா மிகவும் சந்தோசம் அடைவாள்.

இந்த எதிர்பாரா தாக்குதலில் மனவருத்தம் அடைந்த தாஸ் தன் மனைவியிடம் நடந்தவற்றை எல்லாம் சொல்லி குறைபட்டுக் கொள்வார், நடக்கும் எதை பற்றியும் கண்ணனிடம் தாஸ் சொல்லுவதே கிடையாது இதனால் கண்ணனுக்கு
நடப்பது எதுவுமே தெரியாமல் இருந்தது. சுந்தர் வாலிபனாகி விட்டான், அப்போதும் அவனது நடத்தை மாறவே இல்லை,

தாசிற்க்கும் சுமித்திராவிற்க்கும் பத்து வருடங்களுக்குப்பின்னர் ஒரு குழந்தை பிறந்தது. நல்ல சுகத்துடனும் இருந்தது, ஆனால் அந்த குழந்தை பிறப்பதற்கு முன்பே தாசின் தாயாரும் தகப்பனாரும் இறந்து விட்டனர்.கண்ணன் வீட்டிலிருக்கும் சமயங்களில் கண்ணனை பார்த்துவிட்டு வருவதற்கு சில சமயங்களில் தன மனைவி சுமித்திராவும் குழந்தையுடனும் சில சமயங்களில் தனியாகவும் கண்ணன் வீட்டிற்கு சென்று வருவார் தாஸ்.

கண்ணனின் மூத்த மகன் சுந்தருக்கு திருமணத்திற்காக பெண் பார்க்க ஆரம்பித்தனர், சுந்தர் தனக்கு பெண் பார்க்க வேண்டாம் தான் காதலிக்கும் அடுத்த வீட்டுப்பெண் கல்பனாவை தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று சொல்லி விட்டான், சுந்தர் ஒரு பிரபல நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தான். சுந்தருக்கு அடுத்தவன் கமலக்கண்ணன், ஸ்டில் புகைப்படக்காரன், அண்ணனுக்கு திருமணமானப்பின் தான் திருமணம் செய்து கொள்வதாக சொல்லி திருமணத்தை
தட்டி கழித்து வந்தான். தொடரும் .....

7/22/2009

குள்ள நரி

காட்டு மிருகங்களில் குள்ள நரி தந்திரம் மிகுந்தது என்று கதை கூடசொல்லுவார்கள் ஆனால் உண்மை என்ன என்பது நரியை சந்தித்தால் தான் தெரியும், காடெல்லாம் நீரின்றியும் மனிதனால் வெட்டப்பட்டும் அழிந்து வரும் நிலையில் காட்டில் எங்கே மிருகங்களை காண முடியப்போகிறது, அப்படியே இருந்தாலும் அவையெல்லாம் தண்ணீருக்காகவும் உணவிற்காகவும் மக்கள் வாழும் ஊரினுள் வருவதாக செய்திகளில் பார்க்கிறோம்.

மனிதரில் நரி புலி நாய் ஓணான் ஒட்டகம் யானை என்று அத்தனையும் இருக்கிறது. இதனால் தானோ என்னவோ காட்டில் மிருகங்களெல்லாம் அழிந்து அல்லது அழிக்கப்பட்டு வருகிறது. உலகத்தில் மண்ணிற்கும் பெண்ணிற்கும் தான் போராட்டம் என்பது அந்த காலம், இந்த காலத்தில் பெண் எளிதில் கிடைத்துவிடும் பொருளாகிவிட்டதால் மண்ணிற்கும் பொன்னிற்க்கும் மற்றும் ஏனையபொருள்களுக்கும் தான் நரியாகவும் புலியாகவும் நாயாகவும் மாறி வருகிறான் மனிதன்.

எப்படி மாறி போராடினாலும் கொள்ளையடித்தாலும் கொலைசெய்து திருடினாலும், கிம்பளம் வாங்கி சேர்த்தாலும் இறுதியில் அனுபவிக்க முடியாமல் போய்ச்சேருகிறான். இதை ஒருவரும் சிந்திக்க தயாரில்லை, அழிவை நோக்கி போகிறோம் என்ற உணர்வுள்ளவன் ஒருவன் உண்டோ என்றால் இல்லையென்றே சொல்லுகிறது தினச்செய்திகள்.

"அன்றன்றைய நாளுக்கு அதினதின் பாடு போதும் " என்கிறது வேதம்.

வெள்ளம், தீ, பூகம்பம், வியாதி, சூறாவளிக்காற்று, விபத்து, எதிர் பாராத வியாதி இவை எதனாலும் சேதம் வரும்போது நாம் சேர்த்து வைத்திருக்கும் பணத்தாலும் கொள்ளையாடின பொருள்களினாலும் நமக்கு விடிவு கிடைக்கும் என்றால் நாம் நாயாக பேயாக மாறி சம்பாதித்து சேர்த்து வைப்பதில் நிச்சயம் பிரயோஜனம்உண்டு. பணத்தினால் போகும் உயிரை நிறுத்தி வைக்க முடியும் என்றால் நிச்சயம் பணம் தேவை. அளவிற்கு மீறி சேர்த்து குவிப்பதில் மனதிற்கு நிம்மதி கிடைக்குமென்றால் பணம் தேவை.

பணத்தின் மீது ஆசைப்படும் போது அதை அடைவதில் வெறி ஏற்ப்படுகிறது, வெறி ற்ப்படுவதால் அழிவிற்கு இலக்காகி விட நேருகிறது.


சிங்கம்

சிங்கம் காட்டின் ராசா என்று சொல்லப்படும் பூனை இனத்தை சேர்ந்த விலங்கினம், காட்டு எருமை, வரிக்குதிரை சில பறவைகளையும் வேட்டையாடி சாப்பிடும், பகல் முழுவதும் தூங்கி இரவு முழுதும் வேட்டை ஆடும், வேட்டையாடி இந்த மிருகம் அழிக்கப்பட்டு வருகிறது, வட மாநிலத்தில் ஒருமிருக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஏறக்குறைய 30 க்கும் மேற்பட்ட மிருகங்கள் அருகிலிருந்த ஒரு வயலில் வைக்கப்பட்டிருந்த மின்சாரவேலியிலிருந்த மின்சாரம் தாக்கி அழிந்து போனது.

மாமிசம் தின்னும் சிங்கங்கள் பாலூட்டி வகையை சேர்ந்தவை. ஆண் சிங்கங்கள் பெண் சிங்க குட்டிகளை கொன்று விடும், சிங்ககுட்டிகள் பற்கள் முளைக்கும் பருவத்தில் ஏற்ப்படும் பல் வலியின் காரணமாகவும் இறந்து விடும், மிருகங்களில் சிங்கத்திற்கு விரோதி மிருகம் என்று ஒன்று கிடையாது, சிங்கத்திற்கு விரோதிகள் மனிதர்கள் தான், ஏனென்றால் சிங்கத்தை வேட்டையாடி அழிப்பவர்கள் மனிதர்கள் மட்டுமே.

பெண் சிங்கங்கள் ஓரளவு புதர்களிலும் பாறைகளிலும் மறைந்து தப்பித்து கொள்ளும் ஆண் சிங்கங்கள் பெண்சிங்கங்களை காப்பதற்காக போராடி இறந்து விடுவதும் உண்டு. இதனால் சிங்கத்தின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டது. ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவின் காடுகளில் மட்டுமே சிங்கங்கள் காணப்படுவதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. சிங்கங்கள் கணிசமான அழிவை நோக்கி போய் கொண்டிருப்பதாக கணகெடுப்புகள் தெரிவிக்கின்றன.

இன்றைய செய்தி

மல்கியா

4 அதிகாரம்


1. இதோ, சூளையைப்போல எரிகிறநாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

2. ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.

3. துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


4. ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள்.

5. இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்குமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.

6. நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.

7/21/2009

அந்தரங்கம் பாவம் நிறைந்தது- கமலா- 2 பாகம்

அந்த பெண்ணிற்கு தெரிந்த மொழி பேசுபவரை கூட்டி வந்து விசாரித்ததில் அந்தப் பெண்ணை யாரோ கடத்தி வந்துள்ளனர், அவர்களிடமிருந்து தப்பிக்க வெளியே வந்திருந்தாள் அந்த பெண் என்பது தெரியவந்தது, அவள் பெயர் சுமித்திரா, மிக அழகிய பெண், தான் திரும்ப தன் வீட்டிற்கு போக முடியாத காரணமும் சொன்னாள் அந்த பெண், அந்த பெண்ணை சிறிது காலம் தங்கள் வீட்டில் தன்னுடனே தங்க ஏற்ப்பாடு செய்து தந்தார் தாசின் தாயார்.

முக்கிய நபர்கள் வந்து போகும் இடம் என்பதால் அவர்கள் வீட்டில் அதிகநாட்கள் தங்க வைக்க முடியாமல் கண்ணனின் சொந்த கிராமத்திற்கு அழைத்துகொண்டு போவதற்கும் ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டன, கண்ணன் தனது மனைவி குழந்தையுடனும் அந்த சிறிய கிராமத்தில் தங்குவது வழக்கம், அந்த கிராமம் தான் கண்ணனின் பூர்வீகம், மனைவியும் பிறந்து வளர்ந்த ஊர், அங்கிருந்து வேலைக்குபோவதற்கு வசதியிருப்பதால், அங்கேயே கண்ணன் தங்கி வந்தார், இந்நிலையில் புதிய பெண் சுமித்ராவையும் தங்களுடன் தங்க வைத்துக் கொண்டனர்,

சுமித்ரா கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் பேச கற்றுக்கொண்டா
ர், அடிக்கடி தேவையான பொருள்களை வாங்கி வந்து சுமித்திராவிற்கு கொடுத்துவிட்டு செல்லுவார் தாஸ். ஒருவருடம் இவ்வாறே கழிந்தது, தாசின் தாயார் சுமித்திராவின் ஒப்புதலைப்பெற்று தாசிற்க்கும் சுமித்திராவிற்க்கும் திருமணம்செய்து வைத்தார். திருமணத்திற்குப்பின் தன் மாமியாருடன் சில வருடங்கள் ஒன்றாக இருந்தனர் தாசும் சுமித்திராவும். பிறகு கண்ணன் வேலை பார்க்குமிடத்திலேயே தாசிற்க்கும் வேலை கிடைத்ததால் தன் மாமியார் மாமனாரை விட்டு தூரம் சென்று தங்கி இருந்தனர்.

தாசிற்கு ஒரு அண்ணன் இருந்தும், சுமித்திராவிற்க்கும் தாசிற்க்கும் முதலில் திருமணம் நடத்த
வேண்டிய சூழ்நிலை, அருமையான குடும்ப வாழ்க்கை அமைந்தது தாசிற்க்கும் சுமித்திராவிற்க்கும். சுமித்திராவிற்கு முதல் குழந்தை பிறந்து ஒருவருடம் உயிருடன் இருந்தபின் உடல் நலமின்மையால் இறந்துவிட்டது, இதனால் சுமித்திராவிற்கு புத்திசுவாதீனம் இழக்க ஆரம்பித்தது, தாசின் தாயார் மருத்துவர் என்பதால் சரியானபடி கவனித்து வந்ததால் சுமித்திராவிற்கு சுகவீனம் அதிகம் பாதிப்பை ஏற்ப்படுத்தவில்லை, மறுபடியும் பிறந்த குழந்தைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று குழந்தைகள் பிறந்து இறந்து போயின, இதனால் மறுபடியும் புத்திசுவாதீமின்மை ஆரம்பித்தது. மீண்டும் குழந்தை பிறப்பது சுமித்திராவின் உடல் நிலையை பாதிக்கும் என்பதால் குழந்தை பிறப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

சுமித்திராவும் தாசும் made for each other என்று சொல்லும் அளவிற்கு பொருத்தமான ஜோடிகள், தாஸ் சுமித்திராவை ஒரு குழந்தையைப் போல பார்த்துக்கொள்வா
ர், சுமித்திராவும் ஒரு குழந்தையின் சுபாவம் கொண்டவர். தாசின் படுக்கை எப்போதும் வெளியில் என்று வைத்துகொள்வார், இதற்குக் காரணம் மனைவியுடன் உடலுறவுகொள்ளக்கூடாது என்பதற்கு மட்டுமில்லை, அதிக நேரம் கண்விழித்து படித்துக்கொண்டிருப்பார், எழுதிக்கொண்டிருப்பார், பல சமயம் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பார், நண்பர்களுடன் வெளியில் சென்றுவிட்டு நேரம் அதிகமானப்பின் வீட்டிற்க்கு வருவார், இது போல் பல காரணங்களுக்காக தன் படுக்கையை வீட்டின் வெளியிலிருந்த தாழ்வாரத்திற்கு மாற்றிக்கொண்டார். தொடரும்........
7/20/2009

அந்தரங்கம் பாவம் நிறைந்தது - கமலா - 1 பாகம்

கண்ணனும் தாசும் கருத்து தெரிந்த வயதிலிருந்தே நண்பர்கள் இவர்களுடைய நண்பர் கூட்டம் மிகப் பெரியது இந்த கூட்டத்தில் அங்கத்தினர் அனைவருமே ஒருவரையொருவர் நண்பராக கிடைப்பதற்கு கொடுத்துவைக்கவேண்டும் என்று சொல்லும் அளவிற்கு அன்யோன்னமும் ஒருவரையொருவர் நேசிப்பதிலும் சிறந்தவர்கள், இவர்களது நட்ப்பு இவர்கள் மரணத்தை காணும் வரை தொடக்கத்தில் எப்படி இருந்ததோ அதே போல இறுதிவரை தொடர்ந்தது. இவர்களை பார்த்தவர்கள் இவர்களிடம் சொல்லுவது 'திருஷ்டி பட்டுவிடப்போகிறது, மிளகாயும் உப்பும் சுற்றிப்போடுங்கள்' என்று.

ஒருநாள் இரவு நடுநிசியில் எப்போதும்போல சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது வழியில் ஒரு பெண் தனியாக அழுதுகொண்டு நிற்ப்பதை பார்த்தான் தாஸ், அந்த பெண்ணிடம் சென்று யார் எதற்காக அழுகிறாய் என்று விசாரித்தபோது, அந்த பெண்ணிற்கு தமிழ்மொழி தெரியவில்லை என்பது தெரியவந்தது, அந்த பெண்ணை வீட்டிற்கு கூடிக்கொண்டு போவதா இரவு ரோந்திற்கு வரும் போலீசிடம் ஒப்படைப்பதா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது, கண்ணன் நினைவு வந்தது, கண்ணன் வீட்டிற்கு கூட்டி சென்று கண்ணனிடமும் இதைப்பற்றி விசாரிக்கலாம் என்று கண்ணன் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போய் வெளியில் அந்த பெண்ணை நிறுத்திவிட்டு கண்ணன் வீட்டிற்குச்சென்று கதவை தட்டியபோது கண்ணன் ஊரில் இல்லையென்பது தெரியவந்தது.

கண்ணனுக்கும் அவனது முறைபெண் கமலாவிற்கும் திருமணம் முடிந்து ஒருஆண் குழந்தையும் இருந்தது, இதனால் கண்ணனை முன் போல சினிமாவிற்கு போக இரவு நேரங்களில் கூப்பிடுவது கிடையாது, அதுமட்டுமில்லாமல் கண்ணன் மத்திய அரசில் வேலை செய்ய தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது, காலையில் வேலைக்கு செல்லவேண்டும் என்பதாலும் இரவுகாட்ச்சிகளுக்கு கண்ணனை கூப்பிடுவது கிடையாது.

அந்தப் பெண்ணை வேறு வழியின்றி
தன் வீட்டிற்கு கூட்டிச்செல்லவேண்டிய நிலைமையாகிவிட்டது, தாசின் உடன் பிறந்தவர்கள் நான்கு பேர், நான்குபேரும் ஆண்கள், தாசின் தாயார் மருத்துவர், தகப்பனார் தென்னக ரயில்வேயில் அதிகாரியாக இருந்தார், சமூகத்தில் பல பெரிய புள்ளிகளை குடும்பநண்பராக கொண்டவர் தாசின் தாயார். இரவில் தாஸ் கூட்டிவந்த பெண்ணிடம் தாசின் தாயார், யார் என்ன என்பதை கேட்டபோது ஆங்கிலமும் தமிழும் தெரியாத வேறு மாநிலத்துப்பெண் என்பது தெரிய வந்தது, அன்றிரவு அவர்கள் வீட்டில் படுக்கவைத்துவிட்டு அடுத்தநாள் என்ன செய்யலாம் என்று யோசித்துமுடிவெடுக்கலாம் என்று அங்கேயே தங்க வைத்து விட்டனர். தொடரும் .............


வாழ்க்கை

காதலைத்தவிர உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் ரசனைக்குரியதும் சிந்திப்பதற்கும் செயலாற்றுவதற்கும் இருக்கும் போது ஏன் இந்த காதலில் மூழ்கிவிடவேண்டும், காதலிக்கப்படுவதும் காதலிப்பதும் இன்பம்தான், ஆனால் அது ஒருபுதைக்குழி, அதில் சிக்கி மாண்டவர்தான் அதிகம், காதலித்து சிறப்புற வாழ்ந்தவர் உண்டோ என்று பார்த்தப் பின் தெரியும் இந்த உண்மைகள், காதலுக்கும் காமத்துக்கும் விலகி ஓடினால் நிச்சயம் வாழ்வின் பல பொக்கிஷங்களை காண முடியும்,

மனிதனுக்கு இயற்க்கை கொடுத்திருக்கும் சிறிய வாழ்க்கையில் முதற்ப்படிதான் காதலும் காமமும், இதிலேயே விழுந்து மாண்டு விட்டால் அடுத்துள்ள படிகளில் றிபோகும் வாய்ப்பு இல்லாமலே போய்விடுகிறது, இதனால் வாழ்வின் பலநூதன மற்றும் அறிய விஷயங்களை தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்காமலே போய்விடுகிறது.

வாழ்வில் எதுவும் எப்பவும் கிடைத்துவிடுவதில்லை, கிடைத்துவிடுவதெல்லாம் நல்லதுக்கென்றும் இன்பமானது சாசுவதமானதும் இல்லை. கிடைத்த வாழ்வில் நாம்எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்வதற்கே வாழ்வின் பாதிக்கும் மேற்ப்பட்ட நாட்க்களை செலவழிக்க வேண்டியுள்ளது.

அப்படி பாதி நாட்கள் கழிந்தப் பின் இருக்கும் மீதி நாட்க்களில்,கடந்த காலத்தில் நடந்ததைப் பற்றியே சிந்தித்து வீணாக்கிவிடாமல், மேற்கொண்டு என்ன செய்தால் வாழ்வின் முழுமையை காண முடியும் என்பது தான் ஓரளவு முழுமையாக வாழ்ந்து முடித்தோம் என்ற திருப்தியை கொடுப்பதாய் அமையும்.


7/19/2009

இன்றைய செய்தி

II பேதுரு

3 அதிகாரம்


1. பிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன்.

2. பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன்.

3. முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து,

4. அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.

5. பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும்,

6. அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.

7. இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.

8. பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.

9. தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

10. கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்.

11. இப்படி இவைகளெல்லாம் அழிந்துபோகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்!

12. தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.

13. அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.

14. ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.

15. மேலும் நம்முடைய கர்த்தரின் நீடியபொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;

16. எல்லா நிருபங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.

17. ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,

18. நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

7/18/2009

அசோக்

அசோக் மனிதருள் மாணிக்கம் என்று சொன்னால் மிகையாகாது. படிப்பில் கெட்டிக்காரன், கீபோர்ட் வாசிப்பதிலும் டென்னிசிலும் முதலிடம், கார் ரேஸ் அசோக்கின் மிகப் பெரிய ஹாபி, அசோக் கார் ஓட்டும் அழகே தனி, தினமும் அலுவலகத்திற்கு கார் ஓட்டி வந்து நிறுத்துவதை பார்க்கத் தவறுவதே இல்லை, சென்னையை அடுத்த மாதாவரத்தில் நடக்கும் கார் ரேசில் தவறாமல் கலந்து கொள்ளுவார் என்று கேள்விப்பட்டேன், மற்ற விளையாட்டுக்களையும் விட்டு வைப்பதில்லை, பொதுஅறிவில் மன்னன், ஆறு அடி இரண்டு அங்குலம், மாநிறம், எடுப்பான மூக்கு சிறிய அழகிய வாய், குறையே இல்லாத மனிதனை ஆண்டவன் அதிகம் படைப்பதில்லை, ஆனால் அசோக்கை எத்தனை நல்ல குணங்கள் உலகத்தில் இருக்குமோ அத்தனை குணத்தையும் ஒருங்கே கொடுத்துப் ஆண்டவன் படைத்துவிட்டிருந்தான்.

எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவுடன் கிடைத்த வேலையை செய்யவில்லை, மேற்க்கொண்டு படித்தார், வேறு வழி இல்லை வேலைக்கு போகத்தானே வேண்டும், அவரை பொறுத்தவரையில் உத்தியோகம் புருஷலட்சணம், கிடைத்த வேலையும் நல்ல நிறுவனத்தில் கிடைத்துவிட்டது, அசோக் பெற்றோருக்கு செல்லப்பிள்ளை ஒரே பிள்ளை, ஏராளமான சொத்துக்களுக்கு சொந்தக்காரர், அவரது அப்பாவிற்கு இருந்த டீ, ஏலக்காய், ரப்பர் எஸ்டேட்டுகளில் இருந்து கிடைக்கும் வருமானம் ஏகப்பட்டது, ஒரு அழகிய பணக்காரப் பெண்ணைப் பார்த்து அசோக்கிற்கு திருமணம் செய்து வைத்தார் அவருடைய அப்பா.

அசோக்கின் திருமணம் தெய்வலோகத்தில் நடந்ததைப் போன்று நடந்து முடிந்திருந்தது. மனைவியின் அழகை பார்ப்பவர் திறந்த வாயை மூட மாட்டார்கள் அத்தனை அழகிய மனைவி, பட்டப்படிப்பை அப்போதுதான் முடித்திருந்தாள் அசோகின் மனைவி, பெயர் வினையா. அசோக்கின் கல்லூரி நண்பன் சுரேஷ் அடிக்கடி அசோக்கின் வீட்டிற்கு வந்து போவான், அவனுக்கு எப்போதுமே அசோக்கைப் பற்றி மிக பெரிய ஆச்சரியம், இத்தனை நல்ல விஷயங்களும் ஒருவனுக்கு வாழ்வில் ஒருங்கே கிடைத்து விடுபவனை எப்படி ஆண்டவன் படைத்தார் என்று. இதே கேள்விதான் அசோக்கை பார்ப்பவர்கள் யாராயிருந்தாலும் மனதில் தோன்றும்.

சுரேஷிற்கு அமெரிக்காவிற்கு போய் வேலை பார்க்கவேண்டும் என்பது விருப்பம், சுரேஷிற்கு சொத்து சுகங்கள் என்று பெரிதாக ஒன்றும் இல்லை என்பதால் அமெரிக்காவிற்கு போய் கை நிறைய சம்பாதித்து மிகப் பெரிய ஆள் ஆகவேண்டும் என்ற கனவில் வாழ்ந்து வருபவன். இதனால் அமெரிக்காவிற்கு போவதற்கு வேண்டிய ற்ப்படுகளை செய்து வந்தான்.

இந்நிலையில் அசோக்கிற்கு அவர் வேலைபார்க்கும் நிறுவனத்தில் பங்குகொள்ளும் விருந்துகளில் குடிப்பதற்கு அவசியம் ற்ப்பட்டதன் விளைவு, வீட்டிலும் விருந்துகள் கொடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. இதில் சுரேஷும் கலந்துகொள்ளும் விருந்துகளும் உண்டு. குடிப்பழக்கம் நாளுக்குநாள் அதிகரிக்க ஆரம்பித்துப் பின் அசோக் ஒரு குடிகாரனாக மாற ஆரம்பித்தார்.

இந்நிலையில், தான் மனைவியுடன் சேர்ந்து போகவேண்டிய இடங்களுக்கெல்லாம் சுரேஷை அனுப்பி வைத்தார், சுரேஷும் வினையாவும் விதியின் கையில் சிக்கியவர்களாக மாறவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. இப்படி ஒரு தவறை செய்கிறோம் என்பதை அறியாதவராக அசோக் தன் மனைவியையும் சுரேஷையும் பல முறை பல இடங்களில் பார்த்தும் கூட சந்தேகப்படவேயில்லை, இதற்குக் காரணம் அசோக்கிற்கு இப்படியெல்லாம் தவறுகள் செய்வார்கள் என்பது தெரிந்திருக்கவில்லை என்பதுமட்டுமே காரணம், அசோக் அத்தனை வெள்ளை மனம் படைத்தவர்.

சுரேஷும் வினையாவும் அமெரிக்காவிற்கு போய்விட்டனர், ஆனால் அசோக் இங்கு பைத்தியம் பிடித்தவனைப் போலமாறிவிட்டார், வேலைக்கு போவதில்லை, காலை முதல் இரவுவரை குடி என்று அவரது வாழ்வில் எல்லையில்லா துன்பத்தை முதன் முதலில் சந்தித்தார், அவரது நிலைமையை காண பொறுக்காமல் பெற்றோர் மரணம் அடைந்துவிட்டனர். அவருடன் படித்த வேறு நண்பர்கள் இதை கேள்விப்பட்டு அவரை சென்னைக்கு கூட்டிவந்தனர், மருத்துவர்களிடம் ஆலோசனைக்குக் கூட்டிச்சென்று சில மருந்துகளும் கொடுத்து மறுபடியும் அவரை மனிதனாக இயங்க வைத்து ஒரு நிறுவனத்தில் உயரிய பதவியில் பணி செய்ய வைத்தனர்.

நிறுவனத்திற்கு வந்த புதிய அதிகாரியை பற்றி ஊழியர்கள் பலரும் உயர்வாய் பேசிக்கொள்வதை நான் கேள்வி பட்டேன், அந்த நிறுவனத்தில் மூன்று யூனியன்கள் உண்டு, மூன்று யூனியங்களைச் சேர்ந்தவர்களிடமும் நல்ல பெயர் எடுப்பது என்பது நடக்காத காரியம், ஆனால் எல்லூராலும் மிக மிக நல்லவர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட முதலும் கடைசியுமான அதிகாரி அசோக் மட்டும் தான், அவர்கள் எல்லோரும் புகழ்வது என்றால் அசோக் நிஜமாகவே ஒரு தெய்வப்பிறவியாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.

ஏனென்றால் நானும் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன், என் தகப்பனாரும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஒரு நாள் நான் அசோக்கை நிறுவனத்தின் கோப்புகளுடன் சந்தித்தேன், அப்போதுதான் முதன் முதலில் நான் அசோக்கை பார்த்தேன், அசோக் என்னுடன் அதிகம் பேசுவதற்கு ஒன்றும் இல்லாதிருந்தது, பின்னர் ஓரிருமுறை வேலைவிஷயமாக பார்த்தேன், அசோக் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்த ஏறக்குறைய எட்டு ஒன்பது மாதங்களுக்குப் பின் எங்கள் நிறுவனத்திலிருந்த யுனிய
ன் கிளர்ச்சியால் நிறுவனத்தை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிறுவனம் மூடப்பட்டது.

மூன்று மாதங்களுக்குப்பின்
கம்பனி போராட்டத்தில் மூடி கிடந்த சமயம் நான் வேலை செய்துவந்த நிறுவனத்தில் ஒரு முக்கிய பதவியில் அவர் இருந்ததால், அசோக்கின் வீட்டிற்குச் சென்று கம்பனியின் முக்கிய கோப்புகளை கொடுத்துவிட்டு சில முக்கிய பணிகளைப்பற்றி கேட்டு வருவதற்காக என் தகப்பனாருடன் சென்றிருந்த போது, நான் நேரில் பார்த்த அந்த ஆங்கிலோஇந்திய பெண், அசோக்கின் மனைவி என்று சொல்ல கேட்டபோது நான் அதிர்ச்சியுற்றேன், என் மனதில் அசோக்கைப் பற்றிய நினைவுகள் செய்திருந்த ஈடுபாடு தான் அதற்க்கு காரணம் என்பதை என்னால் பிறகுதான் புரிந்துகொள்ள முடிந்தது, அதை காதல் என்று சொல்வதா, பாசம் என்று சொல்வதா தெரியவில்லை.

இப்போது
கூட அசோக்கோடு ஒரு காரியாதரிசியாக, நிரந்தர செவிலியாக காலம்பூராவும் அசோக்கோடு மட்டுமே வாழச்சொன்னால் கூட வாழ்ந்து விடலாம் என்று தோன்றும்; அந்த உணர்வுகளை நான் என்னவென்று சொல்லுவேன்,
அசோக்கை அலுவலக விஷயமாக நேரில் பார்க்க சென்றிராவிட்டால் அசோக்கைப்பற்றிய, அவரது சொந்த வாழ்க்கையைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடாமல் இருந்திருப்பேன்.

அந்த வயதான பெண்ணுடன் அசோக்கை நான் பார்த்த போது தான் இந்த அசோக் என்பவரின் முழுகதையை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்தது. நான் அதற்க்கு முன்னும் பின்னும் அத்தனை காதல் வயப்பட்டிருப்பேனா என்பது தெரியவில்லை, அவரது குணநலன்களை அலுவலகத்தில் பார்த்த எனக்கு ஏற்ப்பட்ட மதிப்பை விட, அவரை நேரில் பார்த்தபோதும் அவரது சோக கதையை முழுவதுமாக தெரிந்து கொள்ளும் ஆவல் எனக்குள் எழுந்த போது தான் என்னுள் தோன்றியிருப்பது அசோக்கின் மீது எல்லையில்லா காதல் என்று நான் உணர்ந்து கொண்டேன். அந்த காதலில் காமம் இல்லை, விரகதாபம் இல்லை, மனிதநேயம் அதிகரித்த நிலையில் உணர்வுகளின் எல்லையில் ஒரு தாய்மைகலந்த பாசம் அது.

கம்பனியை யூனியன் திறக்க விடவே இல்லை, கோர்ட்டில் கேஸ் நடந்தவாறு இருந்தது, நான் வேறு கம்பெனியில் வேலை செய்ய ஆரம்பித்தேன், இரண்டு வருடங்கள் ஓடி மறைந்தது, இடையில் என் தகப்பனாரின் உடல்நலக்குறைவால் அசோக்கைப்பற்றி செய்திகள் திரட்டுவதில் தடை ஏற்ப்பட்டுவிட்டது, என் தகப்பனாரின் உடல் தேறியப்பின் எனக்கு கிடைத்தசெய்தி, அசோக் அதிகமாக குடித்து ஒருநாள் நெஞ்சுவலி என்று
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்துவிட்டார்.

இன்றும் என் மனதில் பசுமையாய் நிற்கும் அசோக்கைப் பற்றிய நினைவுகள். எப்படி அசோக்கின் மனைவியால் அப்படி ஒரு துரோகத்தை அசோக் போன்ற ஒரு அருமையான மனமும் குணமும் படைத்தவருக்கு செய்ய முடிந்தது, மனிதனைவிட காமம் பெரிதா, என்றெல்லாம் கேள்விகள் தோன்றும்,
இப்படியொரு காதலி இருந்திருப்பாள் என்று அசோக்கிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

என்னைப்போன்று எத்தனைப் பேர் அசோக்கை நேசித்திருப்பார்களோ என்று கூட நான் நினைப்பதுண்டு, ஏனென்றால் அவர் அபூர்வமான, அலாதியான கடவுளின் படைப்பு.திருடர்கள் ஜாக்கிரதை

புதிய நபர்களுடன் பழகுவதில் மிகவும் ஜாக்கிரதையும் முன் யோசனையும் இல்லையென்றால் இழப்புகளுக்கு ஆளாக நேரும், திருடர்கள் எப்படியெல்லாம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக யோசனை செய்து தங்களது திருடும் மற்றும் ஏமாற்றும் முறைகளை மாற்றி உபயோகித்து பொதுஜனங்களை மாற்றுகிரார்களோ அதற்கேற்றார்ப் போல பொதுஜனங்களும் ஈடுகொடுக்கும் வகையில் தங்களை மிகவும் ஜாக்கிரதையாக காப்பாற்றிக்கொள்ள நிச்சயம் நம்மை தயார் படுத்திக்கொள்வது மிக அவசியம்.

ஊடகங்களில் காண்பிக்கப்படும் நிகழ்ச்சிகள் மனிதர்களை மூளைச்சலவை செய்ய பயன்படுத்தப்படக்கூடாது. அம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதோடு நிறுத்தி விட்டு, முடிந்தால் பார்க்காமலே விட்டுவிடுவது சாலச்சிறந்தது, பொதுஜனங்கள் தினமும் ஊரில் நடக்கும் பலவிதமான செய்திகளை கேட்ப்பதில் கவனம் செலுத்தினால், இன்றைய தினத்தில் நாட்டில் எங்கு என்ன நடந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதோடு அதற்கேற்றார் போல நம்மையும் தயார் படுத்திக் கொள்ள முடியும். திருடர்கள், ஏமாற்றுபவர்கள் சினிமாவில் சித்தரிக்கப்படுவது போல பிரத்தியேகமான நடை, உடை, பாவனையில் வருவது கிடையாது. மிகவும் சகஜமாக பழகுபவரைப்போல காண்பித்துக் கொள்வதுடன், தங்களை நன்றாக படித்தவர்கள் மிகவும் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூட காண்பித்து கொள்வதால் தான் மக்கள்
மாந்துவிடுகின்றனர் என்பதை மறக்கக் கூடாது.

உதாரணத்திற்கு, ரயிலில் செல்லும்போது உடன் வருபவர் பிஸ்கெட்டு போன்ற தின்பண்டங்களை தின்பதற்கு கொடுக்கும்போது அதை வாங்கி சாப்பிட்டதால் மயக்கம் அடைந்த ஒருவரிடமிருந்து நகைகளும் பணமும் திருடு போனதைப்பற்றி செய்தியில் நாம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது, அந்த செய்தியின் மூலம் நாம் கற்றுக்கொள்வதுடன் நமக்குத் தெரிந்த நபர்களிடமும் சொல்லிவைப்பதான் மூலம் மற்றவரையும் உஷார் படுத்தலாம். ரயில் மற்றும் பஸ் பயணங்களின் போது அருகில் அமர்ந்திருப்பவர் ஏதேனும் தின்பண்டம் கொடுத்தால் அதை வாங்கி சாப்பிடக்கூடாது என்பதையும் அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதும் நமக்கும் தெரியவரும்,

இதுபோன்று தினமும் செய்திகளை கேட்ப்பது
ம் செய்தித்தாள்களை படிப்பதும் நமக்கு நாட்டின் நடப்புக்களை தெரியப்படுத்துவதுடன் பலவித ஆபத்துக்களிலிருந்து நம்மை எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பதையும் நமக்கு எடுத்து உணர்த்தும் பிரயோஜனம் உள்ள நிகழ்ச்சி என்றே சொல்லலாம். திருடர்கள் எப்படி பலகாலம் தங்கள் மூளையை குடைந்து புது புது யுக்திகளை கண்டுபிடித்து கையாண்டு மக்களிடம் கொள்ளையடிக்க பயன்படுத்துகிறார்களோ, பொதுமக்களும் அதற்கேற்றார்போல தங்களை தயார்செய்து கொள்வதற்கு அன்றாட செய்திகளை பார்ப்பதும் படிப்பதும் மட்டுமே பயனுள்ளதாக இருக்கமுடியும்.

ஒருவருக்கொருவர் வீணான கதைகளை பேசாமல் இப்படிப்பட்ட செய்திகளை பரிமாறி கொள்வதன் மூலம் இந்த செய்திகளை கேட்க்காதவர்களுக்கும் இதைப்பற்றி தெரிவிக்க முடியும்.

7/17/2009

அந்தரங்கம் பாவம் நிறைந்தது

பெற்றது எல்லாம் பிள்ளைகள் இல்லை

இருபது முப்பது கிலோ ஈரக்களிமண்ணை வயிற்றின் மீது கட்டிக்கொண்டு நாற்ப்பது நாற்ப்பத்தைந்து வாரங்கள் வாழ்ந்து பார்த்துவிட்டு, 'அப்பப்பா எப்படித்தான் பெண்கள் குழந்தையை பத்து மாதங்கள் சுமந்து பெற்றுக்கொள்ளுகிறார்களோ', என்று சொன்ன ஒரு ஆணிடம் 'வயிற்றிலிருக்கும் குழந்தை களிமண்ணாக மட்டுமிருந்து விட்டால் பரவாயில்லையே, அது ஒரு உயிருள்ள குழந்தை ஆயிற்றே'.

முதல் மூன்று மாதங்கள் வாந்தி மயக்கம் என்று ஆட்டிப்படைக்கும் வேதனைகளை கடந்து, வயிற்றிலிருக்கும் குழந்தை சுகத்துடனும் நலத்துடனும் வளர, பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ உணவை சரியான நேரத்திற்கு சாப்பிட்டு, நடக்க முடிகிறதோ இல்லையோ மாதம் தவறாமல் மருத்துவரை அணுகி அவர் போடும் ஊசிகளை சகித்து, அடிக்கடி மூச்சுவிட முடியாமல் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, ஏழு எட்டு மாதங்களில் வயிற்றில் குதித்து விளையாடும் [இன்ப] வேதனைகளை சகித்து, ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் கழிவது போல் கழித்து, பத்தாம் மாதம் எப்படி இருக்குமோ என்ற திகிலுடன் வாழ்ந்து, பிள்ளை பேறுகாலத்தின் வலியின் கொடுமையை சகித்து சிலருக்கு பிரசவத்தில் பிரச்சினை இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் பிள்ளையை பெற்று எடுத்து,

பிள்ளை வளரும் வரை பல தியாகங்கள் செய்து, பச்சை தண்ணீரில் குளிக்க முடியாது அது கத்திரி வெயல் கொளுத்தும் சமயமாக இருந்தாலும், ஆசைப்பட்ட உணவை சாப்பிட முடியாது, இப்படி பல தியாகங்கள் செய்து, குழந்தை ஓரளவு தானே உணவு சாப்பிடும் வரை வாயை கட்டி வயிற்றைக்கட்டி. அதற்குள் பல முறை ஜுரம் சளி, தடுப்பூசி என்று மருத்துவரிடம் நடையாய் நடந்து, முதன் முதலில் குழந்தையின் நடை கண்டு ரசித்து, தடுக்கி விழுந்த போது ஆறுதல் சொல்லி, மழலையை ஆர்வமாய் ரசித்து,

குழந்தைக்கு மூன்று வயது ஆவதற்குள் ஒரு நல்ல பள்ளியில் கஷ்டப்பட்டு பல ஆயிரங்களை கொடுத்து அட்மிஷன் வாங்கி, தினமும் குழந்தையை போர்முனைக்குச் செல்லும் வீரனை தயார் செய்து அனுப்புவதுபோல தினமும் காலை தயார் செய்து பள்ளிக்கு கொண்டு சென்று திரும்பவும் வீடு திரும்புவதற்குள் தேவையான உணவு மற்றும் பானம் தயாரித்து, புகட்டி, பள்ளியில் கற்றுவந்த ரைம்ஸ் சொல்லச் சொல்லி கேட்டு மகிழ்ந்து,

பள்ளியில் கொடுத்தனுப்பிய வீட்டுப்பாடங்களை செய்து கொடுத்து, இரவு உணவு கொடுத்து, குழந்தை உறங்கியப்பின் உறங்கி குழந்தை எழும்போதெல்லாம் எழுந்து, ப்ளஸ் டூ வரை நாமும் அவர்களுடன் பள்ளிப்பாடங்களை படித்து, மார்க்குகள் வாங்கி வந்த போதெல்லாம் அரவணைத்து கட்டி முத்தமிட்டு, மகிழ்ந்து, ஒருவழியாக பள்ளி இறுதியை முடித்து வெளியே வருவதற்கு முன் ஒரு நல்ல கல்லூரியில் இடம் பிடித்து, இடையில் காதல் என்ற சருக்குமர விளையாட்டில் பல்டி அடித்தாலும் படிப்பை கோட்டை விடாமல் கவனித்து,

வேலைக்குப் போக தயார் செய்து, வேலை கிடைத்தவுடன் மகிழ்ந்து, முதல் சம்பளம் வாங்கியபோது பெருமை கொண்டு, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள் இரண்டாம் மாத சம்பள கவருடன் வரும் போது, "தன் சம்பாதனை", என்ற தோரணை கூடி போக, நாம் சிறிது தடுமாற்றத்தில் வியந்து நிற்க, மூன்றாம் மாத சம்பளம் நம் பார்வையை விட்டு மறைய, சிறிது சிறிதாக, "என்னுடைய வருமானம், இதில் மற்றவரின் தலையீடு வேண்டாம்" என்ற பரிணாம வளர்ச்சியை கண்டு நாம் வியந்து நிற்க.

"போகட்டும், அவன் (அல்லது) அவளது சம்பாத்தியத்தை அவர்களே சேமிக்கட்டும்", என்று பெற்றவர்க்கே உரிய பெரிய மனதோடும் சிறிதே வேதனையோடும் விட்டுக்கொடுக்க, திருமணம் என்ற மற்றுமொரு பரிணாம வளர்ச்சியின் பாதிப்பால் வேரோடு பிடுங்கி காத தூரத்தில் எறியப்பட. இனி நாம் ஒதுங்கி "சின்னஞசிருசுகள் தனியே வாழ்வதை விட்டுக் கொடுக்கத்தானே வேண்டும்", என்று மனதை தேற்றிக்கொண்டு வாழ பழகிக்கொள்ள, நம்மை தூக்கி எறிந்த இடம் நம்மைப்போன்ற பலரும் உள்ள இடம் தான் [ முதியோர் இல்லம்] என்று மனதை சமன் படுத்திகொண்டு, அங்கே ஏன் இந்த அசுர அமைதி என்ற கேள்வி எழ,

முதியோர் இல்லத்தில் உள்ளவர் ஒருவரோடொருவர் பேசினால் என்ன பேச முடியும், மகனை அல்லது மகளை அருமையாய் பெற்று வளர்த்து ஆளாக்கி திருமணமும் செய்து வைத்து, பின் அவர்களுக்கு தாங்கள் சுமைகளாய் தெரிந்த போது முதியோர் இல்லத்திற்கு கொண்டுவந்து விட்டு போன அதே கதை.எல்லாருடைய கதையின் கருவும் ஒன்றாகத்தான் இருக்கப் போகிறது என்ற எண்ணம் போலும், மயான அமைதியாய், ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏற்ப்பட்ட சுனாமியால் நிலைகுலைந்து நிற்க, பேரிழப்பை பிரதிபலிக்கும் முகத்தோடு, இன்னும் சில காலம் காத்திருந்தால், தான் பூமிக்கு வந்த வேலையும் முடிந்து விடும் என்ற காத்திருப்போடு அமைதியாய் இருக்கின்றனர் போலும் ! ! !

மனித வாழ்க்கையில் எதை கொண்டுவந்தோமோ தெரியவில்லை, ஆனால் போகும்போது நிறைய தொலைத்துவிட்டுத்தான் போகிறோம்..........


அந்தரங்கம் பாவம் நிறைந்தது - [அம்பிகா]

அம்பிகாவிற்கு பதினாலு வயது, அவளுக்கு ஒரு அண்ணன் பதினைந்து வயதில் ஒரு தம்பி ஆறுவயது, ஒரு தங்கை பத்துவயது. அவளது தகப்பனாருக்கு வயது நாறப்பதுகளிலிருக்கும், அவளது தாயாரும் நாற்பதுகளில் தான் இருப்பார். தகப்பனாருக்கு சிறிய கடை, அதில் டீ, காபீ சில சமயங்களில் இட்லி வடை தோசை கூட இருக்கும், அந்த கடைக்கு வீடும் கடையின் உள்ளே சேர்ந்திருப்பது போல் அமைத்துக் கொள்வார் அவளது அப்பா ரங்கா.

அந்த கடைக்கும் வீட்டிற்கும் சமையல் அவளது அம்மா கீத்தாதான். அம்பிகாவின் தம்பியும் தங்கையும் மட்டும் பள்ளிக்கூடம் சென்று வந்தனர். அம்பிகாவையும் அவளது அண்ணன் மணியும் வீட்டிலும் கடையிலும் முழுநேர உதவிக்காக பள்ளிக்கூடம் போகாமல் நிறுத்தப்பட்டுவிட்டனர்.

வறுமையில் வாடும் குடும்பம், அவளது அப்பா தீவிர ஐயப்பன் பக்த்தர், வருடம் தவறாமல் கருப்பு வேட்டிக் கட்டி , தலையில் கட்டும்கட்டி, மலைக்குப்போக தவறுவதில்லை. அவர்கள் குடியிருந்த வீட்டைச் சுற்றிலும் அவர்களைப்போலவே ஏழைகள் நிறைந்த இடம். ஒரு நாள் அம்பிகாவின் அம்மா அவர் குடித்தனம் இருந்த வீட்டுக்கார அம்மாவிடம் அழுது கொண்டே ஓடி வந்தார், குசு குசு என்று வீட்டுக்கார அம்மாவும் இன்னும் ஒருசில முக்கிய பெரிய பெண்களும் சேர்ந்து பேசிகொண்டனர், பிறகு எல்லோரும் கலைந்து சென்றுவிட்டனர்.

இது நடந்த பின் ஒருவருடம் அம்பிகா அவளது வீட்டில் இல்லை, அவளைப் பற்றி விசாரித்தவர்களுக்கு கிடைத்த பதில் அம்பிகா அவளது அத்தைவீட்டில் உதவி தேவைப்படுவதாகவும் அதனால் அவள் அங்கே இருக்கிறாள் என்றும் அவள் அம்மா சொல்லிக்கொண்டிருந்தாள். ஒருவருடத்திற்குப பின் அம்பிகா மறுபடியும் அவள் தாயுடனும் தம்பிதங்கை அண்ணனுடனும் வந்து இருந்து வந்தாள், பிறகு இரண்டு மூன்று வருடங்களுக்குப் பின் அவளுக்குத் திருமணம் நடந்துவிட்டது என்று சொல்லி அனுப்பிவைத்தனர், ஆனால் அவளது கணவனை அவளது தாயும் தகப்பனும் இருக்கும் இடத்தில் பார்க்கவே முடியாது. அம்பிகா எப்போது வந்தாலும் தனியாகவே வந்து போவாள்.

அவளுக்குத் திருமணமாகி ஐந்தாறு வருடங்களாகியும் குழந்தை பிறக்கவே இல்லை என்பதால் அவளது மாமியார் அவளை துன்புறுத்தி வருவதாக சொன்னாள் அம்பிகா, ஒருநாள் அம்பிகாவை நேரில் பார்த்தபோது சிறுவயதில் நெடுநாள் பழகியவரைப் பார்த்தவுடன் மிகவும் சந்தோஷமடைந்தாள், பிறகு அவளது சுகத்தைப்பற்றி சொல்லும்போது, த
ன் கணவனுக்கும் தனக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் தனக்கு ஒரு குழந்தை பிறக்கவில்லை என்பது மட்டுமே கவலை என்று சொல்லும்போது அவளது கண்களில் கண்ணீர் மல்க ஆரம்பித்தது.

நல்ல மருத்துவ ஆலோசனையும் மருந்தும் சாபிட்டால் குழந்தை நிச்சயம் பிறக்கும் என்று ஆறுதல் சொன்னபோது, அவள் சொன்ன பழைய விஷயம் அதிர்ச்சியடைய செய்தது. அவளது தகப்பனார் இறந்து போய்விட்டார். அண்ணனுக்கு திருமணமாகி த
ன் அப்பா கற்றுகொடுத்த டீக்கடை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறான், அவனுக்கு குழந்தைகள் இருக்கின்றன, அடுத்த தங்கை படித்துவிட்டு ஒரு கம்பனியில் வேலை செய்கிறாள், தம்பியும் நல்ல முறையில் படித்துக்கொண்டிருக்கிறான் என்றும், அம்மா தம்பி தங்கை மூவரும் ஒருவீட்டில் குடித்தனம் இருப்பதாகவும் சொன்னாள்.

பனிரெண்டு வயதில் வயதுக்கு வந்த அம்பிகாவை அவள் அப்பா தினமும் கட்டாயப்படுத்தி அவளது அம்மாவிடம் சொல்லக்கூடாது என்று பயமுறுத்தி உடலுறவு கொண்டதனால் அம்பிகா கர்பமு
ற்றாள், இதை பற்றி தெரியவந்த போது அவள் தாய் கீத்தா அதிர்ச்சியுற்று கணவனின் அக்காள் இருவரிடமும் சொன்னாள், அவர்கள் போலீசில் புகார் செய்தனர், அவர்கள் அம்பிகாவிற்கு கருச்சிதைவு செய்து, தவறிய பெண்களை அல்லது ஏமாற்றப்பட்டு கற்பு இழந்த பெண்களை வைத்திருக்கும் அரசு காப்பகத்தில் விட்டு வைத்தனர். அங்கு ஒருவருடத்திற்கு மேல் பெண்கள் தங்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் மறுபடியும் வீட்டிற்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.

அவளது தகப்பனாரை போலீசில் கூப்பிட்டு பெண்ணை இனி பலாத்காரம் செய்தால் போலீஸ் காவலில் அடைக்கப்படுவார் என்று எச்சரிக்கை செய்தனர். இரண்டு வருடங்களுக்குப்பின் அப்பாவின் அக்காள் பார்த்த மாப்பிள்ளைக்கு அம்பிகாவைத் திருமணம் செய்து வைத்தனர். இதனால் அம்பிகாவின் கணவனை தன் அப்பா இருக்கும் வீட்டிற்கு அனுப்பாமல் தான் மட்டும் அம்மாவையும் தம்பி அண்ணன் தங்கையை பார்த்துவிட்டு போக வந்து போனதாகவும் சொன்னாள்.

தற்ப்போது குழந்தை பிறக்காததற்க்கும் சிறிய வயதில் செய்த கருச்சிதைவுதான் காரணம் என்று மருத்துவர் கூறுவதாகவும், இனி குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவு என்றும் சொல்லி அழுதுதீர்த்தாள் அம்பிகா. அம்பிகா அழு தீர்த்துவிட்டுப்போனாலும் என்னால் அழுது தீர்க்க முடியவில்லை. இதயம் கனத்துக்கொண்டிருக்கிறது.

7/16/2009

இன்றைய செய்தி

நீதிமொழிகள்: அதிகாரம்-9; 1-18

1. ஞானம் தன வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து,

2. தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்துவைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி,

3. தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின் மேல் நின்று கூப்பிட்டு,

4. புத்தியீனனை நோக்கி; எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன்

5. நீங்கள் வந்து என் அப்பத்தைப்புசித்து, நான் வார்த்த திரட்ச்சரசத்தைப் பானம்பண்ணுங்கள்.

6. பேதமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது.

7. பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் கறைப்படுத்திக் கொள்ளுகிறான்.

8. பரியாசக்காரனை கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனை கடிந்துக்கொள், அவன் உன்னை நேசிப்பான்.

9. ஞானமுள்ளவனுக்குப் போதகம் பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்.

10. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம், பரிசுத்தரின் அறிவே அறிவு.

11. என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.

12. நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரரானால் நீயே அதின் பயனை அனுபவிப்பாய் என்று சொல்லுகிறது.

13. மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.

14. அவள் தன் வீட்டுவாசறபடியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம் போட்டு உட்கார்ந்து,

15. தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிபோக்கரைப் பார்த்து:

16. எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும்,

17. மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும்சொல்லிக் கூப்பிடுகிறாள்.

18. ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.