Translate

6/16/2009

அழிந்து வரும் குயில்கள்

மழை மேகம் திரண்டு வரும் காலங்களில் குயிலின் குரலை கேட்க்க முடிந்த காலங்கள் இப்போது மாறி வருவது இயற்கையை மனிதன் மாற்றியதற்கு சான்று என்றே கூறலாம்.

குயில்கள் கருமை நிறத்தில் சிறிய உடலமைப்பை கொண்டதாக இருந்தாலும் அதன் குரல் இனிமை பிரசித்தம். மழைக்காலம் என்பது எப்போதும் போல வரவேண்டிய காலத்தில் வர தவறுவதால் தான் குயில்கள் கூவ மறந்துவிட்டனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால் குயில்களின் இயல்பை பற்றி பார்க்கும் போது குயில்கள் முட்டைமட்டும் தான் இடும் குஞ்சு பொரிக்கத் தெரியாத பறவை, தனக்கென ஒரு கூடு
கட்டிக் கொள்ள தெரியாத பறவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் குயில்கள் காக்கையின் கூண்டில் சென்று முட்டைகள் இட்டு வைத்து
விட்டு போய் விடும், காகம் அந்த முட்டைகள் தன்னுடைய முட்டைகள் என நினைத்து அதன் மீது அமர்ந்து அடைகாத்தால் மட்டுமே குயில் குஞ்சுகள் வெளிவர வாய்ப்பு உண்டு, இல்லையென்றால் அந்த முட்டைகள் பொறிக்கப் படாமல் வீணாகி விடும்.

காகத்தின் முட்டைகள் ஏற்கனவே இருக்கும்
கூண்டில் குயில்கள் முட்டைகளை இட்டால் மாத்திரமே குயிலின் குஞ்சுகள் நிச்சயமாக பிறக்கும் வாய்ப்பை பெறுகின்றன. இதனால் குயிலின் இன பெருக்கம் அதிக அளவில் குறைந்துவிட்டது என்பது தான் உண்மை.

இப்போது குயில்களின் குரலை கேட்பதே மிக குறைவாகத்தான் உள்ளது. இதற்க்கு காரணம் அடர்ந்த மரங்கள் வெட்டப்பட்டு விட்டதும் அடர்ந்த மரங்கள் இருந்த இடங்களில் பெரிய கட்டிடங்கள் பெருகி வருவதும் மிக முக்கிய காரணம்.

பறவைகளை அழிவிலிருந்து மீட்க்க சில அமைப்புகள் உருவாகியுள்ளது மனதிற்கு ஆறுதல் தரும் செய்தி , அழிவிலிருந்து பல பறவை இனங்களை மீட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் நிம்மதி தருவதாக உள்ளது. பல பறவை இனங்கள் இல்லாமல் போய்
விட்டதும் உண்டு. இப்போது அழிவிலிருக்கும் பறவைகளை காப்பாற்றும் சுயநிதி தனியார் ஸ்தாபனங்கள் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்புகள் குயிலையும் இன பெருக்கம் செய்து அழிவிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.