Translate

5/31/2009

கோடைகால கவிதை

கடலுக்கு கரை மீது
காதல் - அலை
மழைக்கு மண்ணின் மீது
காதல் - மழை

பேனாவிற்கு மையின் மீது
மையல் - கவிதை
வெயிலுக்கு நீர் மீது
காதல் - [பாலிதீன் உரையில், குப்பிகளில்] தண்ணீர்.

வெயிலே வேண்டாம் காதல் !!!!

காதல் - speed Breaker

எந்த வயதில் காதல் முதன் முதலில் மனதில் துளிர்த்தது என்றால், என் பெற்றோரின் முகம் எனக்கு விளங்க ஆரம்பித்த போது என்பது தான் சரியான பதிலாக இருக்கும், நான் உளமார காதலித்தது என் பெற்றோரைத்தான். காதல் என்றாலே பதினாறு வயதில் ஒரு ஆடவனைப் பற்றி வண்ண வண்ண கனவுகளுடன் கிளுகிளுப்பு ஏற்ப்படுத்துவது தான் என்பது மட்டும் காதல் என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

முதலில் எப்போது ஒரு ஆடவன் என் மனதில் கிளுகிளுப்பை ஏறப்படுத்தினானோ அதை என் முதல் காதல் என்று என்னால் ஏற்று கொள்ள முடிந்ததில்லை, இன்றைய நிலையிலிருந்து காதலைப் பற்றி எது காதல் எப்போது ஆரம்பித்தது என்று யோசித்தால், மனதை கவர்ந்த காதல் கனிந்து, ஒருவருக்கொருவர் வெளிப்படையாகத் தெரியப் படுத்தி, அந்தக் காதல் திருமணத்தில் முடிந்தால் காதல் முழுமை பெற்றது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிவது இல்லை.

ஒருவரை பார்க்காமலேயே ஏதோ ஒரு விதத்தில் தன்னை கவர்ந்து விட அதையும் காதல் என்று நினைத்து வருடங்களை விரட்டி பின்னர் எதுதான் காதல் என்று உணரும் போது உண்மையில் காதல் என்பது உடலில் ஏற்ப்படும் பருவ மாற்றங்கள் என்பது தெளிவாகிறது.

ஆனால் காதல் ஏற்ப்படுத்தும் கிளுகிளுப்பு அலாதியானதுதான், இதில் காதல் தோல்வி என்பது என்னை பொறுத்தவரை இன்றைய நிலையிலிருந்து யோசிக்கும் போது speed breaker என்ற உவமைதான் சரியான வார்த்தையாக என்னால் தேர்வு செய்ய முடிகிறது.

காதல் தோல்வியின் வலி என்னவென்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன் ஆனால் இப்போது யோசித்தால் அப்படியொரு speed breaker எனது வாழ்வில் வந்திராவிட்டால் என் வாழ்க்கை பயங்கரமான விபத்தை சந்தித்திருக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

எதையுமே நான் இழந்ததாக நினைப்பதே இல்லை, எது தடை பட்டதோ அது நன்மைக்கே என்பதை வாழ்க்கை புரிய வைத்தது.

முன் குறிக்கப் பட்டது தான் நடக்கும் என்பதை மனம் இன்று ஏற்றுக் கொள்கிறது, இதில் காதலும் விதி விலக்கல்ல.

ஆனால் காதலையும் அது நம்மில் ஏற்ப்படுத்தும் விளைவுகளையும் யோசித்துப் பார்த்தால் சில சமயங்களில் சந்தோஷமாகவும் சில சமயங்களில் வேதனையாகவும் உள்ளது, உண்மையில் சொல்லப் போனால் காதல் என்னும் அந்த காந்தம் நம்மை பற்றிக் கொள்ளும் போது நாம் நாமாகவே இருப்பதில்லை.

ஒவ்வொருவரும் கட்டாயம் கடந்து வர வேண்டிய சிலிர்க்க வைக்கும் வசந்த காலம், ஒரு முறை வாழ்வில் வந்து போகும் அந்த சில வருடங்கள் நம் மனதில் அழியாத நினைவுகளை விட்டுச் செல்கிறது, அந்த நினைவுகளை மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் வாழ்ந்து வாழ்க்கையை முடிக்கின்றோம்.

"கடந்த காலத்தை நினைக்காதே வருங்காலத்தையும் நினைக்காதே நிகழ்காலத்தில் வாழ்ந்து விடு" என்று சொல்வது சுலபம் ஆனால் நினைவுகளை வெல்வது நிகழ் காலம் நமக்கு கொடுக்கும் பல சுமைகளும் கடைமைகளும் கடந்த காலத்தை மறக்க செய்து விடும், இல்லையேல் நிகழ் காலத்தில் வாழ்வது கடினம்.

காதலும் மாயைதானே.....!!

கனவுகாலையில் கண் விழித்ததிலிருந்தே நீரஜாவிற்கு அந்த கனவின் நினைவு திரும்ப திரும்ப வந்துக் கொண்டே இருந்தது.

நீரஜாவின் கணவன் ஒரு சந்தேகப் பேர்வழி. அவள் அவனிடம் எதைப் பற்றி பேசினாலும் அதற்கு வேறு ஒரு அர்த்தம் கண்டுபிடிப்பான். பேச்சு அதிகமானால் இருவருக்கும் வாக்கு வாதத்தில் தான் முடியும்.

அவன் பெயர் கோபால், திருமணமாகி இரண்டு வளர்ந்த பிள்ளைகளுக்கு தகப்பன், சபல புத்திக்காரன் எனபது அவனது பேச்சில் தெரிந்தது. இன்டர்நெட்டில் பழக்கமானவன். லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருவதாக சொன்னான். அவன் செல்போனில் பேசுவதை கேட்டால் அடுத்த ஊரிலிருந்து தான் பேசுகிறானோ என்று நினைக்க தோன்றும், பேசுவதற்கு ஒன்றுமே இல்லாமல் ஆனால் எப்படித்தான் ஒரு மணி நேரம் இவனால் தொடர்ந்து பேச முடிகிறதோ என்று தோன்றுவதுடன் போயும் போயும் இவனிடம் செல்போன் எண்ணை கொடுத்து விட்டேனே என்றும் எரிச்சல் ஏற்ப்படும், ஆனால் இப்படியொருவனை சந்த்தித்தத்தில் கூட ஒரு முக்கியம் இருக்கிறது என்பது பின்னால் தான் உணர முடிந்தது.

கோப்பாலின் பரிச்சயம் கிடைத்த சில நாட்க்களிலேயே அவனைப் பற்றிய அபிப்பிராயம் குறைய ஆரம்பித்தது, அப்படியொரு அபிப்பிராயம் தோன்றிய பின்னும் தொடர்ந்து அவனுடன் பேசிக் கொண்டிருப்பதை நினைத்து நீரஜாவிற்கு சிறிது ஆச்சர்யம் தான், மிகவும் மாறி விட்டோமோ என்றும் வியப்பாகத்தான் இருந்தது,
ஆனால் அந்த வியப்பு நீடிக்கவில்லை. நீரஜாவின் கணவன் வாசு ஒரு நாள் கோப்பாலுடன் நீரஜா பேசும் போது பார்த்து விட்டான், தன்னை சந்தேகப் படுவானோ என்ற பயத்தில் கோப்பாலைப் பற்றி வாசுவிடம் சொல்லி விட்டாள்.

நீரஜாவின் அப்பா இறந்து சுமார் பத்து வருடங்கள் முடிந்து விட்டது, அவர் இறந்த முதல் ஆறு மாதங்கள் வரை நீரஜாவின் கனவில் அவளது அப்பா வருவது வழக்கமாக இருந்தது, அதற்க்கு பின்னர் அப்பாவின் முகத்தை கனவில் கூட பார்க்க முடிவதில்லை என்பது நீரஜாவிற்க்கு மிக்வும் வருத்தம். அவள் அப்பாவின் மீது அவளுக்கு ஏகப்பட்ட அன்பு. அம்மாவிடமும் ஏகப்பட்ட அன்புதான் ஆனால் அவள் அம்மா கனவிலும் நினைவிலும் எப்போதுமே அவளுடனேயே இருந்தார்.

நீரஜாவுடன் அவள் அப்பாவும் லண்டனில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் காத்து நின்று கொண்டிருக்கும் போது சிகப்பு நிற பஸ் ஒன்று பயணிகளுடன் நிறுத்தத்தில் வந்து நிற்கிறது நீரஜாவின் அப்பா ஓடிச் சென்று பஸ்ஸில் ஏறி விடுகிறார், நீரஜா ஏறாமல் நிறுத்தத்தில் நின்று கொண்டு அவரை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவளது அப்பாவின் உருவம் ஒரு ஒன்பது அல்லது பத்து வயது சிறுவனைப் போல மாறுகிறது, அந்த சிறுவன் பஸ்ஸில் நின்று கொண்டிருப்பவர்களின் கால்களின் வழியே நுழைந்து திரும்பவும் நீரஜாவின் கண்களுக்கு தெரியும் போது அவன் முப்பது வயது மதிக்க தக்க ஒரு கறுப்பர் இன விளையாட்டு வீரனின் உடை அணிந்து தெரிகிறான்.

இந்த கனவைப் பற்றி சொல்லுவதற்கு தனது கணவனைத் தவிர சரியான ஆள் வேறு யாரும் அவளுக்கு இல்லை , ஆனால் இந்த கனவைப் பற்றி சொன்னால் நிச்சயம் அவன் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவான், சொல்ல முடியாத அளவிற்கு மோசமான கனவு இல்லை தான் என்றாலும் கோப்பாலை மனதில் நினைத்துக் கொண்டு தான் இந்த கனவை நீரஜா கண்டிருக்கிறாள் என்று ஒன்று கிடக்க ஒன்று நினைத்துக் கொள்வான் என்ற மன குழப்பம்.

நீரஜாவின் கணவனுக்கு அவனது பெற்றோரை பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போனது அவனது துரதிஷ்டம், இதனால் தன மனைவியும் அவளுடைய பெற்றோருடன் சந்தோஷமாக இருப்பதை பார்க்க பிடிக்காதவன். இந்த தர்ம சங்கடமான நிலையில் இந்த கனவை அவனிடம் சொல்லி எதற்கு வீண் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்று சொல்லாமலேயே இருந்து விட்டாள்.

ஒரு நாள் கோப்பால் செல் போனில் பேசும் போது ஒலிம்பிக் விளையாட்டுகள் லண்டனில் நடைபெற போகிறதே என்று நீரஜா கேட்ட போது கோப்பாலும் அவனுக்கு தெரிந்திருந்த தகவல்களை சொல்ல ஆரம்பித்தான், அப்போது அவன் சொன்ன தகவல் ஒன்று நீரஜாவை வியப்பில் ஆழ்த்தியது.

கோப்பால் லண்டனில் உள்ள ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக பணி புரிந்து வருகிறான், அவனுடன் வேலை பார்க்கும் ஒரு கறுப்பர் இனத்தவரின் இருபத்து எட்டு வயது மகன் விளையாட்டு வீரனாம், அவனது பத்தாம் வயதிலிருந்தே பல மெடல்களை வாங்கி குவித்தவனாம், இந்த ஒலிம்பிக்கில் விளையாட தன்னை தயார் படுத்தி வந்தானாம்,

ஒரு நாள் ஒரு பயங்கர விபத்தில் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் சொல்லி
விட்டார்கள், வீட்டிற்கு பிணத்தை கொண்டு வரும் வழியில் ஒரு பேருந்து மீது மோதி மறுபடியும் விபத்தில் காயம் ஏற்ப்பட்டது அவனுடைய அப்பாவிற்கு, அப்போது அவனுடைய அம்மா ஆஸ்பத்திரிக்கு வந்து அவனுடைய அப்பாவின் நிலைமையை பற்றி விசாரித்த போது அவருக்கு உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் சொன்னதால் மகனை அடக்கம் செய்வதற்காக அவனது உடலை கல்லறைக்கு கொண்டு போக உறவினர்களையும் நண்பர்களையும் தொலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்த சமயம் பிணமாக இருந்த மகனின் உடல் அசைவதை பார்த்து விட்டு உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மகன் பேச ஆரம்பித்து விட்டானாம்.

தற்போது அப்பாவும் மகனும் நலமாக இருக்கிறார்கள் என்று சொன்னான் கோப்பால், ஏதோ உள்ளுணர்வில் பொறி தட்டியதைப் போல இது எப்போது நடந்தது என்று ஆவலுடன் விசாரித்தாள் நீரஜா, கோபால் சொன்ன அந்த தேதியும் வருஷமும் நீரஜாவின் சந்தேகத்தை உறுதி படுத்துவது போல இருந்தது, நீரஜாவின் அப்பா இந்தியாவில் இறந்த நாளும் அதே நாள் தான்.

ஒரு சமயம் இரண்டும் ஒரே நாளில் தற்ச்செயலாக சம்பவித்திருக்கலாம், ஆனால் நீரஜா கண்ட கனவு, அதன் அர்த்தமும் கோப்பால் சொன்னதையும் சேர்த்துப் பார்த்தால், தன் கனவில் கண்டது தன் அப்பாவைத்தானே...... ஒரு கறுப்பர் இன விளையாட்டு வீரனாக மாறியது போல தெரிந்தது.....

மறு பிறவியை பற்றி நீரஜா கேள்வி பட்டதுண்டு ஆனால் அதைப் பற்றி சிந்தித்தது இல்லை, தற்ப்போது கோப்பால் சொன்னதும் தனக்கு ஏன் பொறி தட்டியது போல இருந்தது....புரியாத கேள்விகளும் கிடைக்காத பதில்களும் உலகத்தில் நிறைய உள்ளதை உணர்ந்தாள் நீரஜா.

30.05.2009

5/28/2009

கிறிஸ்டி அக்கா

ஒரு வார இறுதி, கிறிஸ்டி அக்கா என்னை கூப்பிட்டார்கள், எங்கே போகின்றோம் எனபது பற்றி என்னிடமும் எனது அம்மாவிடமும் சொல்லவில்லை, ஒரு ஆட்டோவில் எங்கோ ஒரு ஹோட்டல், நாங்கள் இருவரும் உட்கார்ந்தோம் வெள்ளை நிற பான்ட்டும் வெள்ளை நிற சட்டையும் அணிந்த ஐம்பது வயது தோற்றமுடைய ஒருவர் எங்களுடன் வந்து அமர்ந்து கொண்டார், அவருடன் கிறிஸ்டி அக்காள் பேசிக்கொண்டே இருந்தார், எனக்கு ஒன்றுமே புரியவில்லை, எனக்கும் சேர்த்து மூன்று பிரியாணி மூன்று முட்டையுடன் வந்தது, நான் சாப்பிடுவதிலேயே மிகவும் கவனமுடன் இருந்தேன், அவர்கள் என்ன பேசுகிறார்கள் எனபது எனக்கு புரியவில்லையா அல்லது நான் கவனிக்கவில்லையா எனபது நினைவில் இல்லை, சாப்பிட்டு முடித்து விட்டு வீடு திரும்பினோம்.

கிறிஸ்டி அக்காவுக்கு எங்கள் குடும்பத்தின் மீது அதிக அன்பு, நாங்கள் எனது அப்பாவின் குடும்ப நண்பரின் வீட்டின் பாதியில் குடியிருந்தோம், கிறிஸ்டி அக்காள் எங்களுக்கு பல உதவிகள் செய்து வந்தார்கள்.

ஒரு கிறிஸ்துமஸ் தினம் இரவு நேரம் கிறிஸ்டி அக்கா தனது தங்கை தம்பியுடன் ஒரு ஆட்டோவில் கோவிலுக்கு சென்றுவிட்டு பின்னர், வேறு சில நண்பர்களையும் உறவினர்களையும் சந்தித்து விட்டு வருவதற்காக பயணம் செய்து கொண்டிருக்கும் போது ஆட்டோ தடம் புரண்டு சாலையின் ஓரத்தில் இருந்த மிக பெரிய பள்ளத்தில் தலை கீழாக உருண்டு விட்டது, யாருக்கும் பெரிய அளவில் ஆபத்து இல்லை என்றாலும், அழகான கிறிஸ்டி அக்காவிற்கு முதுகு எலும்பில் சரியான பாதிப்பு, இரண்டு மாதம் நடக்காமல் இருந்தார்கள், பின்னர் அவர்கள் நடக்க ஆரம்பித்த
போது அழகான தலை முடி வெட்டி எடுக்கப்பட்டு இருந்தது, முதுகு எலும்பில் பெரிய வளைவு, ஒரு எலும்பு கேள்விகுறி போல வளைந்து விட்டது, நிமிர்ந்து நடக்க முடியாமல் போனது, அவர்கள் உயிர் பிழைத்தது ஆச்சரியம் என்று டாக்டர்கள் கூறினார்களாம், இது நடந்த ஒரு மாதத்திலேயே நாங்கள் அவ்வீடத்தை விட்டு வேறு இடம் மாற்ற வேண்டியதாகி விட்டதால் கிறிஸ்டி அக்காவை பார்க்கவே முடியாமல் போனது.....

மற்றவருக்கு உதவி செய்யும் அலாதியான குணம் படைத்தவர் கிறிஸ்டி அக்கா, அவர்களது அன்பு இன்றைக்கும் என்னால் மறக்க முடியாதது.......
5/26/2009

புழங்கப் படாத .......உணர்வுகள்.....?

புழங்காமல் இருக்கும் மனித உணர்வுகள் கடைசியில் சுத்தமாக இல்லாமலே போய் விடும், எனக்கு தெரிந்து அன்பு சிரிப்பு போன்ற விலை மதிப்பில்லாத மனித உணர்வுகள் புழங்கப் படாமலே இருக்கிறது, போன தலை முறையில் வாழ்ந்த மக்களையும் அடுத்த தலை முறையையும் compare செய்து பார்க்கும் போது எந்த அளவிற்கு குறைந்துள்ளது என்பது முதியோர் இல்லங்கள் உருவாகி இருப்பதும் குடும்ப நல வழக்குகள் பெருகி வருவதும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

இந்த நிலை இன்னும் சில ஆண்டுகளில் தனி மனிதன் மட்டும் ஒவ்வொரு வீட்டிலும் வாழும் நிலை தான் பார்க்க முடியுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது, ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்த காலம் மாறி என்னால் மட்டுமே என்னை நிர்வகித்துக் கொள்ள முடியும், வேறு சொந்தங்களோ பந்தங்களோ உறவுகளோ தேவை இல்லை என்ற வாழ்க்கையை தான் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது.

அப்படி தனி மனிதனாக வாழும் பட்சத்தில் அன்புக்கும் சிரிப்புக்கும் இடம் இருக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போகும், நாளடைவில் அன்பு என்பது, ஐ லவ் மியூசிக் , ஐ லவ் பிரியாணி, என்று மாறுவதற்கான வாய்ப்பு இப்போதே பெரும்பாலான இளம் சமுதாயத்தில் உள்ளது, இந்த புழங்கப் படாத அன்பும் சிரிப்பும் குறைந்திருப்பது நமக்கு வெளிப் படுத்துவது எதிர் கால சந்ததியினரின் வாழ்க்கை முறை அன்பற்ற, இயற்கையான சிரிப்பற்ற தனிமனித வாழ்க்கையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

நல்ல பாம்பு

தொலைகாட்சியில் வெளியாகும் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டுமே நான் தொடர்ந்து பார்ப்பேன், இன்று ஒரு தனியார் தொலைக்காட்ச்சியில் காண்பித்த நல்ல பாம்பை பற்றிய ஒரு நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்தது, இதற்க்கு காரணம் எனக்கு பறவைகள் மிகவும் பிடிக்கும், வீட்டில் பிராணிகள் வளர்ப்பது பிடிக்கும், மொத்தத்தில் பிராணிகள் பறவைகள் என்று .......நான் ஒரு இயற்க்கை விரும்பி.

ஆனால் பாம்பை பிடிக்கும் என்று சொல்ல மாட்டேன், இன்று பார்த்த அந்த நிகழ்ச்சியில் ஒரு நல்ல பாம்பு ஒரு வீட்டில் ஐந்து வருடமாக எல்லோருடனும் சகஜமாக வாழ்ந்து வருவதை பார்த்து பயந்துப் போனேன், ஆனால் மின்சாரம் தாக்கி இறந்துப் போன அவர்களின் மூத்த சகோதரரின் மறு பிறவியாக அந்தபாம்பு அங்கு வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர்கள் சொல்லும்போது, மனதிற்கு மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது, 24 அல்லது 23 வயதில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு நிலத்தின் அருகே இருந்த பம்புசெட் இருக்கும் அறையில் சுவிட்சை ஆன் செய்வதற்காக போனவர் ஷாக் அடித்து இறந்திருக்கிறார், அவர்தான் பாம்பாக தங்கள் வீட்டிற்க்கு வந்து தங்கி இருப்பதாக அவர்கள் நம்புவதும், அதற்கேற்றார் போல அந்த பாம்பும் அவர்கள் யாரையுமே ஒன்றும் செய்யாமல் அவர்களுடன் வாழ்ந்து வருவதும் நிஜமாகவே பார்க்க பரிதாபமானசெய்தி தான்.

நம்பிக்கைகள் பல்வேறு இருந்தாலும், அங்கே அந்த பாம்பும் குடும்பமும் ஒன்றாக வாழ்ந்து வருவது என்பது அதிசயம் தான். நல்ல பாம்பிற்கு பாலூற்றி வளர்த்தாலும் ஒரு நாள் குத்தி விடும் என்று ஒரு பழமொழி உண்டு அதைப் போல அவர்களை ஒன்றும் செய்யாமல் விட்டால் மிகவும் நல்லது தான்.

5/25/2009

கருப்பு வெள்ளை ...... ரீமேக்

கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட சினிமா என்றவுடனேயே நினைவிற்கு வருவது கதையம்சம், நடிப்பு, இசை.

பெரும்பாலான கருப்பு வெள்ளை சினிமாக்களில் நம்மால் மேற்ச் சொன்னவைகளை எதிர் பார்க்க முடிந்தது, தற்கால சினிமாக்கள் இவை மூன்றையும் மறக்க செய்து இருப்பதன் காரணமாக நான் நினைப்பது, முதலில் சினிமாக்களில் வண்ணங்கள் , ஆடைகளில் வித்தியாசங்கள் காண்பிப்பது, ஆடம்பர செட்டுகளை போடுவது, வெளிநாடுகளில் படமாக்குவது போன்ற மக்களின் கண்களை கவரும்
படியான இத்தகைய மாற்றங்கள் தான் ஏற்ப்பட்டுள்ளது, இதில் கருத்து என்பதோ கதை என்பதோ நடிப்பு என்பதோ எதிர்பார்க்க முடியாமல் போக , பார்ப்பவரின் எண்ணங்களை வண்ணங்கள் மட்டும் சுண்டி இழுத்தால் போதுமென்ற வகையில் இந்தக் கால சினிமாக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இங்கொன்றும் அங்கொன்றுமாக கதையம்சம் உள்ள படங்கள் இருந்தாலும் அவை கூட ஆஹா!! ஹோ !!! என்று சொல்லும்படி இருப்பதில்லை. கதையம்சம் என்பது எங்கேயோ யாரோ ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் சினிமாவக்கப்படுவதும் ஒரு புதிய trend ஆக வந்துக் கொண்டிருக்கிறது.

சில புதிய பாடல்கள் நன்றாக இருந்தாலும், பாடலை கேட்ட சில நிமிடங்களிலேயே அந்த பாடலின் வரிகளும் ராகமும் மறந்து போய் விடுவதாகவே உள்ளது, புதிய வரவுகளில் பெரும்பாலான பாடல்கள் காதை செவிடாக்கும் சப்தங்களாகத்தான் இருக்கின்றன, மேற்க்கத்திய பாணியில் வெளி வரும் பாடல்களில் எந்தவித ஈர்ப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது.

கதையம்சம் என்பது கேள்விக் குறிதான், இத்தகைய சினிமாக்களை பார்க்கும் போது நமது எண்ணங்களை ஈர்க்க கூடியதாக இல்லை , பல வருடங்கள் சென்று அவற்றைப் பற்றி நினைத்துப் பார்க்கும் அளவிற்கு கதைகள் நம் மனதில் நீங்கா இடம் பிடிப்பதாக வருவதே இல்லை.

இந்த வகையில் கருப்பு வெள்ளை படங்களில் நெஞ்சத்தை விட்டு நீங்கா இடம் பெற்ற சினிமாக்களின் எண்ணிக்கை நீண்டது தான்.

மூன்று மணி நேரம், ஒரு தியேட்டரில் பணம் கொடுத்து, நேரம் பணம் அத்துடன் முக்கியமாக நமது சிந்தனை, சிந்தனையை சினிமாவில் பதிய வைக்கும் சினிமாக்கள் வருவது என்பது இல்லாத ஒன்றாகி வருகிறது.

நடுத்தர வயதுடையோரை சின்னத் திரை சீரியல் ஆக்கிரமித்து கொண்டிருப்பதாக சொல்கின்றனர், இருக்கலாம், சுவாரசியம் இல்லாத சீரியல்களை தினமும் குறிப்பிட்ட நேரத்தில் 1/4 மணி நேரம் பார்ப்பதால் முழு திருப்தி கிடைக்குமா என்றால், என்னை பொறுத்தவரையில் கிடைக்கவில்லை. நான் இதுவரை தொலைக்காட்ச்சியில் ஒரு சீரியலையும் பார்த்தது கிடையாது, ஏன் என்றால் அதில் எனக்கு முழு திருப்தி இல்லை. நேரத்தை வீணடிக்கிறேன் என்று தான் தோன்றுகிறது, ஈர்ப்பு இல்லை, சுவாரசியம் இல்லை.

அதை விட ஒரு நாவல் வாங்கி படித்துக் கொள்ளலாம். தொலைக்காட்சி இல்லாத காலங்களில் அப்படித்தான் இருந்தது. தற்ப்போது புத்தகம் படிப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து விட்டது என்று தோன்றுகிறது.

ஆக, கருப்பு வெள்ளை படங்களை, தற்காலத்து அழகிய நிறங்களில் ரீமேக் செய்தால், கதை நடிப்பு பாடல்கள் எதையுமே மாற்றாமல், நன்றாக இருக்கும், ரீமேக் செய்கிறேன் என்று பழைய பாடல்களையெல்லாம் நாசமாக்கி கொண்டிருக்கிறார்களே அப்படி அல்ல. அப்படியே, ஒன்றையும் மாற்றாமல் ரீமேக் செய்தால் சினிமா எப்படி இருக்கும் என்று கற்ப்பனை செய்து பார்க்கிறேன், அத்தகைய நடிப்பை தற்போதுள்ள நடிகைகளில் யாரால் ஓரளவுக்காவது நடிக்க முடியும் என்பது தெரியவில்லை, என் கற்ப்பனையில் கருப்பு வெள்ளை சினிமாக்கள் புதிய வண்ணத்தில்................

5/22/2009

விடியல்எழிலரசிக்கு ஏகப்பட்ட சந்தோசம் , இந்த வருடம் பிளஸ் டு வகுப்புகள் ஆரம்பித்த ஒரு வாரத்திற்குள் எல்லா பாட புத்தகங்களும் இலவசமாக கிடைத்து விட்டது.

ஒவ்வொரு வருடமும் அவளுக்கு கிடைத்த பாட புத்தகங்கள் எல்லாமே இலவசமாக கிடைத்ததுதான் என்றாலும் அவற்றில் பெரும்பாலும் முதல் பத்து அல்லது பதினைந்து பக்கங்களும் கடைசி பத்து பதினைந்து பக்கங்களும் இல்லாமல்தான் கிடைக்கும். ஆனால் இந்த முறை கிடைத்த புத்தகங்கள் எல்லாவற்றிக்கும் இரண்டு பக்க வெளிப்புற அட்டையோடு கிடைத்ததில் அவளுக்கு பெரும் மகிழ்ச்சி.

புத்தகங்களை பார்த்தால் மிகவும் குறைவாய் உபயோகப்படுத்தி இருப்பது தெரிந்தது. புத்தகத்தில் முதல் பக்கத்தில் பெயர் கூட எழுதாமல் கடையிலிருந்து வாங்கியபடியே இருந்தது.

எழிலரசியின் அப்பாவிற்கு நிரந்தர வருமானம் கிடையாது. சுவர் ஜன்னல் போன்றவற்றிற்கு வர்ணம் அடிப்பது அவருக்கு தெரிந்திருந்த தொழில். வருடத்தில் முக்கால்வாசி நாட்களும் பட்டினிதான். அவர்கள் பெற்றோருக்கு அவள் ஒருத்தி மட்டும் தான். எழிலின் அம்மா ஒரு வீட்டில் வேலைக்காரியாக வேலை செய்து கிடைக்கும் மாதம் முப்பது ரூபாயில் அவர்கள் குடியிருந்த குடிசையின் வாடகை ரூபாய் பதினைந்து கொடுத்து விட்டால் மீதமிருக்கும் பதினைந்து ரூபாய் மளிகை பாக்கி கொடுப்பதற்கு போதக்
குறையாகிவிடும்.

மண்ணெண்ணெய் விளக்கில் தான் படிக்கவேண்டும், பெரும்பாலான நாட்களில் அந்த சிறிய விளக்கிற்கு கூட மண்ணெண்ணெய் இல்லாமல் மளிகை கடைக்காரனிடம் கடன் கேட்டு கெஞ்சி நிற்ப்பாள் எழிலின் அம்மா.

வறுமையின் கொடுமையில் வாழ்ந்து வந்த எழிலரசியின் அப்பாவின் நெடு நாளைய நண்பர் ஒருவரின் மகன் ராமு. படிப்பில் நாட்டமிலாதவன். விளையாட்டுகளில் ஆர்வமிருந்ததால் நன்றாக விளையாடி கிடைத்த சான்றிதழ்களை கொண்டு இந்தியன் ஏர்லைன்சில் வேலை கிடைத்தது.

பிளஸ் டு பரீட்சை எழுதி வெற்றி பெற்றால் கிடைக்கும் சான்றிதழைக் கொண்டு
தற்போது கிடைத்திருப்பதை விட உயர்வான உத்தியோகம் கிடைக்கும் சம்பளமும் அதற்க்கேற்ப்ப உயர்வு கிடைக்கும் என்பதால் ராமு வாங்கிய புத்தகங்கள் என்று தான் புத்தகங்களை வாங்கியதற்கான காரணம் சொனான் ராமு.

ராமு புத்தகங்களை வாங்கிய பின் அவற்றை ஒருமுறை கூட தொட்டது இல்லை. ஒரே முறை தேர்விற்கு பணம் கட்டிவிட்டோமே என்பதற்காக பரீட்சை எழுதி தோல்வி அடைந்த
பின் மறுபடியும் பரீட்சை எழுதும் விருப்பமின்றி அலமாரியில் வைத்த இடத்திலேயே இருந்தது.

ராமுவைப் போலவே அவனது அடுத்த வீட்டு பெண்ணும், பிளஸ் டு தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்று சொல்லி ராமுவிடமிருந்து பாடபுத்தகங்களை வாங்கி சென்று, தேர்வு எழுதி தோற்ற பின் ராமு தனது புத்தகங்களை அவளிடமிருந்து மறக்காமல் வாங்கி மறுபடியும் அலமாரிக்குள் வைத்து கொண்டான்.

அந்த புத்தகங்கள் இப்போது எழிலரசியின் கைகளுக்கு வந்து சேர்ந்துள்ளது. இரண்டு பேர் தோற்றபின் இப்போது உன்னிடம் கொடுத்திருக்கிறேன் என்று சொல்லித்தான் கொடுத்தான் ராமு.

எழிலரசிக்கு புத்தகம் முழுமையாய் கிடைத்ததே போதும் என்று மட்டும் திருப்பதி, வெற்றி தோல்வியை புத்தகம் கொடுக்குமா கொடுக்காதா என்றெல்லாம் யோசிக்க தெரிந்திருக்கவில்லை.

* * * * * * * * *

பள்ளி தலைமையாசிரியரிடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்திருந்தது அதன்படி குறிப்பிட்ட தேதிக்குள் ரூபாய் பதினான்கை நோட்டு புத்தகங்களுக்காக செலுத்தவேண்டும் என்று.

எழிலரசியின் அப்பா தலைமை ஆசிரியரிடம் சென்று பள்ளியிலோ வேறு இடத்திலோ தனக்கு வர்ணம் பூசும் வேலை ஏதேனும் கொடுத்தால் அதை செய்து கிடைக்கும் கூலியிலிருந்து நோட்டு புத்தகத்திற்கான பணத்தை கட்டி விடுவதாக கேட்க்க தலைமை ஆசிரியரும் அவரது நிலயை புரிந்து கொண்டு பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் வைத்திருக்கும் இரும்பு குழாய்களுக்கு கருப்பு வர்ணத்தை பள்ளி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறறு கிழைமைகளில் அடித்து கொடுக்கும்படி சொல்ல அவ்வாறு அந்த தொகையை தலைமையாசிரியரிடம் செலுத்தினார் எழிலின் அப்பா.

பள்ளி இறுதி தேர்விற்கு இன்னும் மூன்று மாதங்களே இருந்த சமயம் தேர்விற்கான கட்டணம் ருபாய் ஏழு செலுத்த வேண்டி இருந்தது. தலைமையாசிரியருக்கு எழிலரசியின் நிலைமை தெரிந்திருந்ததால் லயன்ஸ்கிளப் கொடுத்த ஏழை மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை வாங்கி எழிலரசிக்கு உதவினார்.

முக்கிய பாடங்களில் தேர்ச்சி பெற வகுப்பாசிரியரிடம் சில மாணவர்கள் டியூஷன் சேர்ந்தனர், எழிலுக்கு கணிதம் மற்றும் ஆங்கில இலக்கணத்திற்கான டியூஷன் தேவை என்பதால் வகுப்பாசிரியர் கேட்டபடி மாதம் ருபாய் இருபத்தைந்து செலுத்தி ஒரு மாதம் டியூஷன் சேர்ந்தாள்.

இன்னும் பரீட்சைக்கு ஒரு மாதமிருந்தது, பதினைந்து நாட்கள் மட்டுமே டியூஷன் சொல்லி
தர போவதாகவும் மற்ற பதினைந்து நாட்களில் எல்லா பாடங்களையும் மறுபடி படிக்க விடுமுறை என்றும் வகுப்பாசிரியர் கூறினார். பதினைந்து நாட்களுக்கு இருபத்தைந்து ருபாய் டியூஷன் பணம் கட்ட வேண்டும் என்று கூறினார் வகுப்பாசிரியர், எழிலினால் மீண்டும் டியூஷனுக்கு கட்டுவதற்கு பணம் இல்லை என்பதால் ஒரு மாதம் மட்டுமே டியூஷன் போக முடிந்தது.

பதினைந்து நாட்கள் படிப்பதற்காக கொடுக்கப்பட்டிருந்த விடுமுறையில் நன்றாக எல்லா பாடங்களையும் படித்து விட்டு தேர்வெழுதி வெற்றி பெற்றாள் எழில். தேர்வுகளுக்கான முடிவு வெளிவந்த சில தினங்களில் ராமு தனது தங்கையை எழிலின் வீட்டிற்க்கு அனுப்பி இருந்தான், புத்தகங்களை திருப்பி வாங்கி கொள்வதற்கு வந்திருந்த ராமுவின் தங்கையிடம் எதற்கு இந்த புத்தகங்கள் என்று விசாரித்தாள் எழில், பிளஸ் டு பரீட்சை எழுத போவதாக சொல்லி புத்தகங்களை வாங்கி சென்றாள் ராமுவின் தங்கை.

ஒரு வருடத்திற்குப் பின் ராமுவின் தங்கையை பார்த்த போது தேர்வு எழுதினாயா என்று விசாரித்தாள் எழில், தேர்வு எழுதி தோல்வியடைந்து விட்டதாகவும், திரும்பவும் எழுதும் விருப்பம் இல்லை என்று சொன்னாள் ராமுவின் தங்கை.

ராமுவின் பாட புத்தகத்தின் தோல்வி கதை மூலம் எழில் தெரிந்து கொண்ட செய்தி புத்தக ராசி என்பது ஏதும் கிடையாது நன்கு படித்து பரீட்சை எழுதுவதால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது.* * * * * *

எழிலுக்கு கல்லூரிக்குச் சென்று பட்ட படிப்பு படிக்க ஆசை ஆனால் அதற்க்கு பண வசதி இல்லை என்பதால் தபால் வழியில் மேல் படிப்பு வரை படித்து முது கலை பட்டதாரி ஆகிவிட்டாள், பல இடங்களில் வேலைக்காக விண்ணப்பித்தும் ஒரு வேலையும் சரியானபடி கிடைக்காதது எழிலை மிகவும் துன்பத்தில் தள்ளியது.

வீட்டிலேயே டியூஷன் சொல்லி கொடுத்து வந்தாள் அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. எழிலின் அப்பாவிற்கு வர்ணம் பூசும் வேலை என்பதால் வர்ணத்தின் நெடியினை சுவாசித்து வந்ததால் காச நோயாளி ஆகி படுக்கையாகிவிட்டார். வறுமையின் கொடுமையால் உணவு இல்லாமல் எத்தனை நாள் தான் பட்டினியுடன் உழைக்க முடியும், எழிலின் அம்மாவினால் வீட்டு வேலைகளுக்கு போக முடியாமல் தலை சுற்றல் ஏற்ப்பட்டு வந்தது.

தன்னை ஆளாக்கிய பெற்றோருக்கு மருந்து மாத்திரைகள் வாங்கி தருவதற்கு கூட போதிய பணம் இன்றி மிகவும் கஷ்ட நிலைக்கு உள்ளானாள் எழில். பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்பார்களே அது போல.

இந்த நிலையில், ரமேஷ் தாய் தந்தையற்ற இளைஞன், தென்னக ரயில்வேயில் குமாஸ்தாவாக
வேலை பார்ப்பவன், தனது சம்பாத்தியத்தில் சேமித்த பணத்தில் தனது திருமணத்தை முடிக்க ஒரு நல்ல படித்த பெண்ணாக தேடி கொண்டு இருந்தவனுக்கு எழிலின் குடும்பத்திற்கு தெரிந்திருந்த ஒருவரின் மூலமாய் எழிலை திருமணம் பேசி முடித்தனர்.

எழிலின் திருமணத்திற்கு என்று ஒரு பைசா கூட சேர்த்து வைக்கவில்லை, பெண் நல்ல பெண்ணாக மட்டும் இருந்தால் போதும் என்று ரமேஷ் எழிலை அவளது வறுமையுடன் திருமணம் செய்து கொண்டான், அப்படித்தான் சொல்லி இருந்தார் ரமேஷை அறிமுகம் செய்து வைத்தவர்.

திருமணம் முடிந்த பின்னர் தான் தெரிந்தது ரமேஷுக்கு எழிலின் வறுமை பற்றி முழுவதுமாக சொல்லப்படவில்லை என்பது. ரமேஷ் எழிலின் வருமானத்தை பெருமளவில் எதிர்பார்த்தான். எழிலுக்கு
சரியான வேலை கிடைக்கவில்லை, குறைந்த வருமானமும் தற்காலிகமான வேலை வாய்ப்புகளும் தான் கிடைத்தன, இதனால் பணப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது, குடும்பத்தில் நிம்மதி பறி போனது, படிப்பிருந்தும் வேலையின்றி வருந்துவோரின் பட்டியலில் எழிலின் பெயரும் சேர்க்கப்பட்டது தான் மிச்சம், எழிலின் வாழ்வில் கருமேகங்கள் சூழலாயின.

" பிச்சை புகினும் கற்கை நன்றே " என்னும் வாக்கிற்கேற்ப்ப படித்தும் விடியலை காண இயலாத எழில் திருமணத்தின் மூலம் வாழ்வின் துன்பக் கடலினுள் தூக்கி எறியப்பட்டாள்.

* * * * * *5/17/2009

இல்லாமை

கோடையில்
வெயில்
சாப்பாட்டில்
காரம் புளி
செல்போனில்
பார்வர்டு மெசேஜ்

தொலைக்காட்சியில்
விளம்பரம்
இணையதளத்தில்
ஸ்பாம்
தொலைபேசியில்
ராங் கால்ல்ஸ்

கூட்டமில்லா சென்னை
கலப்படமில்லா மளிகைசாமான்
நெரிசலில்லா பேருந்து
பசியில்லா ஏழை
நோயில்லா பணக்காரன்

தாயில்லா குழந்தை
குழந்தையில்லா தாய்
முதிர் வயது கன்னி
காப்பக முதியோர்
வேலையில்லா பட்டதாரி

கவியில்லா கவிஞ்சன்
கவிஞ்சன் இல்லா கவி
கருவில்லா கதை
ராகமில்லா பாட்டு
ஏடில்லா எழுத்து

காதலில்லா இளமை
முதுமையில் காதல்
தூக்கமில்லா கனவு
வில்லன் இல்லா காதல்
முத்தமில்லா ஆங்கில சினிமா
முடிவில்லாத வாழ்க்கை

பறவை இல்லா மரம்
கூடில்லா பறவை
மரமில்லா காடு
பெயரற்ற ஊர்
ஊரற்ற நதி
மீனில்லாக் கடல்

கண்ணிருந்தும்
குருடன்
காதிருந்தும் செவிடன்
வாயிருந்தும் ஊமை
காலிருந்தும் ஊனம்
மனமில்லா மனிதன்
பணமில்லா மனிதன்

ஜு ........ ஜு ....... பி .......5/12/2009

அழகிய பிரதமர்ராஜீவ் காந்தியின் அழகான புன்னகையை எப்படி மறக்க முடியும், பிரதம மந்திரிகளாய் இருந்தவர்களிலே மிகவும் அழகான ஆண் மகன் ராஜீவ் காந்தி, அவர் பேசும் இனிய ஆங்கிலச்சொற்க்களை கேட்டு கொண்டே இருக்கலாம்.

அவர் இறந்த போது ' இவர் பிரதமராக ஆகி இருக்க கூடாது ' என்ற எண்ணம் தான் வேதனையை கொடுத்தது.

இந்திரா காந்தியின் சாயலையும் அவரது தகப்பனார் பெரோஸ் காந்தியின் சாயலையும் நேருவின் சாயலையும் சேர்த்து செய்த அழகிய காஷ்மிர வாலிபனின் சாயல், மிருதுவான அவரது தோற்றம் காண்போரை கவர கூடியது என்றால் அது மிகையாகாது.

அவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ந்து போனேன் , அப்போதெல்லாம் தூர்தர்ஷன் செய்திகள் மட்டும் தான் ஊடகங்களில் காண முடியும்.

அவர் மதராசுக்கு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வர போகிறார் என்பதே எனக்கு தெரியாது. அவர் இறந்த செய்தியை கேள்வி பட்ட பின்பு தான் நான் ஓரிரு நாட்களுக்கு முன்னர் அவரைப்பற்றிய கனவு கண்டது என் நினைவிற்கு வந்தது.

அப்போதெல்லாம் என் கனவில் ராஜீவ் காந்தி தான் அடிக்கடி வருவார், ஏன் என்றால் அவரது மென்மையான முகமும் சிரிப்பும் அழகிய ஆங்கில பேச்சும் நினைவில் நீங்காமல் இருந்தது தான் முக்கிய காரணம்.

அடிக்கடி அவர் என் கனவுகளில் வந்துள்ளதால் அந்த குறிப்பிட்ட கனவை நான் பெரிதாக பொருட்ப்படுத்தவில்லை. ஆனால் அவர் இறந்த செய்தி கேட்ட பின்னர் தான் அந்த கனவை பற்றி உடனே என் தாயாரிடம் சொன்னேன்.

ராஜீவ் காந்தி அவர்களுடன் இரண்டு அல்லது அதற்கும் மேற்ப்பட்டவர்கள் ; காவி உடை அணிந்தவர்கள் ; ஒரு காட்டின் செடிகள் அடர்ந்த பகுதிக்கு அவரை அழைத்து செல்லுகின்றனர், நான் அவரது உருவத்தை பின் புறத்திலிருந்து பார்க்கிறேன். அவருடன் செல்லுபவர்கள் எல்லோருமே காவி உடை அணிந்தவர்களாக இருப்பதால் ஒரு ஆசிரமத்தை காண்பிக்க கூட்டி செல்வது போல பேசி கொள்கிறார்கள்.

இவ்வாறு என் கனவு இருந்தது. இன்றும் என்னால் அந்த கனவை மறக்க முடியாது, அது மட்டுமில்லாமல், அவர் என் கனவில் எப்போதும் ( இந்தியர்கள் அணிந்து கொள்ளும் ) கோட் அணிந்து கொண்டிருப்பது போல தான் காண்பதுண்டு, அன்று வந்த கனவில் அழகிய மெல்லிய வெள்ளை வேட்டியும் வெள்ளை ஜிப்பாவும் அணிந்து கழுத்தில் காங்கிரஸ் கொடி நிற பார்டர் உள்ள அங்க வஸ்திரம் அணிந்து கொண்டு ஒரு அகன்ற தார் பாதைலிருந்து இறங்கி அதன் ஓரத்தில் அடர்ந்துள்ள காட்டு பகுதிக்குள் போவது போன்ற கனவு.

மறக்க முடியாத அழகிய முகமும் சிரிப்பும் , இனிய ஆங்கில குரலும்.


5/11/2009

சுமைதாங்கிஉடலில் இளமை சுமந்து
நெஞ்சில் காதல் சுமந்து
உதட்டில் புன்சிரிப்பு சுமந்து
கண்ணில் ஏக்கம் சுமந்து
காதில் வசை சுமந்து
வயிற்றில் கரு சுமந்து

பெற்றபின் இடுப்பில் சுமந்து
வளர்ந்தபின் மார்பில் சுமந்து
மணமுடிந்த பின்னே
மனதில் சுமந்து

வயதான காலத்தில்
முதுமை சுமந்து
உயிர் காற்று பிரிந்த
பின்னே
எட்டு கைகள் சுமந்து
மண்படுக்கை மீதுறங்க
சுமைதாங்கிகளின்
சுமைதாங்கியாய்
பூமாதேவி.........கோடைகால பயிற்ச்சி வகுப்புகள்கோடைக்காலத்தில் நமது நாட்டில் வெயிலின் கோரம், உக்கிரம் பற்றி சொல்லி தெரிந்து கொள்ள தேவை இல்லை. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கோடை என்பது மிகவும் சரியான தட்ப வெட்ப்பம் கொண்டதாக அமைந்து இருப்பதால் ( இப்போதெல்லாம் அங்கேயும் வெயில் சுட்டு எரிப்பதாக கேள்வி ) மக்கள் கோடை விடுமுறைகளை வெகுவாக அனுபவிக்க முடிகிறது.

சமீப காலமாக நமது ஊர்களில் கோடை விடுமுறைக்கு நீச்சல் , மியூசிக் , கணித வகுப்பு என்று குழந்தைகளை பாடாய் படுத்தும் வகுப்புகளை ஏற்ப்படுத்தி பணம் பறிக்கும் உத்தியாய் நடத்தப்படுவதும் கோடையின் புது வரவுகளாக ஆங்காங்கே அரங்கேறுகிறது.

மண்டையை பிளக்கும் வெயலில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது மருத்துவ ரீதியாகவும் சரியானதாக இருக்காது என்பதாலும் ஒரு வருடம் முழுவதும் புத்தகம் படிப்பு, டியூஷன் வகுப்பு என்று இருந்த குழந்தைகளுக்கு மற்ற உறவினர்களின் வீட்டிற்க்கு போகவோ அல்லது விருப்பப்பட்டபடி விளையாடி கொண்டிருக்கவோ கொடுக்கப்படும் விடுமுறை நாட்க்களிலும் மறுபடியும் கணித வகுப்பு நீச்சல் வகுப்பு என்று ஏதேதோ புதிய வகுப்புக்களுக்கு பணத்தையும் நேரத்தையும் செலவிட வைப்பது எந்த விதத்தில் குழந்தையின் மன நிலைக்கு ஒத்து போகும் என்பதை புரிந்து கொள்ளாமலே, அதிலும் கோடையின் உக்கிரத்தில் அவர்கள் மீது திணிப்பது என்பது என்னை பொறுத்தவரையில் " குழந்தை வதை தடுப்பு சட்டம் " என்று ஒன்றை ஏற்ப்படுத்தி இத்தகைய செயல்களில் இருந்து அவர்களை மீட்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

வேலைக்கு போகும் பெற்றோர்களை உடைய குழந்தைகளாக இருப்பின் அவர்களை உறவுக்காரர்களின் வீட்டிற்கு அனுப்பி வைக்கலாம், அல்லது உறவுக்காரர்களை தங்கள் வீட்டிற்கு வரவழைத்து குழந்தைகளுடன் வீட்டிலேயே விளையாட அனுமதிக்கலாம், மாலை வேளைகளில் அவர்கள் விரும்பும் விளையாட்டை விளையாட அனுமதிக்கலாம். இன்னும் எத்தனையோ பொழுது போக்குகள் வீட்டிலிருந்தவாறே குழந்தைகளை விளையாடுவதற்கு அனுமதிக்கலாம், இதற்க்கெல்லாம் கோடை விடுமுறை தான் மிகவும் பொருத்தமான காலம். குழந்தை பருவமென்பது மென்மையான பருவம், அத்துடன் எத்தனை வயது போனாலும் மனதில் பசுமரத்தாணி போல நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது என்பதை நாம் மறந்து விட கூடாது.

கோடை விடுமுறையிலும் இதை படி அதை படி என்று அவர்களை நச்சரிப்பதை விட்டு அவர்கள் விருப்பப்படி விளையாடவோ அவர்களுக்கு பிடித்தவற்றை செய்ய அனுமதிக்க வேண்டும், இல்லையென்றால் பெற்றோர் மீதும் படிப்பின் மீதும் சலிப்பு ஏற்ப்பட்டு விடும். நாளடைவில் மனித இயந்திரமாக அவனையோ /அவளையோ மாறிவிட செய்துவிடும்.

கோடை விடுமுறையை விருப்பப்படி குழந்தைகள் கொண்டாட அனுமதியுங்கள். முடிந்தால் நீங்களும் சேர்ந்து கொண்டாடுங்கள்.

மனம் கவர் தலைவா

Monday, 11 May 2009


அஞ்சுகத்தாயின்
கருவறை கொடுத்த
தமிழ் மேதையே

தமிழ் நாடு
தண்ணீர்
பஞ்சம் - ஏன்
மின்சார பஞ்சம் கூட
கண்டிருக்கும்
ஆனால்
தமிழ் பஞ்சம் கண்டதில்லை

சரித்திரத்தில் இடம்
பெற்றோர் பலர் உண்டு
அவனியிலே

சரித்திரமாய் வாழும்
தமிழன் நீ இருக்கையிலே
தமிழ்நாட்டில் ஏது பஞ்சம்

அருமை தமிழ் கொண்டு
அடுத்தவரை நிந்திக்காத உன்
பெருந்தன்மை
உன் மீது தொடுக்கப்படும்
கணைகளைஎல்லாம்
எத்தனை லாவகமாக
ஏற்கிறாய் நீ

அத்தனையும் உனக்கோர்
அறிய வாய்ப்பாக
அமைத்து கொண்டு - நீ
பாங்காய் எடுத்துரைக்கும்
விடைகள் தான்
சொல்லுகிறதே உன்
திறமைதனை

ஆளப்பிறந்தவன் நீ
தமிழை வாழ்விக்க
பிறந்தவன் நீ

அக்கால தமிழ் போற்றிய
அரசனாய் நீ
பிறந்திருக்க வேண்டும்

இக்கால மந்திரியாய்
பிறந்து

மக்கள் துயர் நீக்கி
தமிழ் வளர்த்து
வாழ்வாங்கு வழுகின்றாய்

என் உள்ளம் கவர் தலைவா
உன் அருமை நாடறியும்
உன் பெருமை தமிழறியும்
நீ எங்களுக்கு கிடைத்திட்ட
மதம் பிடிக்காத ஆனை
வாழ்ந்தாலும் இறந்தாலும்
ஆயிரம் வராகன்

தெற்கு தேயுதென்ற
விதி மாற்றி
தெற்கு வளர
விதி செய்த உன்
வித்தக யுக்தி கண்டு
பொறுக்க வொண்ணா சிலர்
வெறுப்படையாமல்
வெறுமனே
விட்டு விட்டால் உன்
வெற்றியை
ஏற்றது போலலவா
இருந்துவிடும்
பொருந்தாத எதையோ
சொல்லி
தன்
மனக்குறை
ஆற்றி
கொள்ள வசை
பாட்டு பாடட்டுமே

எல்லார்க்கும் பெய்யும்
மழை போலே
வசை பாடுபவரும்
சேர்ந்தே அனுபவிக்கும்
வகையில் நீ
செய்து வரும்
திட்டங்கள்
எல்லாம்
உன் புகழ்
பாடுகிறதே

உன்னைப்போல் இனியொரு
தமிழின தலைவனை
காண்பதறிது
உன்னுடன் நாங்களும்
வாழ்ந்தோம்

என எண்ணுகையில்
மனம் பூரிக்கிறது.

வாழ்க எம் தலைவன் !!!
வாழ்க தமிழ் !!!
[ புகழ் பாடினால் உமக்கு பிடிக்காதென்று அடிக்கடி கவிஞ்சர் வைரமுத்துஅவர்கள் கூறுவதுண்டு, நான் இங்கு உமது புகழ் பாடவில்லை, "உள்ளதை சொல்லுகிறேன்", இதற்குப்பெயர் புகழ் என்றால் , புகழுக்குதகுதி உடையோரை புகழாமல் வேறு யாரை புகழ்வது ? ]


முதலிரவு

Monday, 11 May 2009


மணப்பெண்ணை
பட்டுப்புடவையால் மூடி
நெற்றி
கழுத்து கை
இடுப்பு கால் முழுதும்
நகைகளால் மூடி
தலை மல்லிகையால் மூடி

கண்களில் தூக்கத்தை சுமந்து
கைகளில் வெள்ளிச்சொம்பில்
பால் சுமந்து
கற்ப்பனையில் கேள்வி சுமந்து
முதலிரவு அறைக்குள் அவள்

பட்டு வேட்டி
பட்டு முழுக்கைச்சட்டை
வழு வழுக்க
புது உள்ளாடை " இருக்க "
பெண்வீட்டு மோதிரம்
மாமன் மோதிரம்
அக்காள் போட்ட சங்கிலி
கௌரவ சாங்கிலி
மோதிரங்களும் கனக்க
முதலிரவு அறைக்குளே அவன்

தூக்கம் கண்ணை இருக்க
இன்றைக்கு தூங்கி நாளை
பார்ப்போம் என நினைத்து

பொழுது விடிந்தவுடன்
வெளியே காத்திருக்கும்
பெண்கள் கூட்டம்
முதலிரவின் நியாயம் தீர்க்க
தன் அக்காவின் கல்யாண
அனுபவங்கள் நினைவு வர

பால் குடித்து
விளக்கணைத்து
துகிலுரித்து
அப்பாடா ! ஒரு வழியாய்
இறுகிய உள்ளாடைகளை
களைந்தெறிந்து
இயந்திரம் போல்
தூக்கத்தில் ...........
காரியம் முடித்து

காலை அத்தை மாமி
சித்தி அண்ணி என
வந்திருந்த பெண்கள் கூட
மணப்பெண்ணை சுற்றி
சுற்றி பேசி முடித்து

ஏதோ முடிவுக்கு வந்து
' சந்தோஷமா இருந்தியா ' என்று
ஒரு கிழவி கேட்டக்க
ஒன்றுமே புரியாமல்
விழித்தாள் மணப்பெண்

என்னடா மச்சான்
எல்லாம் நல்லா இருந்திச்சா
என்றான் அக்காவின் கணவன்
எதை கேட்டார் என்று
விழித்தான் மணமகன்.