Translate

4/06/2009

கடிதம்

அன்புள்ள நண்பனுக்கு.....

இங்கு நான் நலம் உன் நலம் அறிய அவா, உன் வீட்டில் உள்ள அனைவரையும்நான் விசாரித்ததாக சொல்லவும்,

கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது, இளநீர் தர்பூசணி போன்றதாகம் தீர்க்கும் காய்களின் வருகை அதிகமாக இருந்தாலும் விலையும்அதிகமாகத்தான் இருக்கிறது, வேறு வழி இல்லை வாங்கி சாப்பிட்டு தானே ஆகவேண்டும், தினமும் நீர் மோர் குடி அத்துடன் கிராம புறங்களில் அன்றாடம்சாப்பிடும் முந்தையநாள் செய்த சோற்றில் நீருற்றி வைத்து அடுத்தநாள் அதைசிறிது உப்பிட்டு சாப்பிடு, உடம்பிற்கு நல்லது அதிலும் வெயிலுக்கு ஏற்றது, உனக்கும் தெரிந்திருக்குமே கேழ்வரகு மாவில் கூழ் செய்வது அதையும்அடுத்தநாள் எடுத்து உப்பு போட்டு நீரில் கரைத்து கூழ் என்று குடிப்பார்கள்இதுவும் உடலுக்கும் வெயிலுக்கும் ஏற்றது.

நீ அலுவலகம் செல்வதால் இவற்றையெல்லாம் சாப்பிட முடிவதில்லைஎன்பாய், மோர் சாதமாவது தவறாமல் சாப்பிடு, எனக்கு உன்னை பற்றி நன்குதெரியும், வார இறுதி நாட்களில் நாட்டு கோழியை ருசியாக சமைக்க சொல்லிஒரு பிடி பிடிப்பாய் , அதிலும் நாக்கிற்கு சற்றே சுரீரென்று இருக்க வேண்டும்என்பதற்காக காரம் அதிகம் போட சொல்லி சாப்பிடுவாய், ஆனால் அதைகொஞ்சம் நிறுத்தி வை கடும் கோடை துவங்கி இருப்பதால் உடல் சூட்டிற்குகோழி குழம்பு ஏற்றது அல்ல, 'நெப்போலியனையும்' கூட கொஞ்ச நாளாவதுமறந்து விடு, எந்த ஹாட் ட்ரிங்க்ஸ்சும் வேண்டாம். முடிந்தால் அவற்றைமறந்தே விடு என்று தான் சொல்வேன்.

இப்போது ஒரு சம்பவத்தை உன்னிடம் சொல்ல போகிறேன் நீ அதை கேட்டுநிச்சயம் சிரிப்பாய் என்று நம்புகிறேன், 'கடி' ஜோக் என்று சொல்லி சிரிக்காமல்விட்டு விடாதே, நடந்தது என்னவென்றால், நான் உன்னிடம் ஏற்கனவேசொன்னது போல என்னை 'யாரோ' follow பண்ணுகிறார்கள் அல்லவா, அவர்கள் X என்று வைத்துகொள், ஏன் என்றால் நானும் அந்த கோமாளியை இன்னும்நேருக்கு நேர் சந்திக்கவில்லை, அவன் என்ன செய்தான் தெரியுமா நான்மருத்துவரிடம் சென்ற போதும் அங்கேயும் என்னை பின் தொடர்திருக்கிறான்மடையன், அங்கு என் வீட்டுகாரர் நைசாக நழுவி 'எங்கேயோ' ஏதோ வாங்கிவருகிறேன் என்று சொல்லி போன பின் இவன் வந்து மருத்துவரை காணகாத்திருப்போரின் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டான், அங்கிருந்த பெண்மருத்துவரை இனி பார்க்க முடியாது என்று சொல்லி விடவே அந்த பெண்ணைதனியே வெளியே அழைத்து கொண்டு போய் தாங்கள் இன்னாரென்றும் ( நான்அப்போது ஒரு புத்தகம் படித்து கொண்டிருந்தேன் அவர்கள் பேசுவதை கேட்டுகொண்டிருந்தேன் அவன் இன்னொருவனுடன் வந்திருந்தான் எனநினைக்கிறேன், பேசிய குரல்களை நான் கவனித்தேன் ), நான் என்ன புத்தகம்படிக்கிறேன் என்றும் கேட்டு சொல்லும்படியும் சொல்லி அனுப்பி இருக்கிறான், என்னிடம் அந்த பெண் வந்து 'என்ன புத்தகம் படிகிறீர்கள்' என்று கேட்ட போதுஎதற்கு இதை இந்த பெண் கேட்க்கிறாள் ' என்று தோன்றியது, அது மட்டும்அல்லாது அந்த பெண் இப்படியெல்லாம் கேட்க்க கூடிய பெண் அல்ல என்பதும்எனக்கு தெரியும்.

அத்தோடு நிற்கவில்லை, நான் எழுதும் இடுகைகளை கூட படிக்கிறான்மடையன், படிப்பதற்க்குதானே நான் எழுதுகிறேன் ஆனால் இவன் என்னசெய்திருக்கிறான் தெரியுமா, எனது முந்தைய இடுகையை படித்துவிட்டு எனதுஅடுத்த வீட்டுகாரரிடம்
' , 'உங்கள் குழந்தை மின்சாரம் இல்லாததால் இரவுதூங்காமல் அழுது கொண்டிருந்தது என்று இந்த பெண் இணைய தளத்தில் எழுதிஇருக்கிறாள்' என்று ஒன்று கிடக்க ஒன்றை உளறி இருக்கிறான், அடுத்தவீட்டுகாரர் அந்த குழந்தையை திட்டி கொண்டே இருந்தார் , அப்போது தான்தெரிந்தது இந்த விஷமி இணையதளத்தில் நான் எழுதிய 'மின்சார துண்டிப்பு ' பற்றிய இடுகையை படித்துவிட்டு தப்பு தப்பாக சொல்லி திரிகிறான் என்பது


இணைய தளத்திலும் ISP ஏற்கனவே நான் எந்த website பார்க்கிறேன் யாரிடம் chat செய்கிறேன் என்பதை பின்னாலேயே நன்றியுள்ள நாயாக கண்காணித்துவருவதுடன் என்னுடன் chat செய்பவர்களிடம் நான் யார் எந்த ஊரிலிருந்துசாட்டிங் செய்கிறேன் போன்ற தகவல்களை அவர்களிடம் சொல்லி தான் ஏதோதங்கமலை ரகசியத்தை' கண்டு பிடித்து சொல்லி வருவது போல டுபாகூர்வேலை பார்க்கிறான், போதா குறைக்கு இப்போது என்னோட blog இல் எதை பற்றிஎழுதுகிறேன் என்று படித்துவிட்டு தப்பு தப்பாய் போட்டு குடுக்கிறான்.

நேருக்கு நேர் ஏன் வரமாட்டேன் என்கிறான் என்பது எனக்கு தெரியவில்லை, என்னை பின் தொடர இவனுக்கு எவ்வளவு பணம் கொடுக்கபடுகிறது என்றுதெரிந்தால் இவனை நானும் விலை பேச முடியுமே,

எனது இந்த கடிதம் உனக்கு என்னை பற்றிய ஒரு update ஆக இருக்கும் என நான்நம்புகிறேன், உனது பதிலை எதிர் நோக்கும் உனது அன்பு தோழி,

ரத்னா

பி. கு: முடிந்தால் உப்பு போட்டு காயவைத்திருக்கும் மீன்கள் அதாவது 'கருவாடு' என்று சொல்வார்களே அதை கூடவெயிலுக்கு சாப்பிடாதே.
"