Translate

4/04/2009

ஒன்றுபடுதல் அவசியம்



கூட்டு என்பது சாப்பாட்டிலிருந்து வாழ்க்கையில் எல்லாவற்றிலுமே மிகவும்அவசியமாக இருக்கிறது.

கட்சிகள் கூட்டணி வைப்பதிலும் ஒரு நாட்டையோ ஒரு மாநிலத்தையோ ஆளதேவைப்பட்டால் கூட்டணி சேர்ந்து நடத்துவது என்பது எந்த விதத்திலும் தவறுஎன்றோ சரி இல்லை என்றோ சொல்லவே முடியாது.

அவியல் தான் விசேடங்களுக்கு பதார்த்தமாக சமைக்கின்றனர் இதில் எத்தனைவகையான காய்களை சேர்த்து சுவையை கொண்டு வருகின்றனர்,

குடும்பத்திலும் கூட மனைவி கணவன் மாமனார் மாமியார் என்றுஎல்லோருடைய கூட்டணி சரியாக இருந்தால் தான் அந்த குடும்பம் நிம்மதியுடன்வாழ முடிகிறது.

சமுதாயத்தில் கூட ஒரு தெருவிலோ ஒரு கிராமமோ அல்லது ஒரு apartment ஆக இருந்தால் கூட கூட்டணி இருந்தால் தான் எந்த காரியத்தயும் சரிவர செய்யமுடிகிறது.

கூட்டணியில் சேர்வது போல சேர்ந்து விட்டு பின்னர் வெற்றியோ தோல்வியோகிடைத்த பின்னர் வேறு முகம் காட்டி கூட்டணியை விட்டு விலகி போவோரும்இருக்கத்தான் செய்கின்றனர். இதற்காக கூட்டணியே கூடாது என்பதனால் பலன்இருக்காது.

சாப்பாட்டில் எப்படி "கூட்டு" சுவைக்கிறதோ அதே போல பல காரியம்வெற்றியடையவும் கூட்டு மிக அவசியம், அதுதான் சுவை மிகுந்தது, ஒருஎதிரியை தோற்கடிக்க வேண்டுமானால் பலம் எதிரியை விட அதிகம் தேவைஅதற்க்கு கூட்டணி, ஒன்றுபடுதல் மிக அவசியமாகிறது. யாருடன்ஒன்றுபடுகிறோம் என்பதும் அதைவிட அவசியம், நட்டாற்றில் விட்ட கதைநிறையவே கேள்விபட்டிருக்கிறோமே.

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இங்கு ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும்தாழ்வே"