Translate

4/09/2009

பேரின்பம் ... ஒரு மகா அனுபவம்

பேரின்ப நிலையின் துவக்க காலங்களில் காணாததை கண்ட மகிழ்ச்சி, அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் கொண்டு வர முயற்சி செய்யலாம் என்று தோன்றியது, காரணம், தான் பெற்றதை தான் கண்டதை மற்றவரும் அனுபவித்து மகிழட்டுமே என்பதால்.

ஒரு வாலிபன் ஒரு பெண்ணை முதன் முதலில் கண்டு அவள்பால் காதல் கொண்டு அவளை வருணிப்பான், அந்த வருணனைகளை கேட்போர் அந்த பெண் ஒரு பேரழகி என்று நினைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கற்ப்பனை செய்து வைப்பார், பின்னர் அப்பெண்ணை காண வாய்ப்பு கிடைத்து அல்லது வாய்ப்பு கிடைக்க போகிறது என்ற சமயத்தில் ஒவ்வொருவரும் தமது கற்பனையில் கண்ட அந்த பெண் எதிரில் வரும்போது சிலரது கற்ப்பனையில் 25 சதவிகிதம் சிலர் 50% சிலர் 1% தான் கற்ப்பனை செய்தது போல இருக்கிறாள் என்று எண்ணி கொள்ளுவார்கள், சிலர் அதுகூட இல்லை என்பதுபோல, ஏமாந்தது போவார், சிலர் கற்ப்பனை ஏதும் செய்யாமலேயே அவளை நேரில் காணும்வரை வரை பொறுமை காப்பர்.

ஆக மொத்தத்தில் அவளது காதலனின் கர்ப்பனைக்குத்தான் அவள் அழகியே தவிர அதை கேட்டு கற்ப்பனை செய்து கொண்டிருப்பவர்களது கர்ப்பனைக்கு அவள் காதலி அல்லவே?

இது போலத்தான் நாம் அனுபவித்த பேரின்பம் என்பது என்னவென்று கேட்போர்க்கு சொல்லும் பதில் மூலம் ஏற்ப்படும் கற்பனைகள் ஏராளம், கண்டவர் மாத்திரமே அதன் உண்மையை முழுவதும் அறிந்துகொள்ள முடியும்.

பேரின்பம் என்பது ஒரு விவரிக்க முடியாத, விவரிக்க இயலாத சுவைக்க சுவைக்க தெவிட்டாத ஞான அனுபவம். அதன் விஸ்தாரம் என்பது அளவில்லாதது.