Translate

4/16/2009

சொல்லுவதெல்லாம் உண்மை ( என்னை தொட்ட காற்று........)


மற்றேதும் புக இயலாத இடத்தில் எல்லாம் புகுந்துவிடும் காற்று, பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும் இவற்றில் ஓன்று மனிதனின் உடலின் இல்லாமல் போனால் உயிர் உடலை விட்டு நீங்கிவிடும்,

ஆகாயத்தில் காணப்படும் எத்தனையோ பெயரிட முடியாத பூதங்கள் இருக்கிறன என்று வான் ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகின்றனர், இயற்கையின் மாற்றங்களினாலும் பரிணாம மாற்றங்களினாலும் மனிதனும் உயிரினங்களும் உண்டாகி இருக்கிறது என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்து, இவற்றையெல்லாம் நிரூபிக்க பலவிதமான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இறந்தபின் மனிதன் நட்ச்சதிரமாக மாறுகிறான் என்றொரு நம்பிக்கையும் மனிதர்களிடையே இருந்து வந்துள்ளது, இதை நிரூபிக்க இயலாமல் இருப்பதனால் இந்த நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று சொல்லிவிட முடியாது, ஏன் என்றால் இயற்கையில் அண்ட சராசரங்களில் ஏற்பட்ட மாறுதல்கள் தான் பூமி உண்டாக காரணம் என்ற கருத்து உண்மையானால், அண்ட சராசரங்களில் உள்ள ( ஐந்து பூதங்களைப்போல) கலவையாக மனிதன் ஏன் உண்டாகி இருக்க கூடாது? அல்லது அண்ட சராசரங்களில் இருக்கும் மற்ற கிரகங்களின் துகள்களுக்கும் மனிதனுக்கும் சம்பந்தம் ஏன் இருக்க கூடாது?

இறந்தபின் ஒரு மனிதன் மண்ணாக முடியுமானால் அவன் ஏன் ஒரு நட்ச்சதிரமாக முடியாது?

காற்று மண் நீர் நெருப்பு வான் இந்த ஐந்திலுமிருந்து மனிதனும் பூமியின் மேல் வாழும் உயிரினங்களும் உண்டாகி இருக்க, அண்ட சராசரங்களில் உள்ள கிரகங்களில் உள்ள மற்ற பூதங்களுக்கும் மனிதனுக்கும் ஏன் சம்பந்தம் இருக்க கூடாது?

" வானாகி மண்ணாகி வழியாகி ஒளியாகி,
ஊனாகி உயிராகி உண்மையுமாய்,இன்மையுமாய்
கோனாகி, யான் எனதென்றவரை
கூத்தாட்டு, வானாகி நின்றாயே
என்சொல்லி வாழ்த்துவமே "

என்ற இந்த பாடலில் எத்தனை அழகாய் சொல்லப்பட்டுள்ளது இந்த பேருண்மை.

ஒரு மாமேதை, ஒரு மகான் பூமியில் பிறக்கிறார் என்பதை ஒரு வால் நட்ச்சத்திரம் வானத்தில் தோன்றுவதால் அறிய முடிகிறதே, அதே போன்று ஒரு மாமேதை அல்லது மகான் மரணத்திற்கும் அதே வால் நட்ச்சத்திரம் காரணமாக வருகிறதே, இப்படி பட்ட நிகழ்வுகள் நிகழ்ந்த சரித்திரம் இல்லையா? இப்படி இருக்க ஒரு மாமனிதன் இறந்து அவன் ஏன் ஒரு நட்ச்சத்திரம் ஆக முடியாது?

மகான்கள் அப்படி ஒரு நட்ச்சதிரமாக ஆகிறார்கள், இதனால் தானோ என்னவோ "நட்ச்சத்திர" அந்தஸ்த்து கொடுப்பது என்ற ஒரு முறை உண்டாகி இருக்கிறதே????

ஒரு சாதாரண மனிதன் பிறந்து இறக்கிறான், அவன் பூமிக்கு வந்த காரணம் அறியாமலே இறக்கிறான், ஒரு மாமேதை/மகான் பூமிக்கு மனிதனாய் அவதரிக்கிறார், அவர் பிறந்த காரணத்தை சரியாக முடித்துவிட்டு மரித்த பின் ஒரு நட்ச்சதிரமாக மாறுகிறார்.

எதையுமே நிரூபித்தால் மட்டுமே ஏற்று கொள்ளப்படும் என்ற வாதத்தை முன் வைத்தால் பல நிகழ்வுகளுக்கு அனர்த்தம் தான் கிடைக்கும், சிலவற்றை நிரூபிக்க மனிதனுக்கு அறிவு கொடுக்கப்பட்டுள்ளது பலவற்றை அறிந்திருந்தாலும் நிரூபிக்க அறிவு கொடுக்க படவில்லை, நிரூபிக்க இயலாத காரணத்தால் கண் முன்னே நடப்பவற்றை "இல்லை" என்றோ "பொய்" என்றோ விதண்டாவாதம் செய்வதில் பலன் இல்லை.

மனிதனின் அறிவுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் எட்டவே எட்டாத பல அறிய நிகழ்வுகள் நிகழ்வதும் உண்மை, அவை நிருபிக்கபட்டாலும் நிரூபிக்க இயலாவிட்டாலும் உண்மை.



Bookmark and Share