Translate

4/14/2009

வேதாளம் சொல்லும் கதை......

விக்ரமன் மீண்டும் மரத்திலேறி அங்கு தொங்கும் உடலை தன் தோளில் போட்டு கொண்டு கீழே இறங்கினான், அப்போது அங்கிருந்த வேதாளம் எள்ளி நகைத்தது, " நான் கேட்க்கும் இந்த கேள்விகளுக்கு நீ பதிலை சொல்லா விட்டால் உன் தலைசுக்கு நூறாக உடையும் " என்றது வேதாளம்.

" உன் கேள்விகளை கேட்க்கலாம் " என்றான் விக்கிரமன்.

" உன்னை இணையதளத்தில் பின் தொடருபவன் யார்? " , " அவனைப்பற்றி இடுகை எழுதிய பின் முற்றிலுமாக இணையதளத்தின் தொடர்பை துண்ட்டிக்கிறானே, இதற்க்கு நீ என்ன செய்ய போகிறாய்? ", " இத்தனை வருடமாக இத்தகைய ( கயவன் ) துர் செயலை செய்து வரும் இவனுக்கு நீகொடுக்க போகும் தண்டனை என்ன " இந்த மூன்று கேள்விகளுக்கு பதிலை சொல்லா விட்டால் உன் தலை சுக்கு நூறாகும், என்று சொல்லி விட்டு மீண்டும் மரத்தின் மீது ஏறி கொண்டது வேதாளம்.

விக்கிரமன் அந்த உடலை மீண்டும் மரத்தின் மீது போட்டு விட்டு, வேதாளம்கேட்ட மூன்று கேள்விகளுக்கு பதிலை தேடி இணையதளத்தினுள் நுழைந்தான்.

வேதாளம் கேட்ட மூன்று கேள்விக்கும் ஒரே பதில் அவனொரு கயவன் எனபதுஅவனது இத்தகைய செயலில் இருந்து தெரிய வருகிறது என்பதும், கயவர்களுக்கு உலகில் என்ன நடக்கிறதோ அது அவனுக்கும் ஏற்ப்படும்என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்பதும் தான் இதன் பதில் என்றுகூறிய விக்கிரமன் மீண்டும் கணினியை சுவிட்ச் ஆன் செய்து மீண்டும் இணையதளத்தில் நுழைய முயற்சி செய்தபோது மீண்டும் அந்த கயவன் இணையதளத்தை துண்டித்தான்.

அந்த கயவனும் ( இணையதளத்தை துண்டிப்பவன் ) வேதாளத்துக்கு துணையாக மீண்டும் மீண்டும் மரத்திலேறி விடுவான்.