Translate

4/09/2009

பேரின்பம்

ஒவ்வொருவரும் பிறக்க ஒரு காரணம் இருக்கும் என நம்புவோர், அது எதற்குஎன்ற 'தேடலுடன்' வாழும் ஒவ்வொரு நிமிடமும், தேடுபவரின் தேடலுக்கானவிடை கிடைக்க துவங்குகிறது, எதை ஆழ்ந்து நினைகிறோமோ அதுவாகவேநாம் மாறுவதும் இயல்பே.

இந்த செயல் தேடுபவரிடம் பல சமயங்களில் வேகமாகவும் பல சமயங்களில்மந்தமாகவும் செயல்படுகின்றன, அந்த மந்தமான சமயம் பார்த்து சில நம்தேடலுக்கு அப்பாற்ப்பட்ட வேறொன்று, எதிரிடையான ஒன்று ( நாம் குறிப்பிட்டதேடலில் இருக்கும்போதும் இத்தகைய எதிரிடையான செயல்கள் நம்மை வந்துதாக்கி கொண்டுதான் இருக்கும் ) நமது பேரின்ப தேடலின் போக்கிலிருந்து திசைதிருப்பும், நமது மனம் மந்த நிலையில் உள்ளதால் எதிரிடையான செயல்களின்மீது நம் கவனம் திருப்பப்பட்டு, அவைகளால் சிலகாலம் பேரின்ப தேடலில் தடைஏற்ப்படும், அப்படி எதிரிடையான எண்ணங்களினுடே நாம் துரிதமாய்செல்வோமானால், அந்த எதிரிடையான எண்ணங்கள் நம்மை ஆக்கிரமித்துகொண்டு, முன் தேடிய பேரின்ப தேடல்களினின்று நம்மை முற்றிலும் விலக்கி, பின்னர், முற்றும் எதிரிடையான எண்ணங்களின் செயல்களின் ஆட்சி நம்மைமுற்றுகை இட்டுவிடும், அப்படி முற்றுகை இட்ட பின் அவற்றிலிருந்து விடுபட்டுதிரும்பவும் பேரின்ப நிலையை தேடுவோரும் உண்டு, அல்லது எதிரிடையானஎண்ணங்களினால் இழுக்கப்பட்டு அவற்றிலேயே நிரந்தரமாகி விடுவோரும்பலர் உண்டு.

பேரின்ப அனுபவம் என்பது, தன்னிலையில் இருந்தபடியே யோக நிலைக்கு நமதுஎண்ணங்களை ( ஆரம்ப காலங்களில் ) ஒன்று திரட்டி, அதன் பால் ஈர்க்கப்பட்டு, பின்னர் அதன் மகத்துவம் அதன் விஸ்தாரத்தை காண அவா கொண்டுமென்மேலும் அதன் பால் ஒன்றிவிடுதல், அதிலே முன்னேறுவது.

இதன் இரண்டாம் நிலையாக, மற்றவரோடு சேர்ந்து வாழ்ந்தாலும் தாமரை இலைநீர் போல, மனமும் எண்ணங்களும் பேரின்பம் பற்றிய நினைவில் ஒன்றிஇருக்கும், ( ஒருவிதத்தில் காதலில் மூழ்கி இருப்பவர்களை போலத்தான் ).

காதலில் மூழ்கியவர் பின்னர் துயரங்களை அனுபவித்து அவர் முதலில் கொண்டகாதல் கரைந்து உலக கவலைகளும் இயலாமையும் வாழ்க்கையில்எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகளும் காதல் கொண்டு களித்திருந்தமனதை, பாலையில் கானல் போல் மாற்றிவிடும்.

ஆனால் பேரின்ப நிலையை உணர்ந்து அதன் பால் ஈர்க்கப்பட்டு அதனூடேசெல்பவர் நிலை பற்றி சொல்வதர்க்கோர் வார்த்தை இல்லை, அந்த மஹா " அனுபவத்தை " பெற்றவர், ஒருநாளும் வேதனை காணார், கோபம் கொள்ளார் ( அவர் பேரின்ப நிலையில் உள்ள போது அவர் நிலை கலைக்க முற்படின் கோபம்கொள்வர் என்பது சொல்லி தெரிவதில்லை ), பொறாமை கொள்ளார், எதைகொடுத்தாலும் அவரடையும் பேரின்ப கதியை விட ஒருகாலும் ஒப்பு கொள்ளார். இப்படி சொல்லி கொண்டே போகலாம்.