Translate

4/06/2009

உணர முடியும்

நம்பினால் நம்புங்கள்...........


கணினி முன்னால் அமர்ந்தால் சமயம் போவதே தெரிவதில்லை, வீடெங்கும் ஒரே மணம் வீச ஆரம்பித்தது, சித்திரை மாதத்தில் அடுத்த வீட்டு மல்லிகை கொடியில் பூக்கள் மலரும் ஒரு சமயம் அதுவாக தான் இருக்கும் இல்லையே இந்த வாசனை மிகவும் வித்தியாசமாக இருக்கே, தினமும் இரவு மணி 1 ஆனால் போதும் இந்த வாசம் வீடு முழுவதும் நிறைகிறது, அடுத்து சற்று தொலைவில் ஒரு வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது அதிலிருந்து தான் இந்த வாசனை வீசுகிறதோ, குழப்பமாக இருந்தது, அதிகம் யோசிக்காமல் படுக்கையில் படுத்து உறங்கிவிட்டேன், எங்கள் வீட்டை சுற்றி எப்போதுமே வித விதமான நாற்றங்கள் வீசும், அதில் இதுவும் ஒன்று என்று நினைத்து கொண்டேன்.

ஒரு நாள் இரவு சரியாக மணி 1.15 அடுத்த அறையில் என் மகள் பரீட்சைக்காக படித்து கொண்டிருந்தாள், நான் எப்போதும் போல கணினி முன்னால், அப்போது நான் கேட்ட சப்தம் அது நிச்சயம் ஒரு மனித குரலாக இருக்கவே வாய்ப்பு இல்லை அப்படியொரு சப்தம், இன்னும் சரியாக 2 நிமிடங்களில் மனிதன் ஓடினால் கூட அத்தனை வேகமாக அவ்வளவு தூரம் ஓடி இருக்க முடியாது அதே சப்தம் திரும்பவும்.

எங்கள் வீட்டில் பேய்களை பற்றி சொல்லி கேட்டிருக்கிறேன், நான் காதில் கேட்ட "பேய் குரல்" அதுவே முதல் முறை என்பதால் எனக்கு curiosity அதிகமாகி விட்டது.

எனது மகளிடம் நானோ அல்லது அவள் என்னிடமோ இதை பற்றி பேசவே இல்லை, பின்னொரு நாள் நான் இந்த சப்தத்தை பற்றி சொல்லி கொண்டிருந்த போது அவளும் அந்த சப்தத்தை கேட்டது பற்றி சொன்னாள்.

பிறகு எனது பெற்றோரும் இத்தகைய நடமாட்டம் இருப்பது குறித்து பேசி கொண்டிருந்தனர், நாற்றங்களில் ஒவ்வொரு நாளும் ஒருவித நாற்றம் வர ஆரம்பித்தது, என் உடல் சுகவீனம் அடைவதும் பலவித எதிர்பாராத சங்கடங்களும் வந்து கொண்டிருந்தன, என்னால் உணர முடிந்தது இது ஏதோ கெட்ட ஆவியின் வேலைகள் என்பது, எங்களது வேதத்தை படிப்பதும் விடாமல் ஜெபங்களை சொல்வதுமாக இருக்க ஆரம்பித்த பின் இப்போதெல்லாம் எந்த வித தொல்லைகளும் ஏற்ப்படுவது இல்லை,

என் வீட்டின் அடுத்த வீட்டில் வசித்து வந்த என் தோழி வீடு மாற்றி கொண்டு வேறு இடம் குடிபெயர்ந்து விட்டதால் நானும் அவளும் கே. பாகியராஜின் ஒரு புதிய சினிமா வெளி வந்துள்ள சமயம் அது அதை பார்க்க மௌன்ட் ரோடுக்கு வர சொல்லி இருந்தாள், ஒரு முறை சரியாக மதியம் 12 மணி வெயிலில் பேருந்தில் இருந்து இறங்கி தியேட்டரை நோக்கி நடந்து கொண்டிருந்த சமயம், ரோடில் அவ்வளவாக நடமாட்டம் இல்லை, யாரோ மேலே வந்து தள்ளுவது போல இருந்தது, சினிமா பார்க்க போகும் விறுவிறுப்பில் அதைப்பற்றி யோசிக்கவே இல்லை, பின்னால் தான் தெரிய வந்தது அது ஒரு துர்காற்று என்பது.

அது உடலில் ஏற்படுத்தும் கோளாறுகளை மருத்துவர்களின் சிகிச்சைகளால் குணபடுத்தவும் முடிவதில்லை, அந்த கோளாறுகள் எந்த வித டெஸ்ட் எடுத்தாலும் அதில் கண்டறியவும் முடியாது, என் சொந்த வாழ்க்கையில் எனக்கேர்ப்பட்ட அனுபவங்களின் மூலம் என்னால் இதை நிச்சயம் சொல்ல முடியும்.

அதுவும் சாமான்யத்தில் போகவில்லை நிறைய ஜெபம் செய்துதான் போனது, கெட்ட சக்திகள் உண்டு அதை துரத்த நல்ல சக்தியின் துணை அவசியம்,

துர் சக்திகளின் தொல்லைகளை உணர முடியும் நாம் உணர்ந்தவற்றை பற்றி சொல்ல முடியுமே தவிர காண்பிக்க முடியாது.

கடவுளின் சக்தி என்ன செய்கிறது என்பது பற்றி கூட உணர்ந்த அனுபவத்தை சொல்ல முடியுமே தவிர காண்பிக்க முடியாது, ஒரு மருத்துவரால் குணமாக்க முடியாத பிசாசின் உபத்திரவத்திலிருந்து கடவுளின் சக்தி குணப்படுத்தி சுகமாக்கிய நபரை காண்பித்து prove பண்ண முடியும், பல கோவில்களில் இதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.