Translate

4/01/2009

சமுதாய எதிரிகள்
Be careful என்று நாம் பல காரியங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம், கொஞ்சம் அசந்தாலும் நம்மை விழுங்கி ஏப்பம் விட தாராக இருக்கிறது நம்மை சுற்றியுள்ள உலகம்.

எங்கே நாம் கவன குறைவாக இருக்க கூடாது என்றால் அப்படி ஒரு இடமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, எங்கும் எதிலும் பித்தலாட்டம் நிறைந்து காணப்படுகிறது.

நான் ஒரு குஜராத்திகாரர் நடத்தும் நிறுவனத்தில் ஒருமுறை வேலை செய்து வந்தேன் அப்போது நான் கண்டவை எனக்கு புதிதாக தோன்றின, அதாவது குஜராத்திகாரர்கள் மற்றவரிடம் வேலை செய்யும்போது, (பெரும்பாலும் அவர்கள் தாங்கள் ஜாதிகாரர்களிடம் தான் வேலை செய்வார்கள் ) வேலையை கற்று கொண்டு வேலைசெய்து வேலையில் நன்கு தேர்ச்சி அடைய துவங்கியபின் அவர் வேலை செய்யும் முதலாளியின் பணத்தை திருட்டு கணக்கு எழுதி வைத்து விட்டு, பணத்தையெல்லாம் அபகரித்து கொண்டு தனக்கென ஒரு நிறுவனத்தையோ தொழிலையோ துவக்கி கொண்டு போய் விடுவர், அதே போல அவரிடம் வந்து வேலைக்கு சேர்பவர்களும் அதையே செய்வர்.

அதாவது ஒருவனிடத்தில் திருடினால் தான் அடுத்தவன் முதலாளியாக முடியும் என்பதை formula வாக கைகொள்ளுவதன் மூலமே அவர்களால் முன்னுக்கு வர முடிகிறது என்பது அவர்களின் கொள்கையாகவே இருக்கிறது.

இணைய தளத்தில் சாட்டிங் செய்வதன் மூலம் நிறைய பேர் ஏமாந்து இருக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டு அதனால் அது எப்படி என்று பார்க்க நானும் சாட்டிங் சென்று பார்த்தேன், அடேயப்பா! வெளியுலகத்தில் நடக்கும் அத்தனையும் ஆட்க்களை நேராக பார்க்காமலேயே நடக்கிறது சாட்டிங் என்ற பெயரில், மோசடிகளில் தான் எத்தனை வகைகள்.....

ரயிலில் பயணித்த ஒருவர் என்னிடம் சொல்லியது, வண்டி ஏதாவது ஸ்டேஷனில் நிற்கட்டும் கழிப்பறைக்கு போய்விட்டு வரலாம் என்று காத்திருந்தாராம், அப்படி அவர் போய் விட்டு வந்துபார்த்தால் அவர் வைத்துவிட்டு போன பொருட்களில் அவரது லேப்டாப் வைத்திருந்த பையுடன் காணாமல் போனதாம், அலுவலக சம்பந்தப்பட்ட கோப்புகளை பூட்டு போட்டுத்தான் வைத்திருந்தாலும் காணாமல் போனபின் என்ன செய்ய.

எனக்கு தெரிந்த பெண் ஒரு ரகசிய ஏமாற்றத்தை பற்றி சொன்னாள் இப்படியும் நடக்குமா என்று நான் அசந்து போனேன், அவளுக்கு ஒரு நண்பர், அவர் அடிக்கடி அவள் வீட்டுக்கு வந்து போவாராம், இவள் பண பையில் வைக்கும் பணம் காணாமல் போய்க்கொண்டே இருந்ததாம், இவளுக்கு பணம் எங்கே போனது என்று ஒரே குழப்பம், பணம் இருக்குமிடம் அந்த நண்பருக்கு தெரியாதாம், வேறு யாரும் எடுக்க வாய்ப்பும் இல்லையாம், ஒரே குழப்பமாக இருந்ததாம் இவளுக்கு, பிறகு தெரிய வந்ததாம் அந்த நண்பர் magic கற்று வைத்து இருக்கிறார், அவரால் அடுத்தவரின் பொருளை அவருக்கே தெரியாமல் தன் கைக்கு கொண்டுவரும் magic கற்று தேர்ந்தவர் என்பது, இதனால் நாம் அறிவது யாதெனில் யாரையுமே நம்ப கூடாது என்பது தான்.

செல்போன்களில் DND என்ற ஒரு வசதி இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள், ஆனால் இந்த DND மூலம் எத்தனை நன்மை என்றால் என்னை பொறுத்தவரை " வேலியே பயிரை மேய்வது" என்பதுதான் நடக்கிறது, இந்த வசதியினை உபயோகப்படுத்தி அவசியமற்ற செய்திகளையும் அழைப்புகளையும் தவிர்க்க நினைத்து ஒரு complaint கொடுத்தால் அதை ஏற்றுக்கொண்டு ஒரு எண் நமக்கு கொடுக்கிறார்கள், அடுத்த நாற்ப்பதைந்து நாட்களுக்கு பின் உங்களுக்கு தேவையற்ற அழைப்புக்கள் வராது என்று சொல்லுகிறார்கள் ஆனால் அவர்கள் கூறுவது போல தேவையற்ற அழைப்புகள் நிறுத்த படுவது இல்லை, அவர்களே அழைத்து தொந்தரவு கொடுப்பதுடன், தேவையற்ற செய்திகளையும் அனுப்புவது அதிகமாவதுதான் மிச்சம். இந்த சேவையால் யாருக்கும் ஒரு பலனும் இருக்கவே வாய்ப்பு இல்லை, மற்றவர்களின் தேவையற்ற செய்திகளும் அழைப்புகளும் வேண்டுமானால் தடுக்கபடுகிறதே தவிர சம்பந்தப்பட்ட சேவையிலிருந்து நிறைய தேவையற்ற செய்திகளும் அழைப்புகளும் முன்பை விட இன்னும் அதிகரிப்பதுதான் பெரும் தொல்லை.

இணையதள சேவையில் ( ISP ) பிரச்சினை, wireless என்றால் தொல்லைகள் குறைவோ என்னவோ தெரியவில்லை, ஆனால் router மூலம் ( server ) தொடர்புகொள்ளும் சேவைகள் பெரும் தொல்லை, நாம் எந்த site பார்க்கிறோம் யாருடன் messenger ரில் பேசுகிறோம் என்று நோட்டம் விடுவது மட்டுமில்லாது, வேறே பல தொல்லைகளும் இவர்களால் உண்டு. அவை இங்கு பட்டியல் இட்டு மாளாது.

பால் பாக்கெட்டுகளில் கூட கலப்படமும் ஓட்டை பால் கவர்களும், பால் கவர்களை கையில் வாங்கினால் ஓட்டை கவர்களை வேண்டாம் என்று கொடுத்து விடலாம், கவர்களை வைத்துவிட்டு போனபின் போய் பார்த்தால் கவரில் இருந்த பால் எல்லாம் ஒழுகி விட்டு வெறும் கவர் தான் இருக்கும், இதற்க்கு காரணம் பால் கவர்களில் ஊசி குத்தி சிரிஞ் மூலம் பாலை எடுக்கிறார்கள் எடுத்த பாலுக்கு பதில் நீரை நிரப்பி துவாரத்தை அடைத்து விடுகிறார்கள் என்று பலரும் குற்றம் சுமத்துகிறார்கள் , அப்படி அடைக்காமல் விட்டு விட்ட பால் கவர்கள் தான் ஓட்டையாக நம்மிடம் வந்து சேர்கின்றன.

இந்த மாதிரியான சமுதாய எதிரிகளிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.