Translate

4/27/2009

பொருமை வேண்டும்........

ஒரு 23 வயது வாலிபர் வேலை சுமை தாங்காமல் மன அழுத்தத்தால் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார், என்றும் அவருக்கு திருமணமாகி சில மாதங்களிலேயே மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார் என்றும் செய்தி தாளில் படித்தேன், அத்துடன் புதுதில்லியிலும் ஒரு டீ காப்பீ ஷாப் நடத்தி வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி, அதைப்பற்றி எழுதியவர் மிகவும் வருத்தமுடன் எழுதியுள்ளார் அதற்க்கு காரணம், அவரது கடையில் டீ குடிப்பதற்க்காக சென்றவர் என்ற முறையில்,

அவர் எழுதி இருந்த அதே கண்ணோட்டத்தில் சற்று வித்தியாசமாக இங்கு எழுத நினைத்தேன்:

" நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ "

இளைய சமுதாயத்தை ஒட்டு மொத்தமாக குறை சொல்ல மாட்டேன், ஆனால் நான் கண்ட சில குறைகளை எடுத்து சொல்லுவதால் நல்லது நடக்கும் என்று நம்பியே சொல்லுகிறேன், எடுக்கும் எந்த முயற்சிக்கும் நிச்சயம் முன் யோசனை அவசியம் என்று நான் நம்புகிறேன், பல பேர் இப்படி சொல்லுகிறார்கள், அதாவது " இந்த காலத்து இளைஞ்சர்கள் மிகவும் தெளிவானவர்கள் அவர்கள் எதையும் தெளிவுடன் சிந்தித்து செயல் படுகின்றனர் " என்று.

அப்படி சிந்தித்து தான் செயல்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் இந்த மாதிரியான சோகங்களும் நிறைய விவாகரத்து வழக்குகளும் நமக்கு வேறு ஒன்றையும் புரிய வைக்கிறது, எதையும் அனுசரித்து போகும் மனப்பான்மை குறைவாக இருக்கிறது என்பதும், எடுக்கின்ற முடிவில் எவ்வளவு உறுதியுடன் செயல்படுகிறார்களோ அதே உறுதியுடன் வாழ்க்கையை அமைத்து கொள்வதிலும் தெளிவு இல்லை என்பதை தான் நிறைய சம்பவங்கள் நமக்கு உணர்த்துகிறது,

ஒரு குறிப்பிட்ட முடிவுக்கு போவதற்கு முன் நிறைய பேர்களிடம் ஒரு முறைக்கு இருமுறை கேட்டு நிதானித்து பின்னர் செயலில் இறங்க வேண்டும்,

" இதை நான் யாரிடம் போய் கேட்பேன், எப்படி கேட்பேன், கேட்டால் என்ன நினைத்து கொள்வார்களோ" என்றெல்லாம் மனதை குழப்பிக் கொண்டு தானாகவே ஒரு முடிவுக்கு போய் விடுவது இன்றைய இளைஞ்சர்களிடம் காணப்படும் நிலை, அவசர முடிவுகள் எடுப்பதும் கூட நிறைய பேரிடம் காணப்படும் ஒரு நிலையாக உள்ளது, சம வயதும் சம அனுபவமும் உள்ளவர்களிடம் மட்டுமே சகஜமாக தன் சுக துக்கங்களை எடுத்து பேசி முடிவு எடுப்பது என்பது அத்தனை சரியான அணுகுமுறை ஆகாது, காரணம், சம வயதில் உள்ளவர்க்கு அனுபவம் குறைவாகவே இருக்கும், தவறான வழிகாட்டியாகத்தான் அவர் அமைவார் என்பதில் சந்தேகமே இல்லை, ஒரு தாய் தகப்பன் போன்ற வயது உள்ளவர்கள் அல்லது கல்லூரி ஆசிரியர், ( வாலிபர் அல்லாதவர்கள் ) மன நல மருத்துவர்கள், counselors ( கட்ச்சிகாரர்களை சொல்லவில்லை ) போன்றவர்களிடம் சென்று எந்த வித பாதிப்பு ஆனாலும் விசாரித்து தெரிந்து கொண்டு பின்னர் முடிவு எடுத்து, அதன்படி நடத்தல் மிகவும் சிறந்த முறை.

எந்த பிரச்சினைக்கும் நிச்சயம் ஒரு தீர்வு உண்டு, அதை அணுகும் விதத்தில் யாரிடம் அணுகுகிறோம் என்பதும் கூட மிகவும் முக்கியம், பின்னர் தீர்வை கண்டு கொண்டு சிறிது சிறிதாக தான் சிக்கியுள்ள மோசமான சூழ்நிலையிலிருந்து வெளியே வர முடியும், உடனே instant coffee tea மாதிரி உடனடியாக பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பது மடமை.

காதல் என்பதும் காமம் என்பதும் மாயை, இதில் சிக்கி தவிப்பதும் அதிலிருந்தும் அந்த எண்ணங்களில் இருந்தும் மீள முடியாமல் திணறுவதும் இயற்க்கை, ஆனால் வாழ்க்கை அங்கேயே அத்துடன் முடிந்து போய் விடுவது கிடையாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். நினைத்தது போல வாழ இயலவில்லை என்பதால் வாழ்க்கையை சூன்ய மாக்கி கொள்ள கூடாது. வாழ்க்கையை இன்பமானதாக அமைத்து கொள்வது நமது கையில் தானே உள்ளது ? குடிசையில் வாழ்ந்தால் கூட மன ரம்மியமாய் வாழ கற்று கொள்ளவேண்டும்.

" கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா "

யதார்த்தங்களை தான் கவிஜர் கண்ணதாசனின் பாடல்கள் எப்பொழுதும் சொல்லியது, காரணம் அவர் தமது வாழ்வில் அத்தனை அனுபவங்களை கண்டவர், தற்காலத்து பாடல்களில் மிக குறைவாகவே வாழ்க்கையின் யதார்த்தங்கள் சொல்லப்படுகின்றன, சினிமா படங்கள் கூட வாழ்வின் ஆதாரங்களை பற்றியதாக இருப்பதில்லை, பொழுது போக்கிற்காகவாவது இருக்கிறனவா என்றால் அதுவும் கூட இல்லை.

வாழ்க்கை என்பது மேடு பள்ளங்கள் நிறைந்தது தான், ஆனால் ஒவ்வொரு பள்ளத்திலிருந்தும் மேலே போகும் அந்த சமயங்கள் மிகவும் வேதனையும் குழப்பங்களும் நிறைந்தவை தான், அதற்காக போகாமல் அப்படியே நின்றுவிடுவது எவ்விதத்திலும் சரியில்லையே,

கையில் ஒரு வாள் இல்லையென்றால் கூட பரவாயில்லை கையில் ஒரு உறுதியான கோலாவது இருந்தேயாக வேண்டும், இங்கே நான் கோல் என்று சொல்லுவதன் பொருள் விவேகம், பொறுமை, முன்யோசனை, நல்லோரின் புத்திமதி போன்றவை.

நீ போராடி கொண்டிருக்கும் வாழ்க்கையில் மிகவும் கொடிய மிருகங்களும் வலு சர்பங்களும் பெரிய பாறைகளும், காட்டாற்று வெள்ளங்களும் புயல் பெரும் மழை, ஏன் சுனாமியும் பூகம்பகளும் எரி மலைகளை கூட சந்தித்தே ஆகவேண்டும் அது தானே வாழ்க்கை, இவைகளை எப்படி சமாளிப்பது எப்படி தாண்டி வெளியே வருவது, அதற்குத் தானே அறிவுரை, பொறுமை, நிதானம், இன்னும் என்னென்ன உன்னால் உபயோகிக்க முடியுமோ அதில் தானே உன் சாமர்த்தியம் அடங்கியுள்ளது?

" நீ குழந்தையாய் இருந்த போது குழந்தையை போல பேசினாய், குழந்தைக் குரிய உணவுகளை சாப்பிட்டாய், குழந்தையை போல நடந்தாய், வளர்ச்சியடையும் போது காலத்தின் மாற்றங்களின் தன்மையும் நாம் சந்திக்கும் மனிதர்களும் பிரச்சினைகளும் சூழ்நிலைகளும் மாறி கொண்டே இருக்கும், இப்போது வாழ்க்கையின் மிக முக்கிய கால கட்டத்தில் இருக்கிறாய், போராட்டங்கள் நிறைந்துதான் இருக்கும், துவளாதே,

" பத்து வருஷம் சுகமா வாழ்ந்தவனும் இல்ல, பத்து வருஷம் கஷ்டப்பட்டவனும் இல்ல " இப்படி ஒரு பழமொழி சொல்லுவாங்க, இதற்க்கு என்ன அர்த்தம், வாழ்க்கையில் சுகம் துக்கம் இரண்டும் உண்டு, துக்கம் வரும்போது துவண்டு விடாதே, பொறுமை காத்திடு, விடா முயற்சி செய், நீ நினைக்கும் அளவுக்கு பெரிய கோடிகளில் புரளவில்லை என்றாலும், முயற்சிக்கு தக்க பலன் நிச்சயம் கிடைத்தே தீரும் நம்பு, உறுதியுடன் உழை, பொறுமை காத்திரு.

உன்னுடைய குறிக்கோள் ( target ) எப்படி அமைத்துகொள்கிறாய் என்பதில் மிகவும் கவனமாக இரு, குறிக்கோள் சூரியனை தொடுவதாக இருந்தாலும் தவறில்லை, Aim the star and shoot the tree என்று சொல்வது போல, ஒரு மரத்தை மட்டுமே சுட முடிந்தால், முழு திருப்பதி படு, திருப்த்தி அடைவதால் இன்னும் மேலான குறிகோள்களை அடைய முடியாமல் போய் விடுமோ என்று குழம்பாதே, குழப்பம் இல்லாத சிந்தனை மிக முக்கியம்.

நல்லோர் சொல் கேள்.

" முயற்சி திருவினையாக்கும், முயற்ச்சியின்ன்மை இன்மை புகுத்திவிடும் ".
4/26/2009

எதற்கு இந்த ரெட்டை வேஷம் ?????

" வெள்ளைகாரனை கண்டாலே பிடிக்கல ", " அதவிட அவன் தின்ற மாடு பன்னி இதுகள நெனைச்சாலே கொமட்டிக்கிட்டு வருது " இப்படி பல விதமான "பிடிக்காத " பட்டியலை வச்சி இருக்கிற நம்ம ஊர் ஆளுங்க எதுக்கு அமெரிக்காவுக்கு போகணும் ஆஸ்ட்ரேலியாவுக்கு போகணும் இன்னும் வெள்ளைகாரங்க இருக்கிற ஊர்களுக்கு ஒண்ணு விடாம போகனும்னு எல்லா தூதரக வாசலையும், விட்டு வைக்காம, வெயிலு மழைன்னு கூட பார்க்காம வரிசையில நின்னு விசா வாங்கி " எப்படியாவது போயே தீருவேன்னு " பிடிவாதமா இருக்காங்கன்னு தெரியலையே ????

ஒரு சமயம் வெள்ளகாரனோட டாலருக்கா ????? இல்ல அங்க கெடைக்கிற வசதிகளுக்கா !!!! எதுக்கு ஏங்குறாகளோ புரியலையே.......?!?!?!

நம்ம அன்றாடம் பயன் படுத்துற பொருளுக நம்ம இந்திய ஆளுக கண்டு பிடிச்சு நமக்கு கொடுத்தது தானா? உடுத்துற பான்ட் shirtla இருந்து பேனா பென்சில் டீ காப்பீன்னு ஏதாவது ஒண்ணாவது இந்தியாவுல கண்டு பிடிச்சி பயன் படுத்துறோம்னு சொல்லுங்க பார்க்கலாம்????? அப்பறம் அவன மட்டும் " பிடிக்காது "ன்னு வாய் கிழிய சொல்லிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்? இதுக்கு பெயர் தான் வறட்டு கெளரவம் என்பது, இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல !!!!!!


அதனாலதான் அந்த வெள்ளகாரனுங்க, இவங்க அங்க வர வேண்டாம்னு நினைகிறாங்க போல இருக்கு !!!!!!!!!!

வெள்ளைகாரன " ஊரைவிட்டு போடான்னு " தொரத்தீட்டு அவன் ஊருக்கு இங்க இருந்து குடியும் குடித்தனமுமா எவ்வளவு பேருதான் போவாங்களோ , போனா அவன் எப்படி சும்மா இருப்பான்???????

வெள்ளக்காரன் கடைபிடிக்கிற "காதலர் தினம்", " பெண்கள் தினம் " இன்னும் என்னன்னவோ தினங்களஎல்லாம் வேண்டாம்ன்னு சொல்லறது, அவங்க என்ன "நீங்களாம் கொண்டாடித்தான் ஆகணம்ன்னா " கட்டளை போட்டிருக்காங்க ??

நம்ம ஊரு கணினி இணையத்தளம் சாட்டிலைட்ன்னு பல ஊடகங்கள் மூலமா வெளிநாட்டு தகவல்கள தெரிஞ்சுகிட்டு இங்க இருக்கிற இளம் சமுகம் கொண்டாடுது, இதை போய் பெரிசு படுத்துறவங்க, நம்ம ஊர்ல இருந்து வெள்ளக்காரன் ஊருக்கு போற கூட்டத்தை கட்டு படுத்த வேண்டியது தானே ?????

பொழைக்க ஒரு ஊருன்னு போனா அங்கிருக்கிற நடை உடை கொண்டாட்டம்ன்னு எல்லாத்தையும் கத்துக்கதானே வேணும்?

வெள்ளை
காரன நான் ஒண்ணும் தூக்கி வச்சு பேசல........நம்ம ஊர்ல ரொம்ப பேருக்கு வெள்ளைக்காரன பிடிக்கல ஆனா அவன் ஊர்ல போய் உட்கார்ந்துகிட்டு அவனோட டாலர சம்பாதிக்கிறாங்க, அந்த ஊர்ல இருக்கிற சுகம் நம்ம ஊர்ல இல்லைன்னு வேற சொல்லறாங்களே, இந்த கொடுமைய பத்தி தான் இங்க நான் குறிப்பிட்டு சொல்லறேன்......

இது எப்பிடி இருக்குன்னா, " ஆடு பகை, குட்டி உறவு" ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்களே, அது மாதிரி இல்ல இருக்கு இவங்க போடுற ரெட்ட வேஷம் ??????? ச்சா .... இது எல்லாம் ஒரு பொழப்பு !!!!!!!4/24/2009

காலம் செய்யும் கட்டாய மாற்றம்.....காதல் கரைந்து போகும்

அதென்ன மெழுகுவர்த்தியா ? !!

காலம் பதில் சொல்லும் !!!

அதென்ன கோனார் புத்தகமா !!!!

* * * * * * * * *


ஒரு காலத்தில்
என் தாய் இறக்க போகிறார்
என கேட்க்கும் முன்
நான் இறப்பேன் என
முடிவு செய்ததுண்டு


என் தந்தை மரித்தால்
நான் எப்படி அதை தாங்கி கொள்வது
அதனால் நானும் இறந்து விடுவேன்
எனக்குள் நானே சொல்லிகொள்வதுண்டு

காதலன் பிரிந்த போது
இருதயம் நொறுங்கி பித்து
பிடித்த போது
இனி என்ன செய்வேன் என்று
திக்கு தெரியாத
மன நிலையிலே இனி
வாழ்க்கையே முடிந்து விட்டது
என கொடிய வேதனை
அடைந்ததுண்டு

காலங்கள் நூல் நெய்கிறவன்
நாடாவைவிட அதி வேகமாக
ஓடுகிறதே...

இப்போதும் நான் வாழ்ந்து
கொண்டுதானே இருக்கிறேன்
நினைத்துப் பார்த்தால்
எல்லாமே ஒரு நீண்ட
பழைய கனவாய்
நினைவிற்கு வருகிறதே

அன்று எனக்கேற்ப்பட்ட காயங்கள்
இன்று மங்கலாய் தெரிகிறதே அதில்
அன்றைய வலி இன்று இல்லையே

காலம் என்பது வாழ்வில்
ஒரு மாமருந்து தானோ

தீராத வலிகளையும் காயங்களையும்
ஆற்றும் ஒரு அறிய மருந்து
காலம் மட்டும் தான்
அன்றைய பல கேள்விகளின்
இன்றைய பதில்களாய் கூட
இந்த காலம் நம்முடன்
ஒரு மொவ்ன மொழி
பேசுகிறதே

காலம் செய்யும் இந்த
அரிய மாற்றங்கள் தான்
எத்தனை !! எத்தனை !!

ஆம் !! காதலும் கரைந்து போனது
காலமென்னும் காற்றினால்.

4/23/2009

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் ........." புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற
மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனமிருக்கு மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த நேரத்திலே வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார் யாரைப் பார்த்து அழைப்பாள் "

காலத்தை வென்ற கவிஞ்சர் கண்ணதாசனின் இந்த அருமையான பாடலில் எத்தனை வாழ்க்கையின் தத்துவம் விளக்கப்பட்டுள்ளது.

நான் ஒரு தனியார் தொலைக்காட்ச்சியில் ஒரு சாது அல்லது சாமியார் சொல்வதை பார்த்தேன் : " வெற்றி அடைந்தவர்களால் தான் வெற்றி பற்றி பேச முடியும், வெற்றி அடையாதவர் அதை பற்றி எப்படி பேச முடியும் " என்று கூறிக்கொண்டிருந்தார்.

எனக்கு ஒரு கேள்வி தோன்றியது ஒரு வெற்றி அல்லது தோல்வி என்பதை எந்த அளவு கோள் வைத்து நிர்ணயம் செய்கிறார்கள் என்று.

அப்போதுதான் கவிஞ்சரின் இந்த பாடல் நினைவிற்கு வந்தது.

ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் வெற்றியடைய அவர்கள் இழந்தவைகளைப் பற்றி கேட்டுப் பாருங்கள், அப்போது தெரியும் ஒரு வெற்றி எத்தனை இழப்புகளும் வேதனைகளும் உள்வாங்கியுள்ளது என்று, அப்படியானால் அவர்கள் பெற்ற வெற்றியை மட்டும் எப்படி கொண்டாடி களிக்க அவர்களால் முடியும்? எப்படி அவர்களை " ஒரு வெற்றியாளர் " என்று சொல்லிவிட முடியும்?
மேல் பார்வைக்கு வெற்றியாளராய் தோற்றமளிக்கும் அவர்/அவள் உள்மனதில் இழப்புக்களின் பட்டியல், அதன் கனம், வெளிப்படையான வெற்றியை முழுமனதுடன் அனுபவிக்க விடுமானால், அல்லது ஏற்றுக்கொள்ள முடியுமானால், "வெற்றி" என்று பெயர் சொல்லுதல் சரியாகுமோ !!!!!

{ எத்தனை கோடி மனிதர்கள் தோல்வியுடன் வாழ்க்கையில் நிம்மதியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்}, அல்லது மனிதனாய் பிறக்கும் எல்லோருமே வெற்றி அல்லது தோல்விகளை பெறுவதற்காகவே படைக்கப்படுகிறார்களா என்ன ?

பொருளாதாரத்தை மேன்மைப்படுத்தி கொள்ளுதல் மட்டுமே வாழ்க்கையில் முன்னேறியதாக யார் அளவு கோள் நிர்ணயம் செய்கிறார்கள்?

அப்படி மேம்படுத்தி கொள்ளாதவர் யாவரும் வாழ்க்கையில் தோற்றவர்களா?

பொருளாதாரம் (materialistic ) ஒன்று மட்டுமே ஒரு மனிதனை நிர்ணயிக்கும் அளவு கோள் என்றால், உலகத்தில் ஒட்டு மொத்த ஜனத் தொகையில் ஒரு சதவிகிதம் மனிதர்கள் தான் வெற்றி பெற்றவர்கள, அவர்கள் மட்டும் தான் வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்கள? வாழதகுதி பெற்றவர்கள?

அப்படி வெற்றி அடைந்தவர்கள் மட்டுமே வெற்றி பற்றி பேச தகுதி உள்ளவர்கள் என்றால், எஞ்சிய அனைவரும்
பிறந்ததே வீணா?

ஒரு முக்கிய மனிதர் என்று கருதப்படும் அவர் பேசிய பேச்சுகள் எந்தவிதத்திலும் என்னால் ஏற்று கொள்ள முடியாத ஒன்று, misguide செய்வது போல பேச்சு இருக்கவே கூடாது, அல்லது அந்த சமயத்தில் அங்கு வருகை தந்திருக்கும் முக்கிய மனிதர்களை திருப்தி படுத்தும் நோக்கத்தில் அவர் அப்படி பேசினாரா என்று தெரியவில்லை.

தோல்விகளை வாழ்க்கையின் இறுதிவரைக்கும் கண்ட ஒருவரால் தான் வெற்றியின் இலக்கு பற்றி சரியாக சொல்ல முடியும், அவரால் தான் எப்படியெல்லாம் முயன்றால் தோல்விகளை தவிர்க்க முடியும் என்றும் சொல்ல முடியும்,

99% தோல்வி கண்டவர்கள், பல காரணங்களால் தோல்விகளை சந்திக்க நேருவதும், பல சந்தர்ப்ப சூழ்நிலைகளினாலும் தவிர்க்க முடியாமல் எற்ப்படுவதே தோல்விகளுக்கான காரணங்களாக உள்ளது, பல சமயங்களில் எதனால் தோல்வி ஏற்ப்பட்டது என்பதே அறிந்து கொள்ள இயலாமலும் போய் விடுகிறது, இப்படி இருக்க, வெற்றி கண்டவரால் தான் வெற்றியடையும் வழியை பற்றி எடுத்து கூறும் தகுதி உள்ளது என்பது, முன்சிந்தனையற்ற பேச்சு.

தோல்வி கண்டவர்களை இழிவு படுத்தும் பேச்சு.