Translate

3/26/2009

தமிழகமும் வெயிலும்

வேனிற்காலம் துவங்கிவிட்டது, பல வகையில் இக்காலம் விசேஷங்களை கொண்டதாக இருந்தாலும், வெயிலை கண்டு பெருமிதம் கொள்வோரும் அதிகபட்சம் உள்ளது என்னை எப்போதுமே ஆச்சர்யப்பட வைத்ததுண்டு, இதற்க்கு காரணம் வெயிலை தாங்கி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகம், நல்ல மழை பெய்யும் போது பலரின் இத்தகைய முனகல்களை கேட்க்கும் வாய்ப்பு கிடைக்கும்:

"என்ன வெயில், மழையே தேவலாம் போல இருக்கு" என்று முனகுபவர்களைவிட "அட எதற்கு இந்த மழை" என்று கூப்பாடு போடும் கூட்டமே அதிகம், இதை பற்றி நான் அதிகம் கூர்ந்து நோக்கி யோசித்தது கிடையாது, ஆனால் நான் ஒருமழை விரும்பி என்பதால், இப்படி கூப்பாடு போடும் கூட்டத்தை பார்த்து எரிச்சலடைவது உண்டு.

இப்போதெல்லாம் எந்த கூற்றையும் உற்று நோக்கி ஆராயும் மனப்பான்மைஎன்னுள் அதிகரித்துள்ளதால் இதை பற்றியும் யோசித்தேன், இதற்க்கு நான்கண்ட ஒரு எளிய விடை, நம் நாட்டில் வாழும் மனிதர்களில் 75% பேர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், இவர்களின் இருப்பிடம் ஒரு குடிசையோ தெருஓரமோ அல்லது ஒண்டு குடித்தனமாகவோ இருப்பது அடுத்து இவர்களது தொழில் என்று பார்த்தால் ஒரு நிரந்தரமான தொழில் இருக்க வாய்புகள் குறைவு, தினமும் வேலைக்கு போனால் தான் வயிற்றுக்கு என்ற நிலை, இவற்றால் தான்நம் ஊரில் வெயிலை கொளுத்தும் வெயிலையே விரும்பும் பலர் உள்ளது தெளிவாகிறது, இதற்க்கு அடுத்தாற்போல வறுமை கோட்டிற்கு மேல் உள்ள நடுத்தர குடும்பங்களின் நிலையும், வீடு என்று ஒன்று இருந்தாலும் வேலைக்கு போனால் தான் வேலையே நிரந்தரம் என்னும் நிலைமை, இதனால்இவர்களுக்கு வெயிலே தேவலை என்ற நிலை.

மூன்றாவது உயர் தட்டில் இருப்போர் இவரில் பலரும் கூட வெயிலையே பரவாஇல்லை" வேண்டுமானால் குளிர்பதன அறைக்குள் இருந்து கொண்டால் போகிறது என்று நினைக்கின்றனர் இதற்க்கு காரணம் இவர்கள் செய்யும் வியாபாரமும் அதன் பொருட்களும் மழை வந்து விட்டால் கெட்டு போய்விடும் அல்லது மற்ற இடங்களுக்கு கொண்டு செல்ல கொண்டுவர மழையால் பெரிதும் தடைப்படும் என்பது இவர்களின் "மழை வேண்டாமை"க்கு காரணங்களாகி விடுகின்றன.

இப்படி பார்க்க போனால் 'மழையை விட வெயிலே பரவாஇல்லை' என்ற பெரும்பாலோரின் எண்ணமே நமது ஊரில் வெயிலின் ஆதிக்கத்திக்கு பெரிய காரணமாகிவிடுகிறது, "சூரியன்" தானே எல்லா உயிர்க்கும் முக்கியம், இதனால்தானோ என்னவோ நமது ஊரில் வெயில் அதிகபட்சம் அடிக்கிறது.

மழையை கண்டாலே 'ஐயோ, எதற்கு இந்த மழை' என்று சொல்லும் இவர்களை காண விரும்பாத மழை "அழையாதோர் வாசலை மிதியாதே" என்று இருந்துவிட்டால், தண்ணீர் பஞ்சம், குடிநீர் வழங்க கோரி பலவிதமான ஸ்டிரைக். அடுத்த மாநிலத்து நீர்வரத்தை பற்றி ஒரு போராட்டம், கூப்பாடு, ஆட்சியிலிருக்கும் கட்சி மீது வசைமாரி பொழிதல், என ஒன்றையும் விட்டுவைக்காமல் இழுத்து போட்டு சண்டை இடுவது தலைப்பு செய்திகளில் முதலிடம் வகிக்கும் செய்தியாக "மழை"யும் "தண்ணீர் தட்டுப்பாடு"ம் தவறாமல் பாரக்கமுடியும்.

நம்ம ஊரு சனங்களை திருப்பதி படுத்த இந்த இயற்க்கை போகிறது, இயற்கையே இவர்களை வெறுக்கவும் தொடங்கி விட்டது, எங்கள் தெருவில் இதுவரை குறைந்தது 10 மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர், இவை சாதாரண மரங்கள் இல்லை இவை வளர 50 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அதற்க்கு பதிலாக ஒரு குடும்பம் இருந்த இடத்தில் இப்போது குறைந்தது 15 லிருந்து 30க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் குடியேறி இருக்கிறது. இத்தனைகுடும்பகளுக்கும் வேலைவாய்ப்பு எப்படியோ கிடைத்து விடலாம், இப்போதெல்லாம் மற்றவரை ஏமாற்றி கூட "buisness" செய்து வாழ்ந்து விடலாம். ஆனால் தண்ணீருக்கும் மின்சாரத்திற்கும் எங்கே போவது? நீங்கள் தான் மழையை கண்டாலே வேண்டாம் என்று சாபம் கொடுகின்றீர்களே, போதா குறைக்கு இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டி சாய்த்து கட்டிடம் கட்டி பணம் சம்பாதிகிரீர்களே, காலம் ஒன்று வரும் நீங்கள் சம்பாதித்த பணத்தால் கூடவாங்க முடியாமல் போகும் தண்ணீரையும் மழையையும், உங்கள் வருங்கால சந்ததிகள் மரங்களை கூட வேடிக்கை பார்க்க வேண்டிய பரிதாபம் ஏற்ப்படும்.

மூச்சு விடுவதற்கு கூட காற்று கிடைக்காத காலம் ஒன்று வரும், நீங்கள் சம்பாதித்த பணம் உங்களுக்கு மூச்சு விடும் காற்றை வாங்கி தருமா?

இப்போதே யோசியுங்கள் இயற்கையை நேசியுங்கள், ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் என்று பலகைகளில் எழுதி வைக்கும் வாசகங்களை போல் "காற்று, மழை, தண்ணீர்" என்று பலகையில் தான் எழுதிவைக்க வேண்டியது ஆகி விடும், படித்தவர்கள் நாட்டில் நிறைதிருந்தாலும், படிப்பு இப்போதெல்லாம் எப்படி பணம் பண்ணுவது என்று மட்டுமே சிந்திக்க பயன்படுவதாகி உள்ளது, எந்த படிப்பு படித்தால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று கண்ணக்கு போட்டு படிக்கவைத்தால் எங்கே அறிவுக்கண் திறக்க முடியும், எப்படி பணக்காரன் ஆக முடியும் எவ்வளவு சீக்கிரத்தில் பணக்காரன் ஆக முடியும் என்று மட்டுமே யோசிக்க வைக்கும். படித்தவுடன் வேலைக்கு போவது சிறந்ததுதான், படிக்க செலவான பணத்தை சம்பாதித்து பெற்றோரிடமோ வங்கியிடமோ திருப்பி செலுத்துவதும் கடமைதான், ஆனால் எவ்வளவு பணத்தை எத்தனை சீக்கிரத்தில் சம்பாதித்து முன்னேற" முடியும்
" "என்று யோசிக்க வைக்க மட்டுமே படித்த படிப்பை பயன்படுத்துவது வீண், இதனால் தான் சம்பாதிக்க முடியாதவன் வேலை கிடைக்காதவன் திருடுவதும் பல வகைகளில் கொள்ளை அடிப்பதும் அதிகரித்து வரும் வேதனையளிக்கும் முன்னேற்றங்களாகி விட்டது.

இதன் முடிவை சற்றேனும் யோசிப்பது அவசியம், நிச்சயம் முடிவு மோசமானதாகத்தான் இருக்கும், இருந்தாலும் சரி, வாழும் இந்த நாள் அவர்கள் பாஷையில் "ஜாலி"யாகஇருப்பது. முடிவைப்பற்றி யோசிப்பது இல்லை. பரிதாபமான "முன்னேற்றம்". மனிதன் ஒரு முறை தான் பிறக்கிறான் இந்த பிறப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்பது அதிக முக்கியம் அல்லவா? படிக்கும் வாய்ப்பு பல பேர்க்கு எட்டா கனியாக இருக்கும் போது படிக்க வாய்ப்பு கிடைத்தமைக்கு நாம் என்னசெய்கிறோம்? யோசிக்க வேண்டியதும் நம் கடமை அல்லவா?

நெடுநாள் வாழ்ந்துஒன்றையும் உருப்படியாக செய்யாமல், தமக்கும் பயன் இன்றி பிறர்க்கும் பயன் இன்றி வாழ்தல் எளிது, கொஞ்ச நாள் வாழ்ந்திடினும் பயன் உண்டாக வாழ்தலே வாழ்வாங்கு வாழுதல்" அல்லவா? அறிந்தும் அறியாதது போல வாழ்வோர் பலர், அறியாமல் வாழ்வோரும் பலர், இதில் யார் வாழ்வாங்கு வாழ்ந்தவர்? யோசிக்கலாமா? அறிந்து பயனுற வாழுதலே வாழ்வு.

படித்தவரின் எண்ணிக்கை கூடுவது சந்தோஷமான செய்தி என்றாலும் படித்தவரெல்லாம் என்ன செய்கிறார் என்று பார்க்கும்போது மனம் "படிக்காதவன் பரவ இல்லை போல் இருக்கிறதே" என்று வேதனை அடைய செய்கிறது.
"