Translate

3/18/2009

அரசியல் .... தேர்தல் 2009

அரசியல் என்றாலே இப்போதெல்லாம் 'அதை பத்தி பேச வேண்டாம், வேறுஎதையாவது பேசுவோமே' என்று ஒதுங்குகின்றனர் பலர், காரணம் பல, ஒருபெரிய சுதந்திர நாடான நம் இந்திய தேசம், உலகத்தின் மொத்த மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கு, இதில் 720 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதிபெற்றிருக்கிறார்கள், 28 மாநிலங்கள் 7 union territories.

தேர்தலைப்பற்றி பேசினாலே 'வேண்டாம்' என்று ஓடிவிடும் பலர் எப்படிதேர்தலை சந்திப்பார்கள் என்பதில் எனக்கு ஒரு யூகம், நிச்சயமாக 75% பேர் ஓட்டுபோடவே போகமாட்டார்கள் போல தெரிகிறது, மீதியுள்ள 25%, வெளிப்படையாகஅரசியலையும் தேர்தலையும் கண்டுகொள்ளாதது போல இருந்து விட்டு, தன்மனதிற்குள் ஒளித்து வைத்திருக்கும் தனது 'விருப்பத்திற்குரிய' கட்சிக்கு ஓட்டுபோட்டு விட்டு வந்து விடுவர்.

அரசியலையும் தேர்தலையும் வேண்டா வெறுப்பாக பார்ப்போரின் எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் போகிறதா என்று பார்த்தால் அதுதான் இல்லை, அப்படி ஒரு பாவனையில் இருந்தாலும், கண்டும் காணாததுபோல அரசியலை கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள், இன்னும் சொல்லபோனால் துல்லியமாகவே கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

"எதற்கு வெளிப்படையாக பேசி தனது ஆர்வத்தை என்னவென்று காண்பித்து கொள்ளவேண்டும்" என்று இருந்து விடுதல் நலம் என்னும் போக்கு. எதுஎப்படியோ, 65%
ஓட்டு போட்டாலும் 95% ஒட்டு போட்டாலும் ஏதேனும் ஒரு கட்சியோ பல கட்சிகளோ சேர்ந்து ஆட்சி நடத்தி விடும் என்பது இவர்களின் எண்ணமோ என்னவோ, அது தானே உண்மையும் கூட,

நமது ஓட்டுரிமையை ஏன் விட்டுவிடவேண்டும், ஓட்டு போடபோவது எப்படியானாலும் உங்கள் மனதில் உள்ளவருக்கு தானே, இதில் எதற்கு சோம்பல், கடமையை செய்வோம், நடப்பது நலம் பெரும்.