Translate

2/19/2009

என்ன பார்வை ...உந்தன் பார்வை ....... [ வக்கிரம் ]

என் கணவருடன் மளிகை சாமான்கள் வாங்கி வருவதற்காக ஒரு நாள் வார இறுதியில் (sunday) மாலை ஆறுமணி இருக்கும் சூப்பர் மார்க்கெட் சென்று பொருள்களையெல்லாம் வாங்கி முடிப்பதற்குள் இரவு மணி எட்டு ஆகி விட்டது, இரவு உணவாக சரவணா பவனில் சாப்பிடுவதற்காக இருவரும் கையில் வாங்கிய பொருள்களுடன் சென்று தேவையானவற்றை வாங்கி சாப்பிட்டு விட்டு நான் முதலில் கைகளை அலம்பி கொண்டு வந்து உட்கார்ந்தேன் பின்னர் சிறிது நேரத்திற்கு பின் அவரும் கையலம்ப எழுந்து சென்றார், எனக்கு அடுத்த மேசையில் உட்கார்ந்திருந்தவர்களை நான் கவனிக்கவே இல்லை, என் கணவர்கை அலம்ப செல்வதற்கு முன்னால் அவனும் கை அலம்ப சென்று இருக்கிறான் போல, அவன் என் எதிரில் கைகளை துடைத்து கொண்டே வந்து அவனது மேசையில் மறுபடியும் உட்கார வந்து கொண்டிருந்த போது தற்செயலாக அவனை நான் பார்த்தேன், அவனுக்கு வயது முப்பதுக்குள் இருக்கும் என நினைக்கிறேன், என்னை பார்த்து கண் அடித்தான், அத்துடன் நில்லாது ஒரு வித சிரிப்பும் சிரித்தான், எனக்கு ஒன்றுமே புரியவில்லை, ஏன் என்றால் நான் அப்படிஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர் பார்க்கவில்லை, அவனுடன் ஒரு பெண் சாப்பிட்டு கொண்டிருந்தாள் அவனுடன் வந்தவள் போல இருக்கிறது, அவளது இருக்கையின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான், அந்த பெண் சாப்பிட்டு விட்டுகை அலம்ப எழுந்து போனாள் அவளது ஆஜானு பாகுவான் உயரமும் தோற்றமும் அவனுக்கு அவள் என்ன உறவாக இருக்க முடியும் என்று ஊகிக்க முடியவில்லை, ஒரு ஜீன் பான்ட்டும் மேலே குர்தாவும் அணிந்திருந்தாள் வயது முப்பதுக்கு குறைவாக தான் இருக்கும் என தோன்றியது, அவன் என்னை பார்த்து கண் அடித்ததால் நான் அவர்கள் யார் என்று பார்த்தேன், அதற்குள் என் கணவர் கை அலம்பிவிட்டு வந்து விட்டார், அவன் அதற்க்கு பின் என் பக்கம் திரும்பவே இல்லை.

இதற்க்கு முன்பு ஒரு முறை வேறு ஒரு சரவணா பவன் ஹோட்டலுக்கு மதிய உணவு சாப்பிட நானும் என் கணவரும் சென்றிருந்த போதும் கூட வேறு ஒருவன் அப்படிதான் என்னையே முறைத்து பார்த்து கொண்டே இருந்தான், என் கணவரிடம் நான் காண்பித்தேன், அப்போதும் அவன் என்னை முறைத்து பார்ப்பதை நிறுத்தவில்லை.

ஒரு முறை நானும் எனது குடும்ப நண்பரும் மதிய உணவிற்காக ஒரு ஹோட்டலுக்கு போனோம் அங்கே நாங்கள்
சாப்பிட வேண்டிய உணவு பொருட்களுக்கு ஆர்டர் எடுக்க வந்த ஒரு வாலிபன் அந்த ஹோடேலில் waiter ஆக வேலை பார்ப்பவன் என்னிடம் "இவர் அடிக்கடி வேறு வேறு பெண்களுடன் இங்கே வந்து சாப்பிடுவார், உங்களுக்கு தெரியுமா" என்று அந்த நண்பரின் எதிரிலேயே கேட்டான், அந்த நண்பருக்கு உள்ள வேறு பெண் நண்பர்களோ அல்லது அவரது மனைவியுடனோ அவர் அங்கு வருவது வழக்கமாம், பலருடன் வருவதை என்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருப்பானோ அல்லது பலருடன் பழக்கமுள்ளவர் என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு முன்னெச்சரிக்கை செய்தானோ என்று தெரியவில்லை.

"அம்முவாகிய நான்" என்ற பார்த்திபன் நடித்து வெளி வந்த திரைப்படத்தின் மூலம் தான் நான் இப்படி ஒரு கலாச்சாரம் தற்ப்போது நாட்டில் நடப்பில் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன், அந்த சினிமாவில் விபசாரம் செய்யும் பெண்களை அழைத்துக்
கொண்டு ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவது என்ற காட்சி உள்ளது, தற்போது நடை முறையில் இருந்து வரும் மோசமான கலாச்சாரம் என்பது எனக்கு தெரிய வந்தது, அந்த சினிமாவை பார்க்கும் போது அந்த காட்சியை பற்றி ஒன்றும் நினைக்க தோன்றவில்லை ஆனால் இது போன்ற ஹோடேலில் பார்த்தவர்களின் பார்வைகள் இந்த சினிமாவின் காட்சியை நினைவு படுத்தியது. இப்படி பட்டவர்களும் இந்த சமுதாயத்தில் நம்மோடு தான் வாழுகிறார்கள் என நினைக்கும் போது, பாதுகாப்பற்ற சுழல்உருவாகி கொண்டிருப்பது தெளிவாகிறது.

இரண்டு பேராக சேர்ந்து (ஆணும் பெண்ணும் ) ஹோட்டலுக்கு போய் சாப்பிடுபவர்கள் எல்லோருமே "அப்படிப்பட்டவர்களாகத்தான்" இருக்க முடியும் என்று நினைப்பது சந்தேக கண்ணோடு பார்ப்பது அவர்கள் சுதந்திரம் என்றே வைத்து கொண்டாலும், "கண் அடிப்பது" சைகை காண்பிப்பது என்பது எந்த
வித்ததில் சுதந்திரம்?

"ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பது இதில் நன்றாக தெரிகிறது, ஒருபாமரன் தவறுகள் செய்வது அறியாமை, படித்தவன் என்ற பெயருடன் இருக்கும் ஒருவன் செய்வது என்பது அவன் ஒரு படித்த காட்டு மிராண்டி அல்லது பெண்களை அவனது தாயையும் சகோதரிகளையும் கூட சந்தேக கண் கொண்டு பார்க்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்?

இந்த காலத்து பெண்கள் தான் இவர்களை போன்ற காட்டு மிராண்டித்
தனமானவர்களுக்கு சரியான பாடம் கற்று கொடுப்பவர்கள், நான் இன்றைய தலைமுறை பெண்களை நிச்சயம் பாராட்டுகிறேன், சரிக்கு சமம், என்ற நிலையில் அவர்களும் இது போன்ற ஆண்களுக்கு சரியான பதிலடி கொடுக்க கற்று கொள்கிறார்கள் கல்லூரிகளில் படிக்கும் போதே, இல்லையென்றால் பெண்களையெல்லாம் விபசார கண்ணோடு மட்டுமே பார்க்க தெரிந்தவர்களை மேற்கொள்வது சுலபமல்ல.