Translate

2/10/2009

மதர் - அன்னை ( 1 )


அன்னை என்றவுடன் எனக்கு இறந்து பேரைத்தான் [ 1999 வரை ] தெரியும் பெற்ற அன்னை இரண்டாவது அன்னை" என்கிற பானுமதியம்மாவும் சொவ்க்கார் ஜானகியம்மா ரெங்காராவ் மற்றும் சந்திரபாபு சச்சு இவர்கள் நடித்த அற்புதமான கலைஞ்சர்களால் நடித்து இல்லை இல்லை வாழ்ந்து காட்டிய சினிமா. இந்த திரைப்படம் பற்றி புதுசா விமர்சிக்க ஒண்ணும் இல்லை, என்னன்னா எல்லார்க்கும் தெரிந்த ஒன்று என்பதால். மனதை விட்டு என்றும் அழியா கலைஞ்சர்களும் அவர்கள் நடித்த நடிப்பும் நெஞ்சில் நீங்கா இடம் பெரும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது, இந்த "அன்னை" திரைப்படமும் அப்படியொரு படம் தான்.

இந்த அன்னை திரை படத்தை பார்க்க, ( நான் பிறப்பதற்கு பல வருடங்களுக்குமுன்) என் அப்பா அம்மா இருவரும் திரைக்கு வந்தவுடன் பார்க்க போக , அப்போதுதான் திருமணம் ஆகி வந்திருந்த என் பெரியம்மாவையும் அழைத்து கொண்டு போக, திரைப்படத்தை பாரத்துவிட்டு வீட்டிற்கு வந்த என் பெரியம்மா என் அப்பாவிடம் பயங்கர சண்டை போட்டாராம், அதற்க்கு காரணம் இன்று நினைத்தாலும் இந்த மாதிரி பெண்களுக்குஎங்கிருந்துதான் இத்தனை சதித்திட்டம் தீட்டும் அறிவு கிடைக்கிறதோ என்று வியக்க வைக்கிறது, என் அப்பா என் பெரியம்மாவை "அன்னை" படத்தை பார்க்க வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டு கூட்டி சென்றதாகவும் அது ஏன் என்றால் அவர்களுக்கு குழந்தை பிறக்க வைப்பு இல்லை என்று மருத்துவர் கூறி இருப்பதாகவும் இதை சுட்டி காண்பிக்கவே அந்த படத்தை பார்க்க வைத்ததாகவும் காரணம் காட்டி சண்டை போட்டு விட்டு தானிகுடித்தானம் போனாராம் பெரியம்மா. இத்தனைக்கும் பெரியம்மா என் அப்பாவின் அம்மா வழி மாமாவின் முறை பெண்தான்.

பெரியம்மாவிற்கு அப்பா இல்லை இவர்கள் வீட்டிற்க்கு மூத்தவர் இரண்டு தங்கைகளும் இரண்டு தம்பிகளும் படித்துக்கொண்டு இருந்தனர், அவர்கள்அம்மா ஆரம்ப பாட பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார், தனது தம்பி தங்கைகளை தன் வீட்டில் கூட்டி வந்து தம்பிகளுக்கு வேலை வாங்கிவைத்து தங்கைகளுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்கிற திட்டம் மனதில் இருந்துள்ளது இதை எப்படி நிறைவேற்றுவது என்று யோசித்து கொண்டிருக்கையில் இந்த "அன்னை" சினிமாவை பார்க்க அழைத்து கொண்டுபோக அதை ஒரு விபரீதமான காரணமாக காண்பித்து சண்டை போட்டு தனிக்குடித்தனம் சென்ற அந்தபெண்ணின் "மாஸ்டர் மைன்ட்" திட்டத்தை என்னவென்று சொல்லுவது....

நான் இங்கு சொல்ல வந்த "அன்னை" என் தகப்பனாரின் மறைவிற்குப்பின் சிலநாட்களில் என் மன மாற்றத்திற்காக பாண்டிச்சேரியில் உள்ள அரவிந்தரின் ஆசிரமத்திற்கு என் கணவர் முதல் முறையாக அழைத்துக்கொண்டு போன போது
எனக்கு அரவிந்தர் யார் எதற்காக இந்த ஆசிரமம் என்று ஒன்றும் கேட்காமலேயே ( என் கணவர் என்னை எங்கு எதற்கு அழைத்து கொண்டு போகிறார் என்பதே அறியாமல் போனதால்), அந்த ஆசிரமும் பாண்டிச்சேரியும் எனக்குபார்க்க பார்க்க மிகவும் பிடித்து போனது,

சென்னையின்
ஜன சந்தடியில் சிதைந்துபோயிருந்த என் மன நிலை எப்போதுமே நினைப்பதுண்டு மனிதர்களும்வாகனங்களும் இல்லாத அழகான அமைதியான இடத்தில் வாழ வேண்டும்என்று, பாண்டிச்சேரியில் போனவுடன் ஒரு சைவ ஹோட்டெலில் அறை ஒன்றை எடுத்து என் குழந்தைகளுடன் பயண களைப்பு தீர ஓய்வு எடுத்து கொண்டோம், என் கணவர் அலுவலக வேலையாக ஒருவரை சந்திக்க சென்றுவிட்டு மத்திய சாப்பாட்டிற்கு தான் அறைக்கு திரும்பினார், என் குழந்தைகள் இருவரும் அங்கிருந்த பூனைக்குட்டிகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தனர், நான் கண் அயர்ந்து விட்டேன்,

அதை கனவு என்று சொல்லவும் முடியவில்லை ஒரு அருமையான அனுபவமாக இருந்தது என்னிடம் ஒரு மூதாட்டி சொல்லுகிறார் "நீ ஒரு எல்லை கோட்டிற்குள் வந்துவிட்டாய் இனிமேல் உன்னை நீ மிகவும் தூய்மை படுத்திக்கொள்ள வேண்டும், இங்கிருந்து நீ திரும்பி போகும் போது அதுஎன்னவென்று நீ புரிந்து கொள்வாய், இனிமேல் உன் வாழ்க்கை பல அறிய மாற்றங்களை காணும் அப்போது என்னை யார் என்று நீ அறிந்து கொள்ள முயலுவாய், அறிந்து கொள்வாய்."

கண்களை விழித்து பார்த்தால் என் குழந்தைகள் இருவரும் விளையாடி கொண்டு இருகின்றனர், எனக்கு ஒன்றுமே புரியவில்லை, முகத்தை அலம்பி விட்டு கைகடியாரத்தில் பார்த்தபோது மணி மதியம் ஒன்று ........தொடரும்
"