Translate

2/27/2009

ஸ்லம் டாக் - இப்போதுதான் "மில்லியனர் "

"ஸ்லம் டாக்" என்ற சினிமாவை பற்றி நான் முன்பு பதிவு செய்த போதுமில்லியனர்" என்று குறிப்பிட விரும்பவில்லை, அதற்க்கு காரணம், இந்த படம்நிச்சயம் ஆஸ்கார் விருதினை பெரும் அப்போதுதான் "மில்லியனர்" என கருதமுடியும் என்று நான் நம்பியது தான் அதற்க்கு காரணம், நான் நினைத்தப்படியேஆஸ்கார்" விருதினை பெற்று விட்டது அதனால் "ஸ்லம் டாக் இப்போதுதான்மில்லியனர்" என்று என்னால் சொல்ல முடிகிறது.

அடித்தட்டு மக்களின் உண்மை கதைகளை சித்தரிக்கும் சினிமாக்கள் என்றுமேபாராட்டுக்குறியதாக விளங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நான் சிலரை என்றுமே நன்றியுடன் நினைவு கூர்வதுண்டு, அதில் முதலிடத்தில்உள்ளவர்கள் பெற்றோர், நல்ல ஆசிரியர்கள், வறுமையில் உதவிய அன்புநெஞ்சங்கள் இப்படி சிலரைத்தான், ஆனால் என் வேதனைகளுக்கு ஆறுதலாய்இருந்த சினிமா பாட்டுக்கள், அந்த பாட்டை பாடிய பாடகர்கள், பாடகிகள், அழகான இசையமைத்த இசையமைப்பாளர்கள் , இசையமைக்க தேவையானஇசைக்கருவிகள் வாசிப்பவர்கள், சவுண்ட் பொறியிலாளர்கள், அதில் நடித்தநடிகர் நடிகைகள், டெக்னிஷியன்கள், லைட் பாய்ஸ், உதவியாளர்கள் எனஅத்தனை போரையும் நான் மதிக்கிறேன் நன்றியுடன் நினைக்கிறன், அதுஅவர்களுக்கு தொழிலாக இருந்தாலும், ஏனையோரின் துயர் போக்கும்மருந்தாகவும், இன்னும் சொல்லப்போனால் அருமையான காட்சிகளின் மூலம்மூன்று மணி நேரத்தில் நமது நினைவுகளில் மாற்றங்களை ஏற்ப்படுத்தும்ஊடகம், நமது பிரச்சினைகளை மறந்து வேறு உலகத்துக்கு கொண்டு செல்லும்மாயாஜாலம், பெரும்பாலும் பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும் பலவகையில் சமுதாய உணர்வுகளை சித்தரித்து நம்மை மயங்க வைக்கும் ஊடகம்,

பல சமயங்களில் சமுதாய பிரச்சினைகளை வெளிச்சம் போட்டு காண்பிக்கும்போது நம்மை நாமே பார்த்து கொள்வது போலவும் பல சமயங்களில் இப்படி ஏன்நாமும் இருக்க கூடாது என எண்ண வைக்கும் விசித்திரமாகவும், எத்தனைஇன்பம் தரும் விஷயம், மயங்கி திரியும் என்னை போன்ற ரசிக கூட்டத்தை, நாம்பல ரூபங்களில் கண்டு கேட்டு ரசித்து அவர்பால் கொண்டுள்ள அன்பையும்மதிப்பையும் சிலர் அவர்களுக்கு சாதகமாக ரசிகர்களாகிய நம்மை பயன்படுத்திகொள்வது கூடாது.

அப்படி என்னை போன்ற ரசிகையின் அன்பை அவர்கள் லாபத்திற்கோ அல்லதுவேறு காரியங்களுக்கோ பயன்படுத்துவது அவர்பால் நாம் வைத்த அன்பை அவர்விலைக்கு கேட்ப்பது போலலவா இருக்கிறது?

எனது பெற்றோர், எனது ஆசிரியன், என் இடுகண்ணில் உதவிய அன்பர், என்னுயிர் காத்த மருத்துவர், இவர்பால் நான் வைத்துள்ள நன்றியையும்அன்பையும் இவரெல்லாம் ஏதோ ஒரு முறையில் திரும்ப பெறநினைபாரென்றால், அவர்பால் நான் வைத்துள்ள அன்பும் மரியாதையும்சிதைந்தல்லவா போய்விடும்? ஆனால் அப்படி இவரெல்லாம் இருப்பதில்லை, சில நடிக நடிகையர் மட்டும் இப்படி ரசிகன் அவர்பால் வைத்துள்ள அன்பையும்மதிப்பையும் திரும்ப கேட்ப்பது ஒரு மருத்துவர் அவர் மருத்துவம் செய்து குணம்
பெற்ற நோயாளி மருத்துவரை பார்த்து "உங்களை ஒருநாளும் மறக்கமாட்டேன் அய்யா" என்று சொல்லும் போது அவனிடம் கைமாறாக தனக்கு ஏதோ ஒன்றை கேட்ப்பது போலல்லவா இருக்கிறது?

நடிகர்கள் பாடகர்கள் இசையமைப்பாளர்கள் வாத்யகருவி இசைப்போர் சினிமா கதை
எழுதுபவர், பாட்டெழுதுபவர், மற்றும் படமாக்குபவர், உதவியாளர்கள் என்று அத்தனை பேருக்கும் நான் நன்றி சொல்வேன், ஏனென்றால் எனது துக்கத்தில் துயரத்தில், எனது மகிழ்ச்சியில், என்று எனது நேரங்களில் முக்கியபங்கெடுக்கும் இவர்களை நான் நேசிக்கிறேன் மதிக்கிறேன்.

இவர்கள் ( மேற்கூறிய கலைஞ்சர்கள் ) எனது ( ரசிகர்களின் ) நேசத்திற்கு கைம்மாறு கேட்டால், அவர்களை ஒரு பிச்சைகார வடிவத்தில் காண்கிறேன், சில நேரங்களில் என்னிடம் உள்ள காசை பிச்சைக்காரருக்கு பரிதாபப்பட்டு போடுவது போல, பல நேரங்களில் பிச்சைகாரர்களை வெறுத்து, இவர்களுக்கு காசு கொடுக்க கூடாது போய் உழைத்து சம்பாதித்து சாப்பிடட்டும் என்பேன்.

2/19/2009

என்ன பார்வை ...உந்தன் பார்வை ....... [ வக்கிரம் ]

என் கணவருடன் மளிகை சாமான்கள் வாங்கி வருவதற்காக ஒரு நாள் வார இறுதியில் (sunday) மாலை ஆறுமணி இருக்கும் சூப்பர் மார்க்கெட் சென்று பொருள்களையெல்லாம் வாங்கி முடிப்பதற்குள் இரவு மணி எட்டு ஆகி விட்டது, இரவு உணவாக சரவணா பவனில் சாப்பிடுவதற்காக இருவரும் கையில் வாங்கிய பொருள்களுடன் சென்று தேவையானவற்றை வாங்கி சாப்பிட்டு விட்டு நான் முதலில் கைகளை அலம்பி கொண்டு வந்து உட்கார்ந்தேன் பின்னர் சிறிது நேரத்திற்கு பின் அவரும் கையலம்ப எழுந்து சென்றார், எனக்கு அடுத்த மேசையில் உட்கார்ந்திருந்தவர்களை நான் கவனிக்கவே இல்லை, என் கணவர்கை அலம்ப செல்வதற்கு முன்னால் அவனும் கை அலம்ப சென்று இருக்கிறான் போல, அவன் என் எதிரில் கைகளை துடைத்து கொண்டே வந்து அவனது மேசையில் மறுபடியும் உட்கார வந்து கொண்டிருந்த போது தற்செயலாக அவனை நான் பார்த்தேன், அவனுக்கு வயது முப்பதுக்குள் இருக்கும் என நினைக்கிறேன், என்னை பார்த்து கண் அடித்தான், அத்துடன் நில்லாது ஒரு வித சிரிப்பும் சிரித்தான், எனக்கு ஒன்றுமே புரியவில்லை, ஏன் என்றால் நான் அப்படிஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர் பார்க்கவில்லை, அவனுடன் ஒரு பெண் சாப்பிட்டு கொண்டிருந்தாள் அவனுடன் வந்தவள் போல இருக்கிறது, அவளது இருக்கையின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான், அந்த பெண் சாப்பிட்டு விட்டுகை அலம்ப எழுந்து போனாள் அவளது ஆஜானு பாகுவான் உயரமும் தோற்றமும் அவனுக்கு அவள் என்ன உறவாக இருக்க முடியும் என்று ஊகிக்க முடியவில்லை, ஒரு ஜீன் பான்ட்டும் மேலே குர்தாவும் அணிந்திருந்தாள் வயது முப்பதுக்கு குறைவாக தான் இருக்கும் என தோன்றியது, அவன் என்னை பார்த்து கண் அடித்ததால் நான் அவர்கள் யார் என்று பார்த்தேன், அதற்குள் என் கணவர் கை அலம்பிவிட்டு வந்து விட்டார், அவன் அதற்க்கு பின் என் பக்கம் திரும்பவே இல்லை.

இதற்க்கு முன்பு ஒரு முறை வேறு ஒரு சரவணா பவன் ஹோட்டலுக்கு மதிய உணவு சாப்பிட நானும் என் கணவரும் சென்றிருந்த போதும் கூட வேறு ஒருவன் அப்படிதான் என்னையே முறைத்து பார்த்து கொண்டே இருந்தான், என் கணவரிடம் நான் காண்பித்தேன், அப்போதும் அவன் என்னை முறைத்து பார்ப்பதை நிறுத்தவில்லை.

ஒரு முறை நானும் எனது குடும்ப நண்பரும் மதிய உணவிற்காக ஒரு ஹோட்டலுக்கு போனோம் அங்கே நாங்கள்
சாப்பிட வேண்டிய உணவு பொருட்களுக்கு ஆர்டர் எடுக்க வந்த ஒரு வாலிபன் அந்த ஹோடேலில் waiter ஆக வேலை பார்ப்பவன் என்னிடம் "இவர் அடிக்கடி வேறு வேறு பெண்களுடன் இங்கே வந்து சாப்பிடுவார், உங்களுக்கு தெரியுமா" என்று அந்த நண்பரின் எதிரிலேயே கேட்டான், அந்த நண்பருக்கு உள்ள வேறு பெண் நண்பர்களோ அல்லது அவரது மனைவியுடனோ அவர் அங்கு வருவது வழக்கமாம், பலருடன் வருவதை என்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருப்பானோ அல்லது பலருடன் பழக்கமுள்ளவர் என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு முன்னெச்சரிக்கை செய்தானோ என்று தெரியவில்லை.

"அம்முவாகிய நான்" என்ற பார்த்திபன் நடித்து வெளி வந்த திரைப்படத்தின் மூலம் தான் நான் இப்படி ஒரு கலாச்சாரம் தற்ப்போது நாட்டில் நடப்பில் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன், அந்த சினிமாவில் விபசாரம் செய்யும் பெண்களை அழைத்துக்
கொண்டு ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவது என்ற காட்சி உள்ளது, தற்போது நடை முறையில் இருந்து வரும் மோசமான கலாச்சாரம் என்பது எனக்கு தெரிய வந்தது, அந்த சினிமாவை பார்க்கும் போது அந்த காட்சியை பற்றி ஒன்றும் நினைக்க தோன்றவில்லை ஆனால் இது போன்ற ஹோடேலில் பார்த்தவர்களின் பார்வைகள் இந்த சினிமாவின் காட்சியை நினைவு படுத்தியது. இப்படி பட்டவர்களும் இந்த சமுதாயத்தில் நம்மோடு தான் வாழுகிறார்கள் என நினைக்கும் போது, பாதுகாப்பற்ற சுழல்உருவாகி கொண்டிருப்பது தெளிவாகிறது.

இரண்டு பேராக சேர்ந்து (ஆணும் பெண்ணும் ) ஹோட்டலுக்கு போய் சாப்பிடுபவர்கள் எல்லோருமே "அப்படிப்பட்டவர்களாகத்தான்" இருக்க முடியும் என்று நினைப்பது சந்தேக கண்ணோடு பார்ப்பது அவர்கள் சுதந்திரம் என்றே வைத்து கொண்டாலும், "கண் அடிப்பது" சைகை காண்பிப்பது என்பது எந்த
வித்ததில் சுதந்திரம்?

"ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பது இதில் நன்றாக தெரிகிறது, ஒருபாமரன் தவறுகள் செய்வது அறியாமை, படித்தவன் என்ற பெயருடன் இருக்கும் ஒருவன் செய்வது என்பது அவன் ஒரு படித்த காட்டு மிராண்டி அல்லது பெண்களை அவனது தாயையும் சகோதரிகளையும் கூட சந்தேக கண் கொண்டு பார்க்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்?

இந்த காலத்து பெண்கள் தான் இவர்களை போன்ற காட்டு மிராண்டித்
தனமானவர்களுக்கு சரியான பாடம் கற்று கொடுப்பவர்கள், நான் இன்றைய தலைமுறை பெண்களை நிச்சயம் பாராட்டுகிறேன், சரிக்கு சமம், என்ற நிலையில் அவர்களும் இது போன்ற ஆண்களுக்கு சரியான பதிலடி கொடுக்க கற்று கொள்கிறார்கள் கல்லூரிகளில் படிக்கும் போதே, இல்லையென்றால் பெண்களையெல்லாம் விபசார கண்ணோடு மட்டுமே பார்க்க தெரிந்தவர்களை மேற்கொள்வது சுலபமல்ல.

2/18/2009

சோதனைக்காலம்

அமெரிக்கா சென்று வேலை செய்து முன்னேறிய குடும்பங்கள் ஏராளம், கடல்கடந்து சென்று பணி புரிவது என்பது பழங்காலம் தொட்டு இருந்து வரும் பழக்கம், தமிழன் கால் பதிக்காத இடம் அவனியில் இல்லை, தொன்று தொட்டு வரும்பழக்கம் தானே, ஒவ்வொரு கால கட்டத்தில் சொந்த நாட்டிற்கு திரும்பும் நிலைஏற்படத்தான் செய்து இருக்கிறது, பர்மா அகதிகள், ரங்கூன் சென்றுதிரும்பியவர்கள், சிங்கபூரில் சம்பாதித்து விட்டு தாயகம் திரும்பியவர்கள், திரும்பாதவர்கள், அரபு நாடுகளில் வேலைசெய்வது என ஒவ்வொருகாலகட்டத்தில் ஒவ்வொரு நாட்டிற்கு அதிகமாக வேலை வாய்ப்பு பெற்றுபொருள் ஈட்ட தமிழ் நாட்டிலிருந்து மட்டும் அல்லாது இந்தியாவிலிருந்தும்சென்றுள்ளனர் என்பது வரலாறு.

தற்போது அமெரிக்காவிற்கு சென்று பொருள் ஈட்டுவது என்பது மென்பொருள்என்ற புதிய தொழில் துறை ஏற்ப்பட்ட பிறகு அமெரிக்காவிற்கு செல்லுபவர்களதுஎண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருந்தது, மேற் படிப்ப்பிற்க்கு செல்வதும்கடந்த ஐந்து ஆண்டுகளில் படி படியாக அதிகரித்து வந்தது, இதற்க்கு பலகாரணங்கள் இருப்பினும், அமெரிக்க அரசாங்கம், இந்தியாவிலிருந்துஅமெரிக்காவிற்கு போவோரின் எண்ணிக்கையை கவனித்து வந்தது, அப்படிபோவோரின் எண்ணிக்கையை குறைக்க பல சட்டங்கள் இட்டது, இருந்தும்எண்ணிக்கை அதிகமாகியதே தவிர குறைவதாக இல்லை, பெரும்பாலானஅமெரிக்கர்களுக்கு இவ்வாறு அயல் நாட்டவர் அவர்கள் நாட்டிற்கு அதிகம்வருவதால் தங்களுக்கு வேலை கிடைப்பதில் மிகவும் சிரமம் ஏற்ப்படுவதாகவும், பல அமெரிக்கர்கள் அயல் நாட்டவரின் வருகையால் வேறு சில பிரச்சினைகள்இருப்பதாகவும் கருதினர், இவர்களைபோல ஒத்த நோக்கம் கொண்ட பாரக்ஒபாமா தக்க சமயத்தில்அமெரிக்க மக்களின் முக்கிய பிரச்சினைகளை தானும்தனது அமைச்சர்களும் தீர்வு கிடைக்க வழி வகுப்போம் என்று அமெரிக்கமக்களிடம் மேடையில் பேசி ஒட்டு மொத்த அமெரிக்காவின் ஓட்டுகளும் தனக்குகிடைக்கவும் முதல் கறுப்பர் முதல் இளவயது தலைவர் இரு வேறு சமயங்களைசார்ந்த பெற்றோரை கொண்டவர் என்ற பல வித வேற்று கருத்துகள் இடையேவெற்றி பெற்று விட்டார்.

இப்போது பிரச்சினை அங்கு H1 b விசாவில் வேலை பார்க்கும் அத்தனை வெளிநாட்டவர்க்கும் வேலை பரி போகும் நிலைமை, அமெரிக்க அரசாங்கத்து financial support பெரும் ஒவ்வொரு நிறுவனமும் அமெரிக்கர்களை பணியில்அமர்த்தவேண்டும் என்னும் நிபந்தனையும் விதித்துள்ளதால், அமெரிக்கர்களுக்குவேலை வாய்ப்பு பெருகும் இந்தியாவிற்கு அந்நிய செலவாணி குறையும், பெரும்பாலோர் வேலை இழந்து நாடு திரும்ப வேண்டியது ஆகும், உள்நாட்டில்உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து வந்த வெளி நாட்டவர்களும்பெரும்பாலான வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கும் சத்யம் நிறுவனம் நடத்தியமோசடி ஒரு பொருளாதார விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் ஆச்சர்யம் ஒன்றும்இல்லை, இதனால் வெளி நாட்டு முதலீடுகள் தற்காலம் அதிக பட்சமாக குறையவாய்ப்பாகி விட்டது.

out sourcing என்ற வாய்ப்பையும் ஒபாமா துண்டித்து விட்டார், அமெரிக்கவருமானம் என்பது இனி இல்லை என்றே சொல்லும் அளவிற்கு ஒபமாவின்வருகையும் உலக பொருளாதார நெருக்கடிகளும் நிலை குலைய செய்யும்நிலையில், அடுத்து என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. எல்லோரும் 2008 மிகமோசமான வருடமாக இருக்கும் எனென்றால் 8 என்ற எண் வருவதால் என்றனர்ஆனால் வரப்போகிற காலங்கள் தான் மிக நெருக்கடியான காலமாக இருக்கபோகிறது என தோன்றுகிறது.

2/17/2009

எதிர்பாராத ஒரு பயண அனுபவம்.....2முதல் வெளி நாட்டு பயண அனுபவமும் அந்த நாட்டில் நான் கண்ட பெண்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அரபு முதலாளியின் இரண்டாவது மனைவியின் விருந்தாளியாக நான் தங்க வைக்கப்பட்டேன், அந்த அரபு பெண்ணை பார்த்தபோது நான் மெய் சிலிர்த்து போனேன் அத்தனை அழகு, அவருடைய அரண்மனை போன்ற வீடுகளை பார்த்து அசந்து போனேன், அவரின் வீட்டில் இருந்த பிருமாண்ட படுக்கை அறை என்னை திகைப்படைய செய்தது, கனவிலும் சினிமாவிலும் கற்பனைகளிலும் மட்டுமே காண கூடியவைகளை நேரில் பார்த்த போது நிச்சயம் நான் அதிஷ்டசாலி என திருப்தி பட்டு கொண்டேன்.

பிருமாண்ட அறை ஒன்றில் ஒரு பெரிய பியானோ அதன் மீது இரண்டு தென்னைமரங்கள், பொன்னிறத்தில், ஒவ்வொன்றின் எடையும் குறைத்தது நூறு கிலோ, அவை இரண்டும் சுத்த தங்கம் எனபது தெரியாமல் நான் பார்த்து கொண்டிருந்த போது, பியானோவை வாசித்து காண்பித்த அரபு முதலாளியின் அழகு மகள் சொன்னாள் என்னிடம் "இவை சுத்த தங்கம், கையில் எடுத்து பாரேன்" என்று, ஒரு பிரிட்டிஷ் நாட்டு பியானோ கலைஞ்சர் அந்த அரபு பெண்ணுக்கு பியானோ வாசிக்க கற்று கொடுக்கிறார், "பாலே" நடனம் கற்று கொடுக்க ஒரு ச்விஸ் (swiss) பெண்மணி வருகிறார், இப்படி ஒரு ராஜாவின் அரண்மனையை நேரில் நான் கண்டேன் என்று சொன்னால் மிகை ஆகாது.

அவருக்கு இருக்கும் பல அரண்மனை போன்ற வீடுகளையும் என்னை கூட்டிச்சென்று காண்பித்தார் என் கணவர், அந்த அரபுகாரரின் இரண்டாவது மனைவியின் வீட்டில் இருந்த வேலைகாரர்கள் அனைவரும் அதிகம் படித்தவர்கள், சமையற்காரர்கள் உலகத்தில் உள்ள "" தரம் சான்றிதழ் பெற்றவர்கள், அரபு முதலாளியின் இரண்டாம் மனைவி மிகவும் அன்பானவர், பணக்காரர்கள் என்றாலே மிகவும் பெருமை நிறைந்தவர்களாகவும் வேலைகாரர்களிடம் மிகவும் "கரார்" ஆகவும் இருப்பார்கள், ஆனால் இவர்கள் மிகவும் மாறுபட்டவர்களாக இருந்தது என்னை மேலும் ஆச்சர்யம் அடைய செய்தது, அவர்கள் அணியும் உடைக்கேர்ப்ப கார்கள், ஒரு உடையை ஒரு தரம் மட்டுமே அணிவது, கைகடியாரங்கள் சுவிஸ் நாட்டில் செய்து விற்ப்பனைக்கு வெளியே வருவதற்கு முன் இவர்களுக்கு வந்து விடுகிறது, கார்களும் அப்படித்தான், வேலைசெய்பவர்களுக்கு எத்தனை வசதிகள் செய்து கொடுத்து இருக்கிறார்......அத்துடன் ஒவ்வொரு வருடமும் ரமலான் பண்டிகையின் போது என்று மட்டும் நில்லாது எப்போதும் சன்மானங்கள் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் அவர்கள் அணியும் நகை விலை உயர்ந்த வாசனை திரவியங்கள், விலையேறப்பெற்ற உடைகள் காலணிகள் என்று எத்தனை விதமான சன்மானங்களை அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள்.........அவர்கள் வீட்டிலும் கம்பனிகளிலும் வேலை செய்பவர்களும் அவர்களது நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்ல வேண்டும், ஏனென்றால் எல்லா அரபு முதலாளிகளும் இவர்களை போல அன்புடனும் தாராளமாகவும் இருப்பதில்லை என்பதை எனது பிற்காலத்து அரபு நாட்டு பயணங்கள் நிரூபித்தன.......

எதிர்பாராத ஒரு பயண அனுபவம்.....1என் கணவருடன் 1983 ஆம் வருடம் டிசெம்பர் மாதம் முதன் முதலில் அரபு நாட்டுக்கு பம்பாயிலிருந்து விமானத்தில் பயணம் செய்தேன், அப்போதெல்லாம் சென்னையிலிருந்து அரபு நாடுகளுக்கு விமான வசதிகள் இல்லை, பம்பாயில் நாங்கள் குறைந்தது ஒன்றரை மாதங்கள் தங்க வேண்டியதாகிவிட்டது, ஏன் என்றால் அப்போதெல்லாம் நிறைய இளம் பெண்களை அரபு நாடுகளுக்கு கூட்டிச்சென்று, வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பலரை விபச்சார தொழில் ஈடுபடுத்தியதால் பல பெண்கள் துர்மரணம் அடைத்தனர், பலர் காணாமல் போனார்கள் என்பதால் நமது இந்திய அரசாங்கம் இருபத்து ஐந்து வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் அரபு நாடுகளுக்கு போக தடை விதித்திருந்ததால், சில அங்கீகாரங்கள் தலை நகர் டில்லியிலிருந்து கிடைத்த பின்னர் தான் போக முடியும் என்பதால் ஒன்றரை மாதங்கள் நாங்கள் இருவரும் பாம்பேயில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது, அந்த ஒன்றரை மாத காலம் முழுவதும் பம்பாயிலும் பூனாவிலும் உள்ள நண்பர்கள் சொந்தக்காரர்கள் ரோடுகள் ஹோட்டல்கள் என எல்லா இடங்களையும் சுற்றி பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. பூனாவில் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் பின்புறம் ' பிலிம் இனிச்டிடுட்' (film Institute) இருந்தது. என் கணவரின் விடுமுறை முடிந்து விட்டதால் என்ன செய்வதென தெரியாமல் இருந்தபோது அவர் வேலை செய்து வந்த அரபு நிறுவனத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்து சொன்னபோது, நிறுவனத்தின் சொந்தக்காரர் (அரபுகாரர்) தற்போது பம்பாயில் 'ஒபேராய்' சூட்டில் மனைவியுடன் தங்கியிருப்பதாக கிடைத்தது செய்தி, உடனே ஹோட்டலுக்கு என் கணவர் போன் செய்தார், ஹோடேலில் வரவேற்ப்பில் எனது கணவரின் சொந்தகார பெண் ஒருவர் வேலை செய்து வந்ததால், அரபு முதலாளியின் அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள எளிதில் முடிந்தது, அரபு முதலாளியின் உதவியாளர் அடுத்தநாள் வந்தால் முதலாளியை நேரில் பார்த்து பேச முடியும் என்று சொல்லி இருந்ததால் நாங்கள் இருவரும் அடுத்தநாள் 'ஒபேராய் சூட்டிற்கு' சென்று என் கணவரின் அரபு முதலாளியையும் அவரது மனைவியையும் நேரில் பார்த்து எங்களது பிரச்சினை பற்றி சொன்ன போது அவர் அதை பற்றி முன்பே நன்கு அறிந்திருக்க கூடும் என்று நினைக்கிறேன், தில்லியிலிருந்து ஒப்புதல் கிடைத்த பின்னர் வந்து வேலையை தொடர்ந்து செய்யும்படி கூறியதுடன் எங்களை அன்பாகவும் உபசரித்தார், நான் 'ஒபேராய் சூட்டை' பார்த்து மகிழ்ந்தேன், அரபு முதலாளி வெறும் ஒரு கம்பெனிக்கு மட்டும் முதலாளி இல்லை அவர் அவரது நாட்டின் அமைச்சரவையில் பிரதான அமைச்சரும், அந்த வருடத்திய 'அரபு பணக்காரர்களில்' இரண்டாவதாகவும் இருந்தவர், கொஞ்சமும் ஏற்ற தாழ்வின்றி எங்களை அவர் அன்புடன் உபசரித்ததும் எங்கள் பிரச்சினையை புரிந்து கொண்டதும் இன்னும் என் நினைவை விட்டு நீங்கவே இல்லை.

2/10/2009

மதர் - அன்னை ( 2 )


மதிய உணவை முடித்து விட்டு குழந்தைகளுடன்ஆசிரமத்திற்கு கூட்டி சென்றார், அங்கிருந்த சமாதியின் மூன்று பக்கங்களிலும் காண வந்தவர்கள் சம்மணம் போட்டு சிலர் கண்களை மூடியும் சிலர் கண்களை திறந்த படியும் அமர்ந்திருந்தனர், நானும் ஒரு இடத்தில்சென்று கண்களை மூடி சம்மணம் போட்டு அமர்ந்துகொண்டேன், குறைந்தது முக்கால் மணி நேரம் அப்படி அமர்ந்திருப்பேன் என்று நினைக்கிறேன், ஏதோ ஒரு மாற்றம் வித்தியாசமான அந்த அனுபவம் இதற்க்குமுன் நான் அனுபவித்தது கிடையாது, என் கணவரின் காதருகில் சென்று இந்த ஆசிரமம் யாருடையது இந்த சமாதி இங்கு எதற்கு கட்டப்பட்டது என்று கேள்விகளால் துளைத்தெடுதேன் அவரால் பதில் சொல்ல முடியவில்லை அல்லாமல் அங்கு யாரும் பேசக்கூடாது என்பது கட்டளை.

அங்கிருந்த புத்தகங்களில் சிலவற்றை வாங்கி கொண்டேன் அங்கிருந்த ஓவியங்களில் ஒரு வயதான பெண்ணின் உருவம், அவர்களை தான் "அன்னை" என்று கூறுகிறார்கள் என்று தெரிய வந்தது, என்கணவரிடம் மறுபடியும் பல நூறு கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தேன் அவரால் பயணம் முழுவதும் பதில்கள் சொல்ல தெரியவில்லை, அவருக்கு அந்த ஆசிரமம் இறுப்பது மட்டும் தான் தெரியும் அதை பற்றிய விவரங்கள் ஒன்று கூடதெரியவில்லை, தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை, வீட்டிற்க்கு வந்த அடுத்த நாள் முதலில் அந்த ஆசிரமத்தைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆவலுடன்வாங்கி வந்த புத்தகங்களை படித்தேன், தினமும் கண்களை மூடி சில மணிகள் உட்கார்ந்தேன், என்னில் ஏற்ப்பட்ட மாற்றங்களை என் அம்மா கவனித்துவந்திருக்கிறார், என் அம்மாவிடம் அன்னையை பற்றி சொன்னேன் அப்போதுஎன் அம்மா சொன்னார்( இப்போது அவர்கள் இல்லை) உன் முகம் தங்கம் போல பிரகாசமாக தெரிகிறது உன்னிடம் சொல்ல கூடாது என்று தான் நினைத்தேன்ஆனால் நீ இவ்வளவு சொன்ன பிறகு இதை உன்னிடம் சொல்லாமல் இருக்ககூடாது என்பதனால் சொன்னேன் என்றார், என் அடுத்த வீட்டுகாராருக்கு இதுஒன்றுமே தெரியாது அவரும் என்னை கேட்டார் உங்கள் முகம் இப்போது மிகவும் பிரகாசமாக தெரிகிறது, இது நிச்சயம் எந்த முக ஒப்பனைகளினாலும் ஏற்படாது, என்ன காரணம் என்று அதிசயப்பட்டார், அவருக்கு நாங்கள் பாண்டிச்சேரிபோனது கூட தெரியாது, ஏன் என்றால் விடியலில் கிளம்பி அதே நாள் மாலை ஏழு மணிக்குள் வீடு திரும்பி விட்டோம்.

அந்த ஹோட்டல் அறையில் தோன்றிய மூதாட்டியார் நிச்சயம் "அன்னை" தான் என்பது எனக்கு புரிந்தது, என்வாழ்க்கையில் ஏற்ப்பட்ட அதிசய மாற்றங்கள் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. இன்றுவரை அதிசயஅனுபவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

மதர் - அன்னை ( 1 )


அன்னை என்றவுடன் எனக்கு இறந்து பேரைத்தான் [ 1999 வரை ] தெரியும் பெற்ற அன்னை இரண்டாவது அன்னை" என்கிற பானுமதியம்மாவும் சொவ்க்கார் ஜானகியம்மா ரெங்காராவ் மற்றும் சந்திரபாபு சச்சு இவர்கள் நடித்த அற்புதமான கலைஞ்சர்களால் நடித்து இல்லை இல்லை வாழ்ந்து காட்டிய சினிமா. இந்த திரைப்படம் பற்றி புதுசா விமர்சிக்க ஒண்ணும் இல்லை, என்னன்னா எல்லார்க்கும் தெரிந்த ஒன்று என்பதால். மனதை விட்டு என்றும் அழியா கலைஞ்சர்களும் அவர்கள் நடித்த நடிப்பும் நெஞ்சில் நீங்கா இடம் பெரும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது, இந்த "அன்னை" திரைப்படமும் அப்படியொரு படம் தான்.

இந்த அன்னை திரை படத்தை பார்க்க, ( நான் பிறப்பதற்கு பல வருடங்களுக்குமுன்) என் அப்பா அம்மா இருவரும் திரைக்கு வந்தவுடன் பார்க்க போக , அப்போதுதான் திருமணம் ஆகி வந்திருந்த என் பெரியம்மாவையும் அழைத்து கொண்டு போக, திரைப்படத்தை பாரத்துவிட்டு வீட்டிற்கு வந்த என் பெரியம்மா என் அப்பாவிடம் பயங்கர சண்டை போட்டாராம், அதற்க்கு காரணம் இன்று நினைத்தாலும் இந்த மாதிரி பெண்களுக்குஎங்கிருந்துதான் இத்தனை சதித்திட்டம் தீட்டும் அறிவு கிடைக்கிறதோ என்று வியக்க வைக்கிறது, என் அப்பா என் பெரியம்மாவை "அன்னை" படத்தை பார்க்க வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டு கூட்டி சென்றதாகவும் அது ஏன் என்றால் அவர்களுக்கு குழந்தை பிறக்க வைப்பு இல்லை என்று மருத்துவர் கூறி இருப்பதாகவும் இதை சுட்டி காண்பிக்கவே அந்த படத்தை பார்க்க வைத்ததாகவும் காரணம் காட்டி சண்டை போட்டு விட்டு தானிகுடித்தானம் போனாராம் பெரியம்மா. இத்தனைக்கும் பெரியம்மா என் அப்பாவின் அம்மா வழி மாமாவின் முறை பெண்தான்.

பெரியம்மாவிற்கு அப்பா இல்லை இவர்கள் வீட்டிற்க்கு மூத்தவர் இரண்டு தங்கைகளும் இரண்டு தம்பிகளும் படித்துக்கொண்டு இருந்தனர், அவர்கள்அம்மா ஆரம்ப பாட பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார், தனது தம்பி தங்கைகளை தன் வீட்டில் கூட்டி வந்து தம்பிகளுக்கு வேலை வாங்கிவைத்து தங்கைகளுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்கிற திட்டம் மனதில் இருந்துள்ளது இதை எப்படி நிறைவேற்றுவது என்று யோசித்து கொண்டிருக்கையில் இந்த "அன்னை" சினிமாவை பார்க்க அழைத்து கொண்டுபோக அதை ஒரு விபரீதமான காரணமாக காண்பித்து சண்டை போட்டு தனிக்குடித்தனம் சென்ற அந்தபெண்ணின் "மாஸ்டர் மைன்ட்" திட்டத்தை என்னவென்று சொல்லுவது....

நான் இங்கு சொல்ல வந்த "அன்னை" என் தகப்பனாரின் மறைவிற்குப்பின் சிலநாட்களில் என் மன மாற்றத்திற்காக பாண்டிச்சேரியில் உள்ள அரவிந்தரின் ஆசிரமத்திற்கு என் கணவர் முதல் முறையாக அழைத்துக்கொண்டு போன போது
எனக்கு அரவிந்தர் யார் எதற்காக இந்த ஆசிரமம் என்று ஒன்றும் கேட்காமலேயே ( என் கணவர் என்னை எங்கு எதற்கு அழைத்து கொண்டு போகிறார் என்பதே அறியாமல் போனதால்), அந்த ஆசிரமும் பாண்டிச்சேரியும் எனக்குபார்க்க பார்க்க மிகவும் பிடித்து போனது,

சென்னையின்
ஜன சந்தடியில் சிதைந்துபோயிருந்த என் மன நிலை எப்போதுமே நினைப்பதுண்டு மனிதர்களும்வாகனங்களும் இல்லாத அழகான அமைதியான இடத்தில் வாழ வேண்டும்என்று, பாண்டிச்சேரியில் போனவுடன் ஒரு சைவ ஹோட்டெலில் அறை ஒன்றை எடுத்து என் குழந்தைகளுடன் பயண களைப்பு தீர ஓய்வு எடுத்து கொண்டோம், என் கணவர் அலுவலக வேலையாக ஒருவரை சந்திக்க சென்றுவிட்டு மத்திய சாப்பாட்டிற்கு தான் அறைக்கு திரும்பினார், என் குழந்தைகள் இருவரும் அங்கிருந்த பூனைக்குட்டிகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தனர், நான் கண் அயர்ந்து விட்டேன்,

அதை கனவு என்று சொல்லவும் முடியவில்லை ஒரு அருமையான அனுபவமாக இருந்தது என்னிடம் ஒரு மூதாட்டி சொல்லுகிறார் "நீ ஒரு எல்லை கோட்டிற்குள் வந்துவிட்டாய் இனிமேல் உன்னை நீ மிகவும் தூய்மை படுத்திக்கொள்ள வேண்டும், இங்கிருந்து நீ திரும்பி போகும் போது அதுஎன்னவென்று நீ புரிந்து கொள்வாய், இனிமேல் உன் வாழ்க்கை பல அறிய மாற்றங்களை காணும் அப்போது என்னை யார் என்று நீ அறிந்து கொள்ள முயலுவாய், அறிந்து கொள்வாய்."

கண்களை விழித்து பார்த்தால் என் குழந்தைகள் இருவரும் விளையாடி கொண்டு இருகின்றனர், எனக்கு ஒன்றுமே புரியவில்லை, முகத்தை அலம்பி விட்டு கைகடியாரத்தில் பார்த்தபோது மணி மதியம் ஒன்று ........தொடரும்
"

2/07/2009

நடிகர் நாகேஷ் - அஞ்சலி


திரு நாகேஷ் அவர்களின் மறைவு கேட்டு அதிர்ச்சி அடைந்தேன், அவருக்கு அஞ்சலி செலுத்த தாமதம் ஆனதும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள சிறிது அவகாசம் தேவைப்பட்டது. அவரது திறமைக்கு நிறைய படங்கள் இருந்தாலும் மனதில் அவரை நினைத்தவுடன் கண் முன் நிற்ப்பது முதலில் "சர்வர் சுந்தரம்" தான். உணர்ச்சிகளின் உச்சிக்கு கொண்டு செல்லும் அவரது குணசித்திர நடிப்பு, இந்த படத்தில் பல சிறப்புகள் இருந்தாலும் அவரது நடன திறமையை ஒரு பாட்டில் பார்க்க முடியும், அவருக்கு நடன வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால் மைகேல் ஜாக்சன் பிரபு தேவா இருவரையும் நிச்சயம் தோற்க்கடிதிருப்பார், அத்தனை நடன திறமை கொண்டவர்.

எனது அப்பாவின் தம்பியுடன் தென்னக ரயிலில் குமாஸ்தாவாக பணி புரிந்தவர், எனது சித்தப்பா ( தற்போது உயிருடன் இல்லை ) கர்நாடக இசையில் பயிற்ச்சி பெற்றவர், நல்ல குரல் வளம் கொண்டவர், அவர்கள் அலுவலகத்தில் அமெச்சூர் நாடகங்கள் நடத்தப்படுவது உண்டு, அவ்வாறு நடத்தப்பட்ட "சுசீலா" என்ற நாடகம் பெரிய அளவில் பேசப்பட்டது அதில் திரு நாகேஷ் அவர்கள் நடித்த வேடத்திற்கு என் சித்தப்பா பின்னணி பாடியதை எங்களிடம் சொல்லுவது உண்டு.

ஒரு முறை . வி. எம். இல் திரு எஸ் . பீ. முத்துராமன் அவர்களின் இயக்கத்தில் "நிம்மதி நிம்மதி உங்கள் சாயிஸ்" என்ற தொலைக்காட்சி தொடருக்காக திரு நாகேஷ் அவர்கள் நடித்து கொண்டிருந்தபோது பார்த்தேன், ஒரு நல்ல மனிதர், வாழ்கையின் உயர்வு தாழ்வுகளை நன்கு அறிந்த பண்பட்ட மனித நேயம் மிக்கவர்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் அதிகமான பண நஷ்டத்தில் அவதிப்பட்டு நிறைய குடித்து குடிக்கு அடிமையாகி உயிரிழந்து விடுவார் என்ற நிலையில் செய்திகள் வெளிவந்தன, தெய்வாதீனமாக அவர் உடல் நலம் தேறி சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்து பின்னர் திரு கமலஹாசன் அவர்கள் கொடுத்த பட வாய்ப்பு மூலம் மீண்டும் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து மறுபடியும் சிறந்த நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்தார்.

மற்றவர்களை மகிச்சியடைய வைக்கும் நகைச்சுவை நடிகர்கள் வாழ்க்கை என்றுமே சோகத்தில் தான் இருந்து வந்துள்ளது இதற்க்கு பல நடிகர்கள் உதாரணம் சொல்லலாம், திரு என்.எஸ்.கே. அவர்கள் திரு சந்திரபாபு அவர்கள் திரு சுருளி ராஜன் திரு வி. கே. ராமசாமி அவர்கள் சார்லி சாப்ளின் இன்னும் பல பேர் வரிசையில் திரு நாகேஷின் வாழ்விலும் சோகம் விட்டு வைக்க தவறவில்லை, அவரது மகன் ஆனந்தபாபு அவரும் ஒரு நல்ல நடனமாடக்கூடியவர் நடிகர் ஆனால் அவரும் நடிப்பில் புகழ் பெறாமல் போனது துரதிஷ்டவசமானது.

ஒரு நல்ல கலைஞ்சன் என்று மக்களிடையே அங்கீகாரம் கிடைத்திருந்தாலும் அவரது நடிப்பு திறமைக்கு ஒரு அவார்டும் கொடுத்து கௌரவப்படுத்தவில்லை என்பது என்னை போன்ற அவரது ரசிகர்களின் ஆதங்கமாக இருப்பது நியாயமே.

அவர் மறைந்தாலும் அவரது புகழ் மறையாது இன்னும் வரும் தலைமுறைகளும் பார்த்து ரசிக்கும் ஒரு முன்னோடி கலைஞனாக என்றென்றும் அவர் மக்கள் மனங்களில் வாழ்வார் என்பது உறுதி.

அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

சினிமா உலகத்தில் புகழோடு வாழ்ந்து பலர் மறைந்திருந்தாலும் பெரும்பாலானோரை சினிமா உலகம் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கின்றது என்பது மறைந்திருக்கும் பெரிய உண்மை, எத்தனை பெரிய ஜாம்பவான்களையும் இருக்குமிடம் தெரியாமல் ஆக்கி விட்டது இந்த சினிமா உலகம், ஒரு காலத்தில் ஓஹோ என்று கொடி கட்டி இருந்தவர் வாழ்ந்த இடம் தெரியாமல் ஆக்கியுள்ளது இந்த சினிமா உலகம்.

ஒரு புறத்தில் பலரை மகிழ்ச்சியடைய செய்யும் இயந்திரமாக இருந்தாலும் அதன் பின்னணியில் எத்தனை பேரின் கண்ணீர் !!!!! எத்தனை பேரின் வேதனைகள் !!!!!......அது ஒரு மாய உலகம்.......சிலரை உயர தூக்கி கிழே எறிந்து விட்டிருக்கிறது சிலரை கீழிருந்து மேலே தூக்கி விட்டிருக்கிறது, விட்டில் பூச்சிகளாய் எத்தனை எத்தனை பேர் அதன் பள பளப்பில் மயங்கி விழுந்து மாண்டனர் !!!!!!!!....கதைகள் ஏராளம் உண்டு அவை சொல்லப்படாத வேதனை கதைகள் !!!!!!!!!!