Translate

1/11/2009

சித்தி

என் அப்பாவின் தம்பியின் மனைவி, எனக்கு சித்தி, வினோத குணம் கொண்டவர், என் சித்தி கல்யாணம் ஆகி வரும்போது எனக்கு பத்து வயது இருக்கும் என நினைக்கிறேன், அப்போதெல்லாம் அவ்வளவாக கடுமையாக நடந்து கொண்டது கிடையாது, என் சித்தப்பா வேலைக்குப் போகும்போதெல்லாம், என் பெரியப்பா, (என் அப்பாவின் மூத்த சகோதரர் ) வீட்டில் சித்தியை கொண்டு விட்டு விட்டுசெல்வது வழக்கம், என் பெரியம்மாவிற்கு என் அப்பாவையும் என்னையும் பிடிக்காது. பிறகு என் சித்தியின் மாற்றம் சகிக்க முடியாமல் போனது, என் சித்தப்பாவிற்க்கும் கூட, அவர்கள் குடும்பத்தில் நிம்மதி பறி போக என் பெரியம்மவின் தீய உபதேசம் தான் காராணமாகும்.

புதியதாக கல்யாணம் ஆகி வீட்டுக்கு வருபவர்களுக்கு தவரான போதனைசெய்வதும் அதை கேட்டு அதன் படி நடப்பதும் தவறு, அதனால் குடும்பம் கலைந்து விடுவதோடு நிம்மதி குலைந்து விடும்.